இது ஒரு தியானம். இந்த தியானத்தை சத்குரு மதுரையில் நடந்த சத்குருவுடன் மூன்று நாட்கள் வகுப்பில் அறிமுகப்படுத்தினார். இந்த தியானம் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் மற்றும் உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் உடலுடனும், மனதுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் வாழ்க்கையில் இத்தனை போராட்டமும். எல்லையுடைய உங்கள் உடலுடனும், மனதுடனும் நீங்கள் அடையாளம் கொள்ளாமல் இருந்தால் உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்க முடியும். அப்போது அனைத்து குருமார்களின் அருளும், சத்குருவின் அருளும் உங்களுடன் இருக்கும். உங்கள் வாழ்க்கை நிறைந்த அருளுடனும், முயற்சி இல்லாமலும் நடக்கும்.

ஈஷா கிரியா - பகுதி 1

ஈஷா கிரியா - பகுதி 2

தியானத்திற்கான குறிப்புகள்:

கண்களை மூடி, கால்களை குறுக்காக வைத்து கிழக்கே பார்த்து அமரவும். உள்ளங்கைகளை மேல் முகமாக வைத்து, தொடைகளின் மேல் வைக்கவும். தலை மேல் முகமாக இருக்க வேண்டும். உங்கள் புருவமத்தியில் லேசான கவனம் இருக்க வேண்டும்.

இந்த தியானம் மூன்று நிலைகளில் நடக்கும்

நிலை ஒன்று:

  • உள்மூச்சும் வெளிமூச்சும் மென்மையாக, மெதுவாக இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு உள்மூச்சின் போதும் மனதளவில், ‘நான் இந்த உடல் அல்ல’ எனக் கூறி, அந்த எண்ணம் இருக்கும் காலம் வரை உள்மூச்சு செய்யவும்.
  • ஒவ்வொரு வெளிமூச்சின் போதும் மனதளவில், ‘நான் இந்த மனமும் அல்ல’ எனக் கூறி, அந்த எண்ணம் இருக்கும் காலம் வரை வெளிமூச்சு செய்யவும்.
    (மூச்சு எடுப்பதோ, விடுவதோ இரு மூக்குத் துவாரங்களிலும் சேர்ந்தார்போல் நடக்க வேண்டும்)

மூச்சு இந்த வரைபடத்தைப் போன்று இருக்க வேண்டும்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Isha Kriya

இதை ஏழு முதல் பதினோரு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் (தங்கள் முன்னால் கடிகாரம் வைத்துக் கொள்ளலாம்).

நிலை இரண்டு:

வாய் முழுமையாக திறந்து ‘ஆ’ (AA) சப்தம் உச்சரிக்கவும். இந்த சப்தம் அடிவயிற்றிலிருந்து எழவேண்டும். சப்தமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதிர்வு உணரும் அளவிற்கு சப்தமாக செய்ய வேண்டும். வாய் முழுமையாக திறந்து, மூச்சு முழுவதுமாக வெளியேறும் வரை உச்சரிக்கவும். இந்த சப்தத்தை 7 முறை உச்சரிக்கவும்.

நிலை மூன்று:

Isha Kriya

முகத்தை மேல் முகமாக வைத்து, புருவ மத்தியில் கவனம் செலுத்தவும். இந்நிலையில் ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வரை இருக்கவும்.

ஒருநாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொரு முறையும் பன்னிரண்டு நிமிடங்கள் வீதம், ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறை 90 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவர வேண்டும். இதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இது குருவிற்கு நீங்கள் அளிக்கக் கூடிய குருதட்சணையாகும்.

இவையனைத்தும் சேர்ந்து மொத்தம் பன்னிரெண்டிலிருந்து பதினெட்டு நிமிடம் ஆகும். தேவையிருந்தால் இன்னும் சற்று அதிகநேரம் அமரலாம்.

உங்கள் உடலளவிலோ அல்லது மனதளவிலோ எது நடந்தாலும் கவனம் கொடுக்காமல் வெறுமனே அமர்ந்திருங்கள். இந்த பயிற்சி செய்யும்போது இடையே நிறுத்தக்கூடாது. ஏனெனில் சக்திகள் ஒருங்கிணைவதில் பாதிப்பு ஏற்படலாம்.

யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியை செய்ய முடியும். அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் அனுபவிக்கலாம். எந்த குறிப்பையும் மாற்றாமல் அப்படியே பின்பற்றி செய்ய வேண்டும். இந்த கிரியா மிக எளிமையானது, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது.

பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலும் 'நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனமும் அல்ல' என்பதை ஒரு நாளின் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் இந்த பயிற்சியை முதல் 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஒருநாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொரு முறையும் பன்னிரண்டு நிமிடங்கள் வீதம், ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறை 90 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவர வேண்டும். இதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இது குருவிற்கு நீங்கள் அளிக்கக் கூடிய குருதட்சணையாகும்.

தியானத்தின் பயன்கள்:

இந்த தியானத்தின் நோக்கமே உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் ஒரு இடைவெளி உருவாக்குவதுதான். இந்த உலகிலுள்ள பாதிப்புகள் எல்லாம் எங்கே இருக்கிறது? உங்கள் மனதில் தான். உங்கள் மனதிலிருந்து உங்களை தூரப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், பாதிப்புகள் அங்கேயே முடிந்துவிடுகிறது. நீங்கள் தினமும் தியானம் செய்து வந்தால், ஒரு நாள் நீங்கள் கண் திறந்து பார்க்கையில் நீங்கள் இங்கேயும், உங்கள் மனம் அங்கேயும் இருக்கும்.

அப்படியென்றால் உங்களுடைய கர்ம மூட்டைகள் தள்ளி வைக்கப்படுகின்றன என்று அர்த்தம். இப்போது அந்த கர்மப் பதிவுகள் உங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. மேலும் இந்த தியானத்தின்போது பராமரிப்பு மையமான மணிப்பூரகா சக்கரம் தூண்டப்படுகிறது. எனவே ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவை பெறமுடியும். வாழ்வே ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.

குறிப்பு: யார் வேண்டுமானாலும் இந்தக் கிரியாவை மற்றவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கலாம். இதற்கான இலவச ஆசிரியர் பயிற்சி வகுப்பு விரைவில் ஈஷாவால் பல நகரங்களில் நடத்தப்பட உள்ளது.