சத்குருவுடன் கடந்த சில வாரங்கள்...
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இன்னும் விலகாத நிலையில், சத்குரு தனது ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்தில் சத்குரு பங்கேற்ற நிகழ்வுகளின் ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது!

சத்குருவுடன் ஆனந்த சங்கமம்
கடந்த ஜூலை 25ம் தேதி சத்குருவுடன் ஆனந்த சங்கமம் என்ற பெயரில் தமிழ் சத்சங்கத்தை சத்குரு வழங்கினார். தமிழ் மக்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இந்த சத்சங்கத்தில் ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் களரிப்பயட்டு மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியோடு சத்குருவின் அருளுரையும் அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியில் நேரலை மூலமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு சத்குருவின் அருளைப் பெற்றனர்
குரு பௌர்ணமி மற்றும் "முழு நிலவில் அருள் மடியில்" சத்சங்கம்
கடந்த ஜூலை 23ம் தேதி மாலை, ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் திறன் மிகுந்த பாரம்பரிய நடனம், பாடல் மற்றும் களரிப்பயட்டு படைப்போடு அன்றைய குரு பௌர்ணமி சத்சங்கம் துவங்கியது. பாரம்பரிய கலைகளை மக்களின் வாழ்வில் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசி, 'புராஜெக்ட் சமஸ்கிருதி'(Project Samskriti) திட்டத்தை சத்குரு துவக்கி வைத்தார். இணையவழியில் பாரம்பரிய கலைகளை அனைவரும் பயில்வதற்கு புராஜெக்ட் சமஸ்கிருதி ஒரு வாய்ப்பாக அமையும். சத்சங்கத்தின் பிற்பகுதியில், சத்குரு அனைவரையும் சக்தி வாய்ந்த தியானத்தில் வழிநடத்த, அன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது.
சத்குருவுடன் யந்திர வைபவம்
பைரவி யந்திரம் மற்றும் அவிக்ன யந்திரம் வடிவில் தேவியை மக்கள் தங்கள் இல்லத்துக்கு எடுத்து செல்வதன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூழலில் வாழ்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த யந்திரங்கள் லிங்கபைரவியின் வாழும் வடிவமாக, அவளின் சக்தி வாய்ந்த சந்நிதானத்துக்கான ஒரு நுழைவாயிலாக அமைந்துள்ளன. ஜூலை 24ல் நிகழ்ந்த யந்திர வைபவத்தில் சக்தி வாய்ந்த செயல்முறையை பங்கேற்றவர்களுக்கு வழங்கிய சத்குரு, "நீங்கள் பைரவி தேவியை உங்களுக்கும் மேலாக பாவித்தால், அவள் இந்த வாழ்விலும் அதற்கு பின்னரும் உங்களை சிரமமின்றி வழி நடத்துவாள்," என்றார்.
"ஓபன் ஹவுஸ் வித் சத்குரு"
புதிதாக அறிமுகமாகி மிக விரைவாக பிரபலமடைந்துள்ள ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில் நிகழ்ந்த சத்குருவின் உரையாடல் நிகழ்ச்சியை கேட்க உலகெங்கிலும் உள்ள 72 நாடுகளிலிருந்து 30,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைனில் இணைந்தனர். கர்நாடகாவை சேர்ந்த விஷ்வவாணி கிளப் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை விஷ்வவாணி டெய்லி பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் விஷ்வேஸ்வர் பட் முன்னிருந்து நடத்தி வைத்தார். இந்த உரையாடல் பயம், கோபம், ஆயுர்வேதம், சமூக ஊடக துன்புறுத்தல் மற்றும் சூழலியல் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளை குறித்தும் இருந்தது.
ஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் - உலக சாதனை படைத்த @SadhguruJV
அரசியல், சினிமா பிரபலங்களும் பங்கேற்பு #IshaFoundation #Sadhguru #ClubHouse @ishafoundation https://t.co/9D6QffIqT6
Subscribe
சத்குருவுடன் மைக்கேல் மோ கலந்துரையாடல்
'குளோபல் சிலிக்கான் வேலி' என்ற பிரபலமான முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கேல் மோ அவர்கள் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிக்கையின் நிதி ஆய்வாளருக்கான "பெஸ்ட் ஆன் தி ஸ்ட்ரீட்" என்ற விருதை பெற்றுள்ளார். சத்குருவுடன் அவர் நிகழ்த்திய உரையாடலின் சாராம்சம் தொழில் முனைவு பற்றியதாக அமைந்திருந்தது. ஒருவரை எது யோகியாக்குகிறது, தொழில்முனைவோர்கள் பயத்தை எவ்வாறு கடந்து செல்வது, மேலும் மக்களால் நேசிக்கப்படுவதன் இரகசியம் ஆகியவை குறித்து மைக்கேல் சத்குருவிடம் கேள்விகளை முன்வைத்தார்.
Michael, wonderful to speak with you on this occasion. The most critical work for us is to raise Human Consciousness- so that we employ our competence, capability & intelligence in a Conscious manner for the wellbeing of all Life. Join us in making this happen. –Sg @michaelmoe https://t.co/LvdEuCRiS0
— Sadhguru (@SadhguruJV) July 30, 2021
நாக பஞ்சமியில் சத்குரு தரிசனம்
கடந்த (ஆகஸ்ட்) 13ம் தேதி நாக பஞ்சமி தினத்தை முன்னிட்டு ஆதியோகி முன்பாக ஒரு சிறப்பு தரிசனத்தை சத்குரு வழங்கினார். நாக பஞ்சமி தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்த சத்குரு, இந்நாளை நம் உள்நிலை வளர்ச்சிக்கு எவ்விதத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் கூறினார். சத்குருவால் வழிநடத்தப்பட்ட சக்திமிக்க தியானத்துடன் ஆதியோகி திவ்ய தரிசனமும் அங்கே அரங்கேறியது. சமூக வலைதள நேரலையில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்
சத்குருவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தைக் கூறி, நம்மிடையே சவாலாக உள்ள கொரோனா வைரஸை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு நாம் செய்ய வேண்டியது குறித்தும், நம் தேசத்தின் மண்வளத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் சத்குருவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி அமைந்திருந்தது.
மேலும், சுதந்திர தினத்தன்று ஆதியோகி முன்பாக நம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சத்குரு உரையாற்றினார். அப்போது பசியில்லாத தேசமாக இந்தியாவை மாற்ற வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
ஈஷா சார்பில் சுதந்திர தின விழா ஆதியோகி முன்பு இன்று நடைபெற்றது. இதில் சத்குரு பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.#IndiaAt75 #independenceday #சுதந்திரதினம் #Bharat #IshaYogaCenter @news7tamil pic.twitter.com/XKT4rn9QOA
— IshaFoundation Tamil (@IshaTamil) August 15, 2021
லண்டனில் இந்திய உலகளாவிய மன்றத்தில் (India Global Forum) சத்குரு
இந்திய உலகளாவிய மன்றத்தின் 2021ம் பதிப்பின் இணையவழி நிகழ்வில், சத்குருவுடன் பிபிசி-யின் தொகுப்பாளர் பென் தாம்ஸன் உரையாடினார். வளம் பேணுதல், சூழலியல் மற்றும் எல்லையற்று நுகரும் தன்மை ஆகியவற்றைப் பற்றிய பென்னின் கேள்விகளோடு இந்த உரையாடல் துவங்கியது. அத்தனைக்கும் ஆசைப்படுவது என்ற தன்னுடைய தனித்துவமான கண்ணோட்டத்தை சத்குரு பகிர்ந்து கொண்டு, அதிலுள்ள நல்வாய்ப்பினை விளக்கினார்.
அமெரிக்காவில் உள்ள ஈஷா யோக மையத்தில் "குருவின் மடியில்" நிகழ்வு
அமெரிக்காவின் டென்னசியிலுள்ள ஈஷா யோக மையத்தில், தியான அன்பர்களுக்காக ஜூலை 3ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் நிகழ்வில், "குருவின் மடியில்" என்பதன் உண்மையான அர்த்தம் பற்றி சத்குரு பேசினார். மேலும், இந்தவொரு அம்சத்தை வாழ்வில் ஒருவர் தொடாமல் இருந்தால், அவர் வெற்றி-தோல்வி இரண்டாலும் துன்புறுபவராக இருப்பார் என சத்குரு விளக்கினார். கேள்வி-பதில் அமர்வாக நிகழ்ந்த இந்த நிகழ்வு சத்குருவின் இயல்பான நகைச்சுவை மற்றும் ஞானத்தோடு கூடிய சுவாரசியமான கதைகள் பல நிறைந்ததாக இருந்தது. வரவிருக்கும் காலபைரவ பிரதிஷ்டை குறித்த கேள்வி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.
சத்குரு - "தி ஸ்கூல் ஆப் கிரேட்னஸ்" என்ற வலையொலியில்
ஒரு பிரபலமான எழுத்தாளரும் தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான லூயிஸ் ஹவ்ஸ் கடந்த ஜூலை 8ம் தேதி வலையொலி மூலம் சத்குருவுடன் உரையாடினார். அவர் சத்குருவிடம் கர்மா, அகங்காரம் மற்றும் குறிக்கோள் பற்றிய கேள்விகளை முன்வைத்தார். மிக ஆழமாக சென்ற இந்த உரையாடலின் கடைசி கேள்வியாக, "சத்குரு, இந்த உலகில் நீங்கள் விட்டுச்செல்ல விரும்பும் மூன்று உண்மைகள் யாவை?" என்று வினவினார். ஒரு கணமும் தாமதிக்காத சத்குரு சட்டென்று, "அனைவரும் வாயை மூடுங்கள், பாருங்கள், கவனம் கொள்ளுங்கள்! இதை நீங்கள் செய்தால் நான் என்னவெல்லாம் அறிந்திருக்கிறேனோ, அதை நீங்களும் அறிய முடியும்" என பதிலுரைத்தார்.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியின் "ஆபீஸ் ஹவர்ஸ் வித் டேவிட் மெல்ட்ஸர்" நிகழ்ச்சியில் சத்குரு...
லீ ஸ்டீன்பெர்க் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஸ்போர்ட்ஸ் 1 மார்க்கெட்டிங்கின் இணை நிறுவனர் டேவிட் மெல்ட்ஸர் சத்குருவுடன் இந்த உரையாடலில் ஈடுபட்டார். சத்குரு தனக்கே உரிய பாணியில் மகிழ்ச்சி மீதான நாட்டம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலுரைத்தார், "நாட்டம் என்பது நமக்கு வெளியே உள்ளவற்றைப் பற்றியது. ஆனால், நீங்கள் எங்காவது காற்றில் மகிழ்ச்சி மிதந்து கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறீர்களா? இல்லை, மகிழ்ச்சி உங்களுக்குள்தான் நிகழ்கிறது."
காதல், உறவுகள் & ஈஷா யோகா
யூடியூபர் அலெக்ஸாண்டர் கோர்மாண்ட் உடனான உரையாடலின் தலைப்பு "காதல் மற்றும் உறவுகள்" என்பதாக அமைந்தது. "காதல் என்பது நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைப் பெறுவது அல்ல. உங்களை நீங்களே இழப்பதற்கு அது ஒரு வாய்ப்பு" என்றார் சத்குரு. சத்குருவின் அறிவு எங்கிருந்து வருகிறது என்று அலெக்ஸாண்டர் கேட்டபோது, "என் தலையில் எந்த அறிவையும் நான் சேகரித்து வைக்கவில்லை. என் உணர்வை நான் கூர்மையாக வைத்திருக்கிறேன், அவ்வளவுதான்!" என்றார் சத்குரு.