கிவ் இந்தியா மூலம் ஈஷா வித்யாவிற்கு வழங்கலாம்!

பல விஷயங்களில் குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஈஷா வித்யா பள்ளி மாணவன் ஒருவன் செய்த ஒரு செயல், பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தினை உணர்த்துகிறது...
 

பல விஷயங்களில் குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஈஷா வித்யா பள்ளி மாணவன் ஒருவன் செய்த ஒரு செயல், பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தினை உணர்த்துகிறது...

பலருக்கும் பலவிதமான செயல்களின் மூலம் சந்தோஷம் கிடைக்கிறது. சிலர் ஆடுவதிலும் பாடுவதிலும் சந்தோஷம் காண்கிறார்கள். சிலர் உண்பதிலும் உறங்குவதிலும் சந்தோஷம் காண்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் மனதின் மேம்போக்கான சந்தோஷங்களாகவே உணரப்படுகின்றன. நாம் செய்யும் செயலினால் அடுத்தவர் சந்தோஷமடைந்தால், அந்த சந்தோஷ முகத்திற்கு காரணமாக நம் செயல் அமைந்தால், அப்போது கிடைக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர வேண்டுமானால் ஈஷா வித்யா பள்ளி மாணவன் செந்தமிழனைப் போல் நீங்களும் ஒரு முறை அதனை உணர்ந்து பார்க்க வேண்டும்!

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

என்ற குறளில் வள்ளுவர், தான் வறுமையிலிருந்தாலும் பிறருக்கு வழங்கும் பண்பு எவ்வளவு உயர்ந்தது என்பதை எடுத்துரைக்கிறார்.

செந்தமிழன்... ஆம்! பிறரது கல்வி உதவித் தொகையினால் ஈஷா வித்யா பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவன்தான்! செந்தமிழனுடைய குடும்பம் சற்றே பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. அவன் புத்தாடை அணிய வேண்டுமானால், தீபாவளி, பிறந்தநாள் என காத்திருக்க வேண்டும். இத்தகைய கடினமான பொருளாதார சூழலில் வளரும் இக்குழந்தைக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு யோசனை தோன்றியது.

அக்டோபர் 5ம் தேதிய செந்தமிழனுடைய பிறந்தநாள்! அன்று தனக்கு புத்தாடை கிடைக்குமென்ற ஆர்வத்திலிருந்தான். ஆனால், அவனுக்குத் தன்னையும்விட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தன்னுடன் பயில்வதை பற்றிய சிந்தனை உதித்தது. தனக்கு வருடத்திற்கு இருமுறை மட்டுமே கிடைக்கும் புத்தாடையை தன் சக மாணவனுக்குக் கொடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதைத் தன் தந்தையிடம் சொல்ல, அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அந்த உடையை சக மாணவனுக்கு மனமாற, முழு மகிழ்ச்சியுடன் வழங்கினான் செந்தமிழன். அந்த குழந்தைகளின் முகத்தில் தெரிக்கும் சந்தோஷத்தினை பாருங்கள்! கொடுத்ததில் ஒரு குழந்தைக்கு மகிழ்ச்சி, பெற்றதில் மற்றொரு குழந்தைக்கு மகிழ்ச்சி, இந்தக் காட்சியைக் கண்ட ஆசிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி!

கிவ் இந்தியா மூலம் ஈஷா வித்யாவிற்கு வழங்கலாம்!, Give india moolam isha vidhyavirku vazhangalam

கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்கலாம்!

இதுபோன்ற ஏழைப் பிள்ளைகள், விவசாயிகளின் குழந்தைகள் கல்வியறிவு பெற நீங்களும் உதவ முடியும். உங்களது எளிய உதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.

அக்டோபர் 2 முதல் 30 வரை நடைபெறும் Give India’s India Smiles Challengeல் இணைவதன் மூலம், ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழைப் பிள்ளைகள், விவசாயிகளின் குழந்தைகளுக்கு நீங்கள் கல்வியறிவு வழங்க முடியும். அவர்கள் முகங்களில் நீங்கள் புன்னகை ஏற்படுத்த முடியும்.

இதன்மூலம் திரட்டப்படும் நன்கொடையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புறக் மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 8 ஈஷா வித்யா பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்துவதற்கும், பள்ளி பேருந்து மேம்பாட்டிற்காகவும், பள்ளியின் சுற்றுச்சுவர்களை அமைப்பதற்காகவும் உதவ உள்ளது. மேலும், இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிடவும், பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கிடவும் இந்த நன்கொடைத் தொகை திரட்டப்படுகிறது.

ஈஷா அரசுப்பள்ளித் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகளிலும் இந்த நன்கொடைத் தொகை உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு http://www.giveindia.org/igive-ishavidhyaisc15

நன்கொடை பெறும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் தளமான கிவ் இந்தியா, ஒரு நிறுவனத்தை முழுமையாக பரிசீலித்த பின்னரே அங்கீகாரம் வழங்குகிறது. அந்த வகையில், ஈஷா வித்யா அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1