கர்ப்பகாலம் இனி வசந்த காலம்

கர்ப்பகாலத்தில் தவறாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றாலும், தவறாமல் உடற்பயிற்சி செய்தாலும், தாயாகத் தயாராகும் பெண்மணிக்கு இது மட்டுமே போதுமா?
 

கர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது, என்ன சாப்பிடவேண்டும் என்ன சாப்பிடக்கூடாது, எப்படிப்பட்ட உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதையெல்லாம் எல்லா மருத்துவர்களும் சொல்வார்கள். கூகிளில் 'கர்ப்பகாலம்' என்று டைப் செய்து ஒரு கிளிக் செய்தாலேபோதும், எல்லா குறிப்புகளும் புள்ளி விவரங்களொடு உங்கள் கண்முன் வந்துவிடும். "பிறகு தாயாகப்போகும் பெண்மணிகளுக்குத் தனியாக ஒரு வகுப்பெதற்கு? அதில் அப்படி என்ன விசேஷம்?"

அறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவோ வளர்ந்து கர்ப்பகாலத்தில் பலவிதங்களில் ஒரு பெண்ணிற்குத் துணை நின்றாலும், நவீன விஞ்ஞானம் கோட்டை விட்டிருக்கும் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது, அதுதான் மெய்ஞானம். வெளிநிலையில் எவ்வளவுதான் செய்தாலும், உள்நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் வரப்போகும் உயிரின் தன்மையையும், அந்த உயிரைக் கொண்டுவருவதில் தாயின் பெருமையையும் தீர்மானிக்கிறது.

கர்ப்பகாலம் பற்றி சத்குரு சொன்னதிலிருந்து...

இது இனப்பெருக்கத்தைப் பற்றி மட்டும் அல்ல. ஒரு தாயாக இருந்தால், அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்கப்போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

- சத்குரு

"இந்தியாவில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கவேண்டும் எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கக்கூடாது, எதைப் படிக்கவேண்டும் எதைப் படிக்கக்கூடாது, எப்படிப்பட்ட வாசனைகளை நுகரவேண்டும் என்பது முதற்கொண்டு முழுவதும் கண்காணிக்கப்பட்டது. இது முற்றிலும் மறைந்து, கர்ப்பிணிப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், மது அருந்தகத்திற்குப் போகிறார்கள், இப்படி இன்றையநிலை வேறுவிதமாக மாறிப் போயுள்ளது.

ஒரு பெண் கருத்தரித்தவுடன், அவளை மிகவும் இனிமையான உணர்வுகளுடன் வைத்துக்கொள்வதுதான் நோக்கம். ஒருக்கணம் கூட அவளுக்குள் கோபமோ, எரிச்சலோ, வருத்தமோ ஏற்பட்டுவிடாதவாறு பார்த்துக்கொண்டார்கள். அவள் விலைமதிப்பில்லா பொக்கிஷத்தைப்போல் பாதுகாக்கப்பட்டாள். அவள் கருவிற்குள் என்னென்ன பதிவாகின்றன என்பதில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவள் தனக்குள் எப்படிப்பட்ட பதிவுகளை எடுத்துக்கொள்கிறாளோ, அதேதான் பிறக்கப்போகும் கருவிற்குள்ளும் செல்கிறது.

அதுமட்டுமல்ல, கணவன் மனைவி இருவருக்கும் அவர்களைப் போலவே ஒரு உயிரை உருவாக்குவதில் விருப்பமில்லை. அவர்களை விடவும் பரிணாமவளர்ச்சியில் கொஞ்சம் மேலான உயிரை ஈர்க்க விரும்பினார்கள். உயிர் மிகச்சிறப்பான முறையில் நிகழ்வதற்காக, முதல் நாளிலிருந்தே, கூடிக் கருத்தரிப்பதிலிருந்து எல்லாவற்றையும், எல்லா நிலைகளிலும் அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்கள்."

'ஈஷா தாய்மை' வகுப்பு கர்ப்பிணிப்பெண்களுக்காக பிரத்யேகமாக சத்குரு வழிகாட்டுதலுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு வகுப்பு. இவ்வகுப்பு கர்ப்பகாலத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, ஆனந்தமான கர்ப்பகாலத்திற்கு உடல், மனம் மற்றும் உணர்வுகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கும், குழந்தையை சிறப்பாக வளர்ப்பதற்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பகிர்தல்கள்:

"ஈஷா கிரியாவைத் தொடர்ந்து செய்வதால் எனக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கிவிட்டன. பெரியவர்கள் பல யோசனைகள் சொல்வார்கள், ஆனால் அதை ஏன் பின்பற்ற வேண்டும் என்று புரிந்ததே இல்லை. இந்த வகுப்புகள் எனக்குப் பெரிதும் உதவியுள்ளன. என்னுடைய பல கேள்விகளுக்கு இங்கே பதில் கிடைத்திருக்கிறது."

"ஒருமுறை சத்குரு ஆங்கிலத்தில் ஒரு தியானத்திற்குக் குறிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தார், எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் நானே ஆச்சரியப்படும் விதமாக, அப்போது நடந்துகொண்டிருந்தது புலப்பட்டது. கண்மூடி உட்கார்ந்தபோது என் தாய்மையை உணர்ந்தேன். சத்குரு பேசிக்கொண்டிருந்தபோது என் குழந்தையின் அசைவுகளை என்னால் தெளிவாக உணர முடிந்தது."

மேலும் விவரங்களுக்கு: ஈஷா தாய்மை

தொலைபேசி: 8220829722

 
 
 
 
Login / to join the conversation1
 
 
7 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

Good Article

7 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

Good Article