கொல்லைப்புற இரகசியம் - பகுதி 7

"அடடே...! இந்த கருப்புக் கண்ணாடியில நீ அப்படியே ஹீரோ மாதிரி இருக்குறய்யா..!" எனது கூலிங் க்ளாஸைப் பார்த்து உமையாள் பாட்டி நையாண்டி பேசி சிரித்தாள்.

பாட்டி... பாத்தீங்களா நீங்க கூட என்ன கிண்டல் பண்றீங்க?! "எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் பாட்டி." நான் என் கண்ணாடியை சரிசெய்தவாறே பாட்டியைப் பார்த்து பரிதாபமாகக் கூறினேன்.

"ஏய்யா இன்ஃபெக்ஷன் வர்ற அளவுக்கு கண்ணுல என்னாச்சு...?" பாட்டி எதையோ அஞ்சறைப் பெட்டியில் தேடியவாறே என்னிடம் கேட்டாள்.

ஆளி விதையை தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது!

"தெரியல பாட்டி...! ரெண்டு நாளா கண்ணு சிகப்பா இருக்கு. கண் எரிச்சல் வேற!"

"ம்... சரி டாக்டரப் போயி பார்க்க வேண்டியதுதானே?!" கேட்டுக்கொண்டே அங்கிருந்த அம்மியை நோக்கி சென்று எதையோ நுணுக்கினாள்.

"நேத்துதான் பாட்டி டாக்டர்கிட்ட போனேன். ஒரு சொட்டு மருந்து குடுத்தாரு. இப்போ கொஞ்சம் தேவலாம். ஆனா இன்னும் கண் எரிச்சல் கொஞ்சம் இருக்கு. சிவப்பு நிறம் இன்னும் மாறாம இருக்கு."

"நைட்டு முழுக்க தூங்காம டிவி பாக்குறது; செல்ஃபோன்ல கேம் விளையாடுறது; காலைல எழுந்த உடனே கண்களை நல்லா கழுவாம விடுறதுனு கண்களப் பத்தி கவனமில்லாம இந்தக் கால இளைஞர்கள் அஜாக்கிரதையா இருக்குறீங்க. ஒரு பிரச்சனை வரும்போதுதான் அதுக்கு கவனம் குடுக்குறீங்க."

இந்த உமையாள் பாட்டியினால் எப்படி இவ்வளவு சரியாக நவீன இளைஞர்களைப் புரிந்து வைத்திருக்க முடிகிறது என வியப்பாக இருந்தது.

"நம்ம உடல்ல இந்த கண்கள் எவ்வளவு முக்கியமான விஷயம்னு இப்போதான் புரியுது பாட்டி!" என் கவனமின்மையை உணர்ந்தவனாய் பாட்டியிடம் கூறினேன்.

"நம்ம உடல்ல கண்ணு மட்டுமில்ல, ஒவ்வொரு பாகமும் முக்கியமானதுதான். ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் நாம அதப்பத்தி யோசிக்கிறோம். சரி... சரி... நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேட்டுக்கிறயா?!"

"என்ன பாட்டி இப்படி சொல்றீங்க?! அதுக்காகத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன், சொல்லுங்க!"

ஆளி விதை பயன்கள் (Aali Vithai Benefits in Tamil)

கண் எரிச்சலுக்கு ஆளிவிதை (Aali Vithai for Eye Irritation in Tamil)

flax seeds for eye irritation in tamil, கண் எரிச்சலுக்கு ஆளிவிதை

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஆளி விதையை (Aali Vithai – Tamil name for flax seeds) பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அப்புறம், அதை வடிச்சு எடுத்து கண்ணுல விட்டோம்ன்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்... ஆளி விதையை தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது!"

உடல் எடை குறைய... (Flax Seeds for Weight Loss in Tamil)

flax seeds for weight loss in tamil, உடல் எடை குறைய ஆளிவிதை

 

"ஆளி விதையில வேறென்ன பலன் இருக்கு பாட்டி...?"

"ஆளிவிதையில (Flax seed meaning in tamil) நார்சத்து அதிகம். இதை சரியான அளவில எடுத்துக்கிட்டா அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமில்ல, உடல் எடையை கச்சிதமா வச்சிக்க உதவும். இதை எடுத்துக்கிட்டா உன்ன மாதிரி இளைஞர்களுக்கு துரித உணவுகளை சாப்பிடுறதுல அதிக விருப்பம் இருக்காது. இதுல இருக்குற நார்ச்சத்து உடல்ல கெட்ட கொழுப்பு சேர்றதை தடுத்து, இதய நோய், பக்கவாதம் வராம பாதுகாக்கும்.

அப்புறம்... ஆளி விதையில லிக்னன்ஸ்’ (Lignans) அப்டின்னு ஒருவகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமா இருக்கு. இது செல்கள்ல செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுது. இதுல கார்போஹைட்ரேட், மாவுச்சத்து,சர்க்கரை எல்லாமே குறைஞ்ச அளவுல இருக்கு. அதனால கலோரி அளவும் குறையாவே இருக்கு. 

இதுல 20% புரதச்சத்து இருக்கறதால, உடல் எடை சுலபமா குறையும். அசைவம் சாப்பிடாதவங்களுக்கு புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.

இதுல ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைஞ்சிருக்கு. 

பெண்கள் பிரச்சனை மற்றும் முடி பிரச்சனைக்கு தீர்வு... (Flax Seeds for Hair Loss Problem in Tamil)

Flax Seeds for Hair Loss in Tamil, முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளிவிதை

 

ஹார்மோன் குறைபாடுனால பெண்களுக்கு ஏற்படுற உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு, மன உளைச்சலுக்கு சிறந்த மருந்தா ஆளி விதை (Linseed in Tamil) இருக்கு. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தா, முடி உதிர்வது குறையும்; முடி வளர்றதுக்கு உதவும். இது ஒழுங்கில்லாத மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். பெண்களுக்கு அந்த நேரத்துல ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றத்தை கட்டுப்படுத்தும். 

புற்றுநோய்க்கு மருந்தாகும் ஆளி விதை (Flax Seeds for Cancer in Tamil)

Flax Seeds for Cancer in Tamil, புற்றுநோய்க்கு மருந்தாகும் ஆளி விதை

 

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராம ஆளி விதை தடுக்குது; கர்ப்பப்பைச் செயல்பாட்டையும் மேம்படுத்துது. நவீன மருத்துவ ஆராய்ச்சிகள்ல கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான விஷயம் என்னன்னா... ஆளி விதை புற்று நோய்களுக்கு எதிரான விஷயங்களை கொண்டிருக்கு. இதுல இருக்கும் ஒமேகா-3 மாதிரியான சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரா செயல்படுது. குறிப்பா மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய்கள்ல இருந்து நம்மை பாதுகாக்குது.

ஆளி விதை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை... (Aali Vithai Side Effects in Tamil)

ஆளி விதை, flax seeds in tamil, aali vithai images

 

  • ஆளி விதை மாதிரி நார்ச்சத்து நிறைஞ்ச உணவுகள நாம ஒரேயடியா உணவுல சேர்த்துக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாதான் உட்கொள்ளணும்.
  • இதைசாப்பிடும் நாட்கள்ல அதிகமா தண்ணி குடிக்கணும். இல்லேன்னா மலச்சிக்கல், வாய்வு மாதிரியான உபாதைகள் உண்டாகும். கர்ப்ப காலங்கள்ல ஆரம்ப கட்டத்துல இருக்குற பெண்கள் இதை உட்கொள்றதை தவிர்த்துடணும்.

ஆளி விதை எங்கு கிடைக்கும்?

பாட்டி ஆளி விதையின் பலன்களை மூச்சுவிடாமல் சொல்லிமுடிக்க, ஆளிவிதையை உடனே வாங்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமானது. உடனே பாட்டியிடமே அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

"ஆளி விதையை எங்க போய் தேடுறது பாட்டி?!"

"நீ நாட்டு மருந்துக் கடையில கேட்டன்னா குடுப்பாங்க. ஈஷா ஆரோக்கியா மருத்துவமனை தெரியுமா உனக்கு?!"

"ஆமா பாட்டி! கோயம்புத்தூர்ல பீளமேட்டுல இருக்குது பாட்டி."

"ஆமா அங்க கூட நீ போய் வாங்கிக்கலாம்"

"சரி பாட்டி நான் வாங்கிட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன்." பாட்டியிடம் சொல்லிவிட்டு ஆளி விதை வாங்க விரைந்தேன்.