இங்கிலாந்தில் ஒரு ஆனந்த அலை!
சத்குரு சமீபத்தில் மேற்கொண்ட தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின்போது, இங்கிலாந்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். அதில் கலந்துகொண்ட ஒருவர் அந்த சத்சங்க அனுபவத்தை இங்கு சுவைபட பகிர்கிறார்...! தொடர்ந்து படித்து, இங்கிலாந்தில் அடித்த அந்த ஆனந்த அலையில் நீங்களும் நனையலாம்!
 
 

சத்குரு சமீபத்தில் மேற்கொண்ட தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின்போது, இங்கிலாந்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். அதில் கலந்துகொண்ட ஒருவர் அந்த சத்சங்க அனுபவத்தை இங்கு சுவைபட பகிர்கிறார்...! தொடர்ந்து படித்து, இங்கிலாந்தில் அடித்த அந்த ஆனந்த அலையில் நீங்களும் நனையலாம்!

சத்குருவின் சுற்றுப்பயணத்தால் அந்த 5 நாட்களும் அருள் மழையில் லண்டன் திளைத்திருந்தது.

இந்தியன் ஹை கமிஷனின் நேரு சென்ட்டரில் சத்குருவின் உரை நிகழ்ந்தபோது அந்த அரங்கம் மக்களால் நிறைந்திருந்தது. இங்கிலாந்தின் முன்னணி வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பின் 150 உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பின் அங்கு பொருளாதாரவியலாளர் மற்றும் இங்கிலாந்து பிரபுக்கள் மாளிகையைச் சார்ந்த (House of Lords Life Peer) லார்ட் மேக்னத் தேசாய் அவர்களோடு நிகழ்ந்த கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து பல சந்திப்புக் கூட்டங்கள் நிகழ்ந்தேறின.

நாங்கள் இதை சாத்தியமாக்க முயற்சி செய்கிறோம் என்று தன்னார்வத்தொண்டர்கள் தெரிவித்தனர். அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கமும் நிரம்பியது.

எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும், சத்குருவின் சுற்றுப் பயணத்தில் லண்டனின் பிரசித்திபெற்ற வெஸ்ட் என்ட் வென்யூ தியேட்டர் ராயலில் (west-end venues) நிகழ்ந்த பொதுமக்கள் பங்கேற்ற உரையாடலே முக்கிய நிகழ்வாக இருந்தது. தன்னார்வத் தொண்டர்கள் சத்குருவின் உரையாடல் நிகழ்ச்சியை உறுதிசெய்து அறிவித்தபோது 21 நாட்களே கையில் இருந்தது. "இவ்வளவு குறுகிய காலத்தில் 2100 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்புவதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று!" என்று அரங்க பணியாளர்கள் தெரிவித்தனர். அதுவும் வங்கி விடுமுறை-வார இறுதி வேறு! பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்கள் வைட்டமின் டி'யை தேடி வெளிநாடுகளுக்கோ அல்லது ஊர் புறங்களுக்கோ சென்றுவிடுவார்கள்.

நாங்கள் இதை சாத்தியமாக்க முயற்சி செய்கிறோம் என்று தன்னார்வத்தொண்டர்கள் தெரிவித்தனர். அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கமும் நிரம்பியது.

நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் காட்சி அது! இளைஞர்கள்-நடுத்தர வயதினர் என அனைத்து தரப்பட்ட மக்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கே உரித்தான வரிசை முறையைப் பின்பற்றி அங்கு நின்றிருந்தனர். அந்த வரிசை நீண்டு அடுத்த தெருக்களையும் ஆக்கிரமித்திருந்தது. அவ்வளவு கூட்டத்தை சமாளிக்க இயலாமல் சற்று காலதாமதமும் ஏற்பட்டது.

சத்குருவுடனான ஒரு பொதுமேடை உரையாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோன்ற அனுபவமுமாகும். சரியாக எட்டு வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே போன்று ஒரு பொது உரையாடல் நிகழ்வின்போதுதான் சத்குருவை நான் முதன்முதலில் சந்தித்தேன். மே 2007ல், ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கமான மதுபான விருந்து அழைப்புகளை நிராகரித்துவிட்டு, அந்த அற்புத நிகழ்விற்கு சென்றபோது சத்குருவின் உரையாடலை கேட்க நேர்ந்தது. வாழ்க்கை குறித்த சத்குருவின் பார்வையினால் தனக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து என்னிடம் ஒரு வடிவமைப்பாளர் நண்பர் எடுத்துக்கூறி, என்னை அந்நிகழ்விற்கு பரிந்துரை செய்தார்.

அது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. யோக அறிவியலின் வாயிலாக, உள்நிலை பரிமாற்றம் நிகழ்த்தக் கூடிய சக்திவாய்ந்த கருவிகளை வழங்கி, என் வாழ்வை பலவகையிலும் மாற்றியமைத்த என் குருவை சந்தித்துவிட்டதை நான் உணர்தேன்.

குரு என்றால் என்ன பொருள் என்பதுகூட எனக்குத் தெரியாது. நான் மிகுந்த எதிபார்ப்புடன் அரங்கத்தின் பின்புற மூலையில் அமர்ந்திருந்தேன். இனம்புரியாத ஒரு பரபரப்பு என்னைத் தொற்றிக்கொண்டிருந்தது.

சத்குரு குறிப்புகளுடன் கூடிய ஈஷா க்ரியா எனும் சக்திவாய்ந்த அந்த பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமையில், அங்கு கூடியிருருந்த பார்வையாளர்களைப் பார்க்குபோது எட்டு வருடங்களுக்கு முன் நான் சத்குருவை சந்தித்த நிகழ்வு நினைவிலாடியது. அங்கிருந்த மக்களின் முகத்தில் இருந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் பார்த்தபோது, மயிர்கூச்செரியும் அனுபவமாக இருந்தது. ஈஷா யோகா நிகழ்ச்சிகளை ஏற்கனவே செய்திருந்தவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் அங்கு இருந்தனர். சிலர் நண்பரின் பரிந்துரையினாலும், சிலர் சத்குருவை யூ ட்யூப்பிலும் தொலைக்காட்சியிலும் பார்த்ததாலும், இன்னும் சிலர் துண்டு பிரசுரங்களில் இருக்கும் சத்குருவின் புகைப்படத்தைப் பார்த்ததினாலும் அங்கு தங்கள் வாழ்வின் மிக முக்கிய பயணத்தை ஆரம்பிக்க வருகை தந்திருந்தனர். இன்னும் சிலர் கூகுல் விளம்பரங்கள் மூலமாகவும் ஃபேஸ்புக் வழியாகவும் கூட நிகழ்ச்சியை அறிந்துகொண்டு வந்திருந்தனர்.

விக்டோரியா காலத்தில், பிரிட்டிஷ் மக்களுக்கு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தல் கூடாது என்ற மனநிலை இருந்தது. இதனால் பிரிட்டிஷ் மக்களின் முகத்தில் ஒருவித இருக்கமே இருந்து வந்தது. இந்த தாக்கம் காரணமாக பிரிட்டிஷ் மக்கள் உணர்ச்சியை பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை, இறுக்கமான முகங்களாகவே இருப்பார்கள். ஆனால், சத்குரு குறிப்புகளுடன் கூடிய ஈஷா க்ரியா எனும் சக்திவாய்ந்த அந்த பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாய்விட்டு சிரித்ததைப் பார்க்கமுடிந்தது.

சத்குரு மேல்தளத்தில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து நகைச்சுவையாக கேட்டார், "சொர்க்கம் என்பது உண்டென்றால் அது உங்களுக்குள்தானே இருக்க முடியும்?!" என்றார். அப்போது அங்கே எந்தவொரு இறுக்கமான பிரிட்டிஷ் முகங்களையும் காணமுடியவில்லை.

பார்வையாளர்கள் மத்தியிலிருந்த ஒரு 37 வயது பெண்மணி, நோயினால் மிகவும் பலவீனமானவராக இருந்தார். அவர் தன்னிடமிருந்த சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு தனது கணவருடன் அங்கு வந்திருந்தார். தனது குருவை நேரில் பார்த்து அவரது அருள் பெற வேண்டும் என்ற தனது கனவு நிறைவேற அவர் அங்கு ஆவலுடன் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. திட்டமிடப்பட்டிருந்த கேள்வி-பதில் நேரத்திற்குப் பதிலாக, சத்குரு பார்வையாளர்கள் மத்தியில் அருள் வழங்கியபடி நடந்து வந்தார்.

அவர் அங்கிருந்த அந்தப் பெண்மணியை தன் கரங்கள்கொண்டு தன்னோடு அரவணைத்தார். அப்போது அந்த பெண்மணியின் முகத்திலும், அவரது கணவரிடத்திலும் உணர்ச்சி பெருக்கையும் நன்றி உணர்வையும் பார்த்த என்னால் அந்த காட்சியை ஒருபோதும் மறக்க இயலாது. அந்த பெண்மணிக்கு அன்று மாலையில் செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சை தேவையில்லாமல் போனது. அவரின் மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பார்வையாளர்கள் மத்தியில் நடந்து சென்ற சத்குரு அங்கிருந்த மற்றவர்களையும் அணைத்துக்கொண்டார். சத்குருவின் ஒவ்வொரு அரவணைப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை வழங்கியது.

சத்குரு செல்வதற்குள் அவரை இன்னுமொருமுறை பார்த்துவிட வேண்டுமென்று, கடந்த 2 மணி நேரங்களாக அரங்கத்திற்கு வெளியில் ஒரு பெரிய கூட்டமே காத்துக்கொண்டிருப்பது சத்குருவிற்கு தெரியாது. மக்கள் கண்ணீர்விட்டபடி சத்குருவின் பார்வை பெறுவதற்கும் அவரைத் தொடுவதற்கும் ஆவல் கொண்டனர். நான் அதுபோன்ற காட்சியை இந்தியாவில் மஹாசிவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் லண்டனில் அதுபோன்ற காட்சியைப் பார்த்ததில்லை. அந்த சாலையில் கூட்டம் அதிகமானதால் லண்டன் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

சத்குரு அங்கு கூடியிருந்த மக்களின் தன்மையைப் பற்றிக் கூறும்போது, லண்டனில் இதுபோன்ற ஒரு பங்கேற்பாளர்களை தான் பார்த்ததில்லை என்றும், இதுபோன்ற தீவிரம்மிக்க கூட்டத்தை தான் கண்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.

சத்குரு அரங்கத்தை விட்டு வெளியேறும்போது, அங்கிருந்த சிலர் கூறினார்கள் "இவர் ஒரு ராக்ஸ்டார் (rockstar!)" என்று. எனக்கு மட்டுமல்லாமல் இன்னும் பல லட்சம் பேருக்கும் சத்குரு ஒரு ராக்... ஒரு ஸ்டார்! ஆனால் அவர் ராக்ஸ்டார் அல்ல. அவர் அந்த வரையறைக்கெல்லாம் அப்பாற்பட்டவர். ராக்ஸ்டார்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சத்குரு ஒருவர்தான்.

சத்குரு வருகைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதில் இந்த ஒருவாரம் எப்படிச் சென்றதென்றே எனக்குத் தெரியவில்லை. அருள் அலையில் நான் அடித்துச் செல்லப்படுவதை என்னால் உணர முடிகிறது. எனது ஆனந்தததையும் புன்னகையையும் என்னால் நிறுத்த இயலவில்லை.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1