தன் வாழ்க்கையில் அடுக்கடுக்கான பல்வேறு வலிகளையும் இழப்புகளையும் சந்தித்த திருமதி. மங்கையர்க்கரசி அதிலிருந்து தன்னை மீட்டெடுத்த அருளும் கருணையும் எங்கிருந்து வந்தது என்பதை நம்முடன் பகிர்கிறார்!

திருமதி. மங்கையர்க்கரசி:

mangai akkaஎனது ஞாபகங்களை புரட்டிப் பார்க்கிறேன்...

இது நான்தானா? இத்தனை இக்கட்டுகளையும் கடந்தது நான் தானா? நிச்சயமாக நானில்லை, சொல்ல முடியாத ஒரு சக்தி இவை அனைத்தையும் கடந்துபோகச் செய்து என்னை காப்பாற்றி இருக்கிறது, இதுவே நிஜம்.

வாலிபத்தின் உச்சத்தில், 19 வயதில், இரண்டாவது மாடியிலிருந்து விழுந்ததில் என் முதுகுத்தண்டினில் பலத்த அடி. அதன்பின் நடந்த தவறான அறுவை சிகிச்சைகள் இன்னும் என்னை ரணப்படுத்தியது. படுத்தப் படுக்கையாகி விட்டிருந்தேன். என் கால்கள் கூட என் கன்ட்ரோலில் இல்லை, அசைக்க முடியவில்லை. என்னைப் பார்த்த டாக்டர்கள், “இவளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுங்கள். அங்கு தன் வாழ்க்கையை கழிக்கட்டும்,” என்று என் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். “குறைந்தது, வீல் சேரில் உட்கார்ந்தாவது அவள் பழகட்டும்,” என்று என் பெற்றோரின் மனவேதனையை இன்னும் அதிகப்படுத்தினர்.

நான் ஓடி விளையாடிய, துள்ளிக் குதித்து குதூகலித்த ஈஷா யோக மையத்திற்கு நான் தூக்கிச் செல்லப்பட்டேன். மாலை நேர விளையாட்டுக்களின்போது சத்குருவுடன் சேர்ந்து விளையாடிய ஞாபகங்களும் சற்றே என் மனதில் அலைபாயத் துவங்கியது...

என் பெற்றோர் விட்டுக் கொடுப்பதாயில்லை. என்னை மறுவாழ்வு மையத்திற்கு அவர்கள் மாற்றவில்லை. அத்தனை விதமான மாற்று மருந்து முறைகளையும் சோதித்து பார்த்தனர். ஒருமுறை அப்படி கேரளா நோக்கி ஒரு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தோம். “வரும் வழியில் ஈஷாவிற்கு போக வேண்டும்,” என்று என் தந்தையிடம் கேட்டுக் கொண்டேன். நான் ஈஷா வகுப்பு செய்திருந்தது அதுவரை அவர்களுக்கு தெரியாது. என்னுடன் திருச்சி NITயில் படித்த அனிதா எத்திராஜுலு நான் ஈஷா வகுப்பு செய்ய முழு ஸ்பான்சர் செய்தாள். திருச்சியிலிருந்து கோவை சென்றுவரத் தேவையான உதவிகளையும் அவளே செய்தாள். அனிதாவின் தயவால் ஈஷாவும், ஈஷா யோக மையமும் எனக்கு பரிச்சயமானது... என்னவொரு பாக்கியம் செய்தேன், ஈஷா என் வாழ்வில் புக...!

எனக்கு விபத்து ஏற்பட்ட பின்னர் எனக்கு வேண்டியவை வேண்டியவுடன் கிடைத்தது. என் இல்லம் எனும் தேசத்தின் ராணி நானே. என் சொல்லே கீதை ஆனது. அதனால் என்னை ஈஷாவிற்கு அழைத்துச் சென்றனர். நான் ஓடி விளையாடிய, துள்ளிக் குதித்து குதூகலித்த ஈஷா யோக மையத்திற்கு நான் தூக்கிச் செல்லப்பட்டேன். மாலை நேர விளையாட்டுக்களின்போது சத்குருவுடன் சேர்ந்து விளையாடிய ஞாபகங்களும் சற்றே என் மனதில் அலைபாயத் துவங்கியது...

தற்சமயம், ஒரு பெட்ஷீட்டின் நான்கு நுனிகளையும் 4 பேர் தூக்க அதில் கிடத்தப்பட்டவளாய் நான். சில விநாடிகளில் என் வாழ்க்கை இப்படி தடம்புரளும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என்னை தூக்கிக் கொண்டு தியானலிங்கத்திற்குள் சென்றார்கள், தரையில் கிடத்தினார்கள்.

மாலை நேரம் என்பதால் அவர் (தியானலிங்கம்) நாத ஆராதனைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அதனால், என்னை வழியனுப்ப தயாரானார்கள். அவர் அருளில் இருக்க கிடைத்த நேரமோ வெறும் பத்தே நிமிடங்கள்தான். அதைவிட குறைவாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்குள் எனக்கும் அவருக்கும் ஏதோ ஒருவித பரிமாற்றம் நடக்கத் துவங்கியிருந்தது.

ஈஷா யோகா வகுப்பு செய்திருந்தும் இந்த விபத்தினால் என்னால் எந்த பயிற்சியும் செய்ய முடியவில்லை. கால்களை அசைக்கக் கூட முடியாதவளுக்கு பயிற்சியா! ஆனால், அந்த அதிசயம் அன்று நடந்தது.

தியானலிங்கத்தை தரிசித்துவிட்டு வெளிவந்த மறுநாள் காலையிலிருந்து சக்தி சலன கிரியா செய்யத் துவங்கினேன். சூன்ய தியானம் வெகு சுலபமாய், இயல்பாய் நடக்கத் துவங்கியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல என் கால் விரல்களை என்னால் மெல்ல அசைக்க முடிந்தது. அன்றிரவு நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கட்டுக்கடங்காத சந்தோஷம். இன்பத்தில் துள்ளியது மனம்.

ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு கனவிருக்கும் அல்லவா? எத்தனை சக்தியுடன், உலகத்தின் உச்சியில் அமர்ந்திருப்பது போன்றதொரு பருவத்தில், இப்படியொரு நிலையில் என் வாழ்க்கை முடங்கிப் போனது. இன்று என்னால் என் கைகளின் உதவியுடன் எழுந்து அமர முடிந்தது அந்த அனுபவம் என்னை மறுமுறை உலகின் உச்சிக்கு கொண்டு சென்றது. “மங்கை... நீ இன்னும் அழிந்து போய்விடவில்லை. உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது,” என்று எனக்குள் ஒரு ஒலி எழும்பியது. மெல்ல வாக்கர் உதவியுடன் எழுந்தேன், அடுத்து நடந்தேன். எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. சந்தோஷ அலை வீசத் துவங்கியது. அவர் (தியானலிங்கம்) என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் நிலையை காணப் பொறுக்காத என் தாயோ மனம் நொடிந்து போயிருந்தார். நான் பட்ட அவஸ்தைகளைக் காண முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு அப்போது 43 வயது. என் 23 வயது வரை உடம்பு சரியில்லை என்று அவர் படுத்து நான் பார்த்ததில்லை. அப்படியொரு பெண், இன்று என் நிலை பொறுக்காமல், வாழவேண்டும் என்கிற ஆசையை துறந்து, தன் உயிரை விட்டுக் கொடுத்து விட்டார்.

சில மாதங்கள்கூட ஆகவில்லை, என் அண்ணன் செந்தில் 24 வயது, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியில் இருந்தவன், ஒரு விபத்தில் மரணம் அடைந்தான். நேற்று என்னுடன் இருந்தவன், இன்று என்னுடன் இல்லை.

தியானலிங்கத்தை தரிசித்துவிட்டு வெளிவந்த மறுநாள் காலையிலிருந்து சக்தி சலன கிரியா செய்யத் துவங்கினேன். சூன்ய தியானம் வெகு சுலபமாய், இயல்பாய் நடக்கத் துவங்கியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல என் கால் விரல்களை என்னால் மெல்ல அசைக்க முடிந்தது.

என்ன கிரகம் என் வாழ்வை பீடித்தது... முதலில் நான்... 2004 ஆகஸ்ட் மாதத்தில் என் அன்பிற்குரிய தாயின் மரணம், 2004 அக்டோபர் மாதத்தில் என் பாசத்திற்குரிய அண்ணன் நொறுங்கிப் போனேன், சுக்கு நூறானேன். 40 நாட்களுக்கு அவர்களுக்கான கடன்களை செய்தோம். நானும் என் தந்தையும் இயல்பு நிலைக்கு திரும்ப நாட்கள் எடுத்தது.

நான் தனிமையில் விடப்பட்டவளாய் தகித்துப் போயிருந்தேன். இந்த மொத்த பிரபஞ்சத்திலும் நான் மட்டும் தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். அதே சமயத்தில் எனக்குள் சில விஷயங்கள் நிகழத் துவங்கின. என்ன என்று என்னால் விவரிக்க முடியவில்லை. என்னால் மௌனமாய், அமைதியாய் இருக்க முடிந்தது. சில நாட்களில் அந்த அற்புதத்தை உணர்ந்தேன். நான் ஈஷா யோக மையத்தில் செய்திருந்த பாவ-ஸ்பந்தனா வகுப்பு என் நினைவிற்கு வந்தது. எனக்குள் நடந்து வரும் இந்த அத்தனை மாற்றங்களுக்கும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியே காரணம் என்பதை உணர்ந்தேன். எனக்குள் வெடித்துச் சிதறும் அனுபவமாய் பாவ-ஸ்பந்தனா எனக்கு வாய்த்திருந்தது.

அதன்பின், ஈஷா யோக மையத்திற்குச் சென்று அங்கு 2 வருடங்கள் வாழ்ந்தேன். தினமும் தீர்த்தக்குண்டத்தில் புனித நீராடியது மெல்ல என் கால்களுக்கு வலு சேர்த்தது. அத்தனை பெரிய கல் படிகட்டுகளில் ஏறி இறங்கும் அளவிற்கு என் கால்கள் வலுவடைந்தன. ரெஜுவினேஷன் மருத்துவம், ஈஷா யோகா பயிற்சிகள் என்னை மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டே இருந்தன.

இதே ஈஷாவிற்குத்தான் விபத்திற்கு பிறகு என்னை பெட்ஷீட்டில் அள்ளிக்கொண்டு சென்றார்கள். அதற்கு அடுத்த பயணம் வாக்கர் உதவியுடன் இருந்தது. மூன்றாவது முறை இதோ நானே சுயமாக வந்துவிட்டேன். ஈஷா என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை நான் என்னவென்று சொல்வது...

ஏ மனிதா! (தியானலிங்கத்தை குறிப்பிடுகிறார்) ஒவ்வொரு முறையும் எனக்கு புரியாத ஒரு பாஷையில் நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாய். ஆனால், என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் உயிர் உன்னுடன் உறவாடுகிறது. ஏ மனிதா! எனக்கு புரியாத பாஷையில் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாயே!

நான் மீண்டும் என் கல்லூரியில் இணைந்தேன். என்னை சேர்த்துக் கொண்டார்கள். நல்ல முறையில் முடித்தேன், நல்ல பணியும் கிடைத்தது. ஈஷாவிலுள்ள மா முக்திகா மூலமாக என் கணவர் எனக்கு அறிமுகமானார். நானும், மா அவர்களும், என் கணவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவர் என் நிலை அறிந்தும் என்னை மணந்துகொள்ள விருப்பமாய் இருந்தார், மணமுடித்தோம்.

என் திருமணத்திற்கு பின் நடந்த சம்பவம் இது. சில நாட்களாக முதுகுப் பகுதியில் வலி ஏற்படத் துவங்கியிருந்தது. முதுகுவலி வந்தால் நேராக பிசியோதெரபிக்கு செல்வது வழக்கமாகவே மாறிவிட்டிருந்தது. ஒரு வாரம் Ultrasound சிகிச்சைக்கு பின், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆனால், இம்முறை ஒரு வாரத்திற்கு பிறகும் முதுகுவலி குறையாமல் அதிகரிக்கத் துவங்கியது, நடக்கக்கூட முடியாத அளவுக்கு அதிகமானது. அதனால் வீட்டிற்கே வந்து பிசியோதெரபி சிகிச்சை தரவேண்டிய நிலை உருவானது.

சாதாரண தசைப்பிடிப்பாக இருந்தால் 10 நாட்களில் சரியாகிவிட வேண்டிய வலி 20 நாட்களாக தொடர்ந்து இருந்ததால், வேறெதோ பெரும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிசியோதெரபிஸ்ட் கருதினார். சிறந்த முதுகுத்தண்டுவட மருத்துவரை உடனே அணுக பரிந்துரைத்தார். அதனால், பெங்களூருவில் இருந்த சிறந்த மருத்துவர்களில் ஒருவரைச் சந்திக்க முடிவு செய்தோம்.

எனது மருத்துவக் குறிப்புகளை பார்த்துவிட்டு, முதுகுத்தண்டில் TB இருப்பதை கண்டுபிடித்தனர். TB க்கான மருத்துவம் துவங்கியது. CT guided aspiration முதுகுத்தண்டில் இருந்த சீழ் எடுத்து culture test பார்க்கலாம் என்றனர். வலி மட்டும் மாறாமல் அப்படியே தொடர்ந்தது.

அந்தக் காட்சி இன்னும் நன்றாக எனக்கு நினைவில் இருக்கிறது. எனது எல்லா மருத்துவ ரிப்போர்ட்களையும் அவரது பரந்த கண்ணாடி மேசையில் பரப்பி வைத்திருந்தார். உலகெங்கும் இருந்து பல மருத்துவ பட்டங்களையும் அவர் பெற்றிருந்தார். அனைத்து ரிப்போர்ட்களையும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு...

“நான் இதுவரை சிக்கலான நிலைமையில் வந்த பலருக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன், ஆனால் உங்கள் பிரச்சனை என்னால் தீர்க்க முடியாத பெரும் சவாலாக இருக்கிறது. எனவே கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜசேகர் அவர்களை நீங்கள் சென்று பார்க்க பரிந்துரைக்கிறேன்,” என்றார்.

எனக்கு ஏற்கனவே முதுகுத்தண்டில் அதே இடத்தில் 3 முறை அறுவை சிகிச்சையும் (aortic aneurysm) இருமுறை சிறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில் என் பிரச்சனையை பார்த்து டாக்டர் கொஞ்சம் தயங்கினார். “நடந்தா வந்தீங்க..? உங்க ரிப்போர்ட் பார்த்தா நீங்க ஸ்ட்ரெச்சர்லயோ, இல்ல வீல் சேர்லயோதான் வந்திருக்க முடியும்னு நினைச்சேன்,” என்றார்.

யேசு, புத்தர் வாழ்ந்தபோது அதிசயங்கள் நடந்தாக Autobiography of a Yogi புத்தகம் வழியாக அறிந்திருந்த நான் இன்று அதை நேரில் அனுபவித்து வாழும் சாட்சியாக நிற்கிறேன்.

மருத்துவமனையில் இருந்த மற்ற அறுவைசிகிச்சை மருத்துவர்கள், சீனியர்கள், ஜூனியர்கள் அனைவருடனும் நீண்ட ஆலோசனை நடத்தினார். என் தோளில் தட்டிக் கொடுத்து, “இதைச் சொல்ல வருத்தமாக இருக்கிறது, நீங்கள் மீண்டும் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார். இதை கேட்டதும் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் துவங்கியிருந்தேன். மீண்டும் படுக்கையில் இருக்கும் நிலையா... உண்மையில் என் தந்தையைப் பற்றியும் என் கணவரைப் பற்றியுமே நான் நினைத்துப் பார்த்தேன்.

அய்யோ என்னால் அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள். ஏற்கனவே பல பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய அளவுக்கு வேதனையை அவர்களுக்கு நான் கொடுத்துவிட்டேன். ஒரு தாய் தோற்றுவிடும் அளவுக்கு என் தந்தை என்னை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தார். என் தலைவர் (கணவர்) அன்றாடம் குளிக்க வைத்து, தலைசீவி என்னை கவனித்து கொண்டார். என் கையை நானே தூக்கக்கூட முடியாத அளவுக்கு என் நிலை மாறியது.

அப்போது வேறு ஒருவர் மூலமாக அமெரிக்காவில் இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதாக அறிந்தோம். அதே சமயம் இங்கு மதுரையில் உள்ள எங்கள் மருத்துவர் ஹரிஷங்கர் அவர்களிடமும் ஆலோசனை கேட்டோம். “சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும், பரவாயில்லை. மீண்டும் நடமாடும் நிலைக்கு வந்துவிடலாம்,” என்று நம்பிக்கை அளித்தார். “மறுபடியும் முதல்ல இருந்தா...” என்ற வடிவேலுவின் குரல் ஏனோ என் காதுகளில் ஒலித்தது.

ஒருவழியாக கோவை கங்கா மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொள்வது என முடிவுசெய்து தேதி குறித்தோம். கோவை செல்லும் வழியில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சேலம் லிங்கபைரவி திருக்கோயிலை பார்த்தவுடன், “ஆப்ரேஷனுக்கு முன்னாடி லிங்கபைரவி கோவிலுக்கு போகணும்னு தோணுது, போலாம்,” என்று தலைவரிடம் கேட்டேன்.

“உனக்கு சிரமமா இருக்குமே, உள்ளே வண்டி போகாது, நடந்துதான் போகனும்.. பரவால்லையா,” என்றார் தலைவர். எனக்குள் ஒரு உறுதி தேவியை நிச்சயமாக பார்க்கணும் எவ்வளவு வலித்தாலும் சரி என்று தோன்றியது.

கோவிலுக்குச் சென்ற நாங்கள் ஆச்சரியத்தில் திளைத்தோம். சத்குரு அங்கே அமர்ந்தவாறு பேசிக்கொண்டு இருந்தார்கள். அவரைப் பார்த்ததும் என் கண்களில் அருவி பொங்கியது. பிறகு அங்கிருந்து கிளம்பினோம். அவ்வளவுதான் நடந்தது.

மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தேன். அங்கே இன்னும் ஒருமுறை culture test எடுத்து பார்த்துவிட்டு அறுவைசிகிச்சையை தவிர்க்க முடியுமா என்று பார்க்கலாம் என்றார்கள். அதேசமயம் தலைவரின் அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை என்பதால் நாங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு திரும்ப வருவதாக மருத்துவமனையில் சொல்லிவிட்டுச் சென்றோம்.

ஒரு வாரத்திற்குப் பிறகு கங்கா மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வழியாக அழைத்து culture testல் எந்த முன்னேற்றமும் இல்லை. அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால், எனக்கு சத்குருவை பார்த்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைய ஆரம்பித்திருந்தது. நிறைய மாற்றங்கள் நடக்கத் துவங்கியது. நானே தனியாக எழுந்து நிற்கத் துவங்கினேன். மெதுவாக நடக்கவும் துவங்கினேன்... அப்புறம் என்ன...!!

அறுவை சிகிச்சைக்கு அரோகரா...! அறுவை சிகிச்சையும் இல்லை மருந்து மாத்திரைகளும் இல்லை. சத்குருவை தரிசிக்க கிடைத்த வாய்ப்பே எனக்கு கிடைத்த பெரும் வரமானது.

யேசு, புத்தர் வாழ்ந்தபோது அதிசயங்கள் நடந்தாக Autobiography of a Yogi புத்தகம் வழியாக அறிந்திருந்த நான் இன்று அதை நேரில் அனுபவித்து வாழும் சாட்சியாக நிற்கிறேன்.

சில நாட்களுக்குப் பிறகு சேலம் லிங்கபைரவி கோவிலுக்கு சென்று பூமுடி காணிக்கை செலுத்தினேன். என்னால் அதுமட்டுமே செய்ய முடிந்தது.

சத்குரு... சத்குரு... சத்குரு...! நீங்கள் வாழும் காலத்தில் உங்களை தரிசித்து வாழ நாங்கள் என்ன தவம் செய்தோமோ...!