சம்மர் வந்தாச்சு, குழந்தைகளுக்கு லீவும் விட்டாச்சு! இப்போது குழந்தைகளை எங்கு கூட்டிச் செல்வது, எப்படி அவர்கள் பொழுதை பயனுள்ளதாக மாற்றுவது என்று பலவிதமான கவலைகள் பெற்றோர் மனதில் சூழ்ந்திருக்கும், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெற்றோருடைய வருத்தம் இன்னும் அதிகம். நம் பட்டியலில் நீச்சல், கராத்தே, இசை, நடனம், அடுத்த க்ளாஸிற்கான டியூஷன் என்று பட்டியல் நீள... இதோ அந்த பட்டியலில் யோகாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆம்! இவ்வருடமும் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ள ஈஷா யோகா குழந்தைகள் வகுப்பிற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வகுப்புகள் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகின்றன. இதில் 7 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சூர்ய நமஸ்காரம், சில ஆசனங்கள் மற்றும் க்ரியா பயிற்சிகள் இவ்வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் யாவும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளையாட்டு முறைகளுடன் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. சில நிமிடங்களே செய்யக்கூடிய இப்பயிற்சிகளை கற்றபின் வீட்டிலேயே குழந்தைகள் பயிற்சி செய்ய முடியும்.

இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மனக்கூர்மை, மன ஒருங்கிணைப்பு, உடல் பருமன் குறைதல், ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இவை அனைத்திற்கும் மேலாக ஒரு குழந்தை தனக்குள் இருக்கும் இயல்பான ஆனந்தத்தை உணர இப்பயிற்சிகள் வழிவகுக்கும். இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஈஷா மையங்களில் நடைபெற உள்ளன. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

 

நீங்கள் மனித குலத்திற்கு செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம் என்னவென்றால் உங்கள் குழந்தைகளுக்கு துன்பம் என்பது வாழ்கையின் அங்கம் என்று சொல்லிக் கொடுப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் அவர்கள் ஆனந்தமான உயிராக வாழ்வதற்கான சாத்தியத்தையே நீங்கள் அழித்து விடுகிறீர்கள்.

- சத்குரு


மேலும் விவரங்களுக்கு...