இன்று தியான அன்பர்களும் பொதுமக்களும் நினைத்த மாத்திரத்தில் சில மணிநேரங்களிலேயே தங்கள் ஊர்களிலிருந்து பயணித்து தியானலிங்கத்தை தரிசித்திட முடியும்! ஆனால், தியானலிங்கம் உருவான செயல்முறை இந்த அளவு சுலபமானதாக இருந்திருக்கவில்லை! லிங்கம் மற்றும் ஆவுடையாருக்கான கல் எப்படி தேர்வு செய்யப்பட்டது என்பது போன்ற சுவாரஸ்ய தகவல்களோடு, தியானலிங்க உருவாக்கத்தில் நிகழ்ந்த இடர்பாடுகளையும் அதனைக் கடந்து தியானலிங்கம் உயிர்ப்பெற்ற அந்த அற்புத தருணங்களையும் உணர்ச்சி மிகு பதிவுகளாய் நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர், இங்கு சில தன்னார்வத் தொண்டர்கள்!

தியானலிங்கத்திற்கான கல் எங்கிருந்து வந்தது...?

“சேலத்தில் இரண்டாவது முறையாக ஈஷா யோகா வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், இடைவேளையில் தன்னார்வத்தொண்டர்களை அழைத்துக் கொண்டு சத்குரு ஏற்காடு சென்றார். அங்கு சத்குருவுடன் ஒரு இடத்தில் நாங்கள் frizbee விளையாடினோம். இதற்கும் தியானலிங்க கல் பற்றிச் சொல்வதற்கும் என்ன தொடர்பு என்று தோன்றலாம்...! அதற்கு வெகு அருகில்தான் ஜெம் கிரானைட்ஸ் இருந்தது.

பிரதிஷ்டையில் உடல் பலவிதமான பாதிப்புகளை அடைந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து சத்குரு என்ற ஒரு உயிர் பல நூறு ஞானிகளின் கனவுகளை நிலைகொள்ளச் செய்ததோடு அங்கே உயிர்ப்பாக நின்றது!

விளையாட்டில் ஈடுபாட்டுடன் லயித்திருந்த எங்களுக்கு சத்குரு அங்கு நிகழ்த்திக்கொண்டிருந்த சக்தி விளையாட்டு அப்போது புரிபடவில்லை. இப்போது எனக்கு ஓர் அனுமானம் உள்ளது... அதாவது அன்றைய தினம் லிங்கத்தை அடையாளம் காணத்தான் அங்கு எங்களையும் உடன் அழைத்துச் சென்றிருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.”

தியானலிங்கப் பிரதிஷ்டையில் கலந்துகொண்ட அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஸ்வாமி நிர்விச்சாரா அவர்கள், தொடர்ந்து கூறும்போது தியானலிங்கப் பிரதிஷ்டை செயல்முறைகள் குறித்தும் விவரிக்கிறார். ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரே லிங்கமாய் வீற்றிருக்கும் தியானலிங்கம், சத்குருவால் எப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும், விஜியம்மா சமாதிநிலை எய்தியதால் இடையில் ஏற்பட்ட இடர்பாடுகள் என்னவென்பதையும் தொடர்ந்து கேட்டறியலாம்!

“சத்குரு சக்தி நிலையில் மெல்ல மெல்ல பிரதிஷ்டையை துவங்க ஆரம்பித்த பின்னர் அங்கு வேறொரு உலகம் உருவாக ஆரம்பித்தது. ஆரம்பகட்ட செயல்முறையிலேயே கையால் தட்டி லிங்கத்தில் மெல்லிய விரிசலை ஏற்படுத்தினார். ஆனால், தியானலிங்கம் முழுமை பெறும்வரை எங்களுக்கு அதனை சொல்லவே இல்லை.”

தியானலிங்கம் உயிர்ப் பெற்ற தருணம்... உணர்ச்சிமிகு பகிர்வுகள்!, dhyanalingam uyirpetra tharunam unarchimigu pagirvugal

சக்கரங்களை பூட்டிய சாதனை தருணங்கள்!

7 சக்கரங்களில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் இம்மூன்று அடிப்படை சக்கரங்களை நிலை நிறுத்துவதுதான் மிக சிரமமான வேலை என்று சத்குரு முன்னரே சொல்லி இருந்தார். அதனால் இம்மூன்றையும் இறுதியாக நிலைநிறுத்துவது என நினைத்து அவர் செயல்பட்டார்.

சஹஸ்ராரம் மற்றும் ஆக்ஞா ஆகிய இரு சக்கரங்களையும் நிலை நிறுத்துவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. விசுத்தி சக்கரத்தை நிலைநிறுத்த தன் சக்தியை பயன்படுத்தினால் மற்ற செயல்களைச் செய்ய முழுத்திறன் இல்லாமல் போகும் என்பதால், அதற்காக மிகுந்த சக்தியோடு காத்திருந்த ஒரு உடலில்லா உயிரை அணுகி, இதற்கு பயன்படுத்தியதை பின்னர் ஒருமுறை சத்குரு கூறினார். அதைக் கேட்கையில் மெய்சிலிர்க்கச் செய்வதாக இருந்தது!

விஜியம்மா சமாதிநிலை எய்தியதால் நிகழ்ந்த தடை

1997 ஜனவரி 23 அன்று தியானலிங்க பிரதிஷ்டைப் பணிகள் பாதியளவிற்கு முடிந்திருந்த வேளையில், விஜியம்மா நம்மை விட்டுச் சென்றது பெரிய இழப்பாக இருந்தது. விஜியம்மா, பாரதியம்மா மற்றும் சத்குரு ஆகிய மூவரும் இணைந்து ஏற்படுத்திய முக்கோண யந்திரமே தியானலிங்கப் பிரதிஷ்டையில் ஆதாரமாய் இருந்தது! விஜியம்மாவின் இழப்பால் முக்கோண யந்திரத்தில் பாதிப்பு ஏற்பட இருந்தது. இதை ஈடுசெய்ய சத்குரு தன் சக்திநிலையை விஜியம்மாவின் பங்கிற்கும் சேர்த்து வழங்கத் துவங்கியபோதுதான் அவருடைய உடல்நிலை மிகவும் பாதிப்பை அடைந்தது. தன் உயிரைக் கொடுத்தாவது தியானலிங்கம் அமைப்பதில் உறுதியாக இருந்தார் சத்குரு.

விஜியம்மா அநாகதா வழியாக சமாதி நிலையடைந்ததால், அதன் சக்தியால் அநாகதா சக்கரம் மிக எளிதாக நிலைநிறுத்தப்பட்டது.

1999 ஜுன் 24ம் தேதி பிரதிஷ்டை அன்று எதுவும் நடக்கலாம் என்ற சத்குரு, முன்கூட்டியே பல குறிப்புகளை எங்களுக்கு வழங்கியிருந்தார். தியானலிங்கப் பிரதிஷ்டை முடிவில் தான் இல்லாமல் போனால்கூட எல்லாமே எப்படி நடக்கவேண்டும் என முடிவுசெய்து முழுதுமாக களம் கண்டார்.

நாங்கள் அனைவரும் லிங்கத்தைச் சுற்றி அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் அமர்ந்திருந்தோம். எல்லோருக்குமான குறிப்புகள் என்னென்ன செய்யவேண்டும் என எல்லாமே முன்னதாக கொடுக்கப்பட்டிருந்தன.

முதலாவதாக சஹஸ்ராரா சக்கரத்தை முழுமை பெறச்செய்து சத்குரு பிரதிஷ்டையை ஆரம்பித்தார். இறுதியாக சுவாதிஷ்டானா மற்றும் மூலாதாரம் ஆகிய இரண்டும் முழுமை பெற்ற நேரத்தில் சத்குரு சரிந்து ஆவுடையாரின் மேல் விழுந்திருந்தார்.

சில குறிப்பிட்ட நபர்கள் மட்டும் ஏற்கெனவே கொடுத்திருந்த குறிப்பின்படி அவரை அவசரமாகத் தூக்கிச்சென்றனர். அனைவருடைய மனதிலும் குழப்பம். அதே சமயத்தில், தியானலிங்கம் முழுமை பெற்றிருந்தது; அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவிகள்.

அடுத்தநாள் அனைவருக்கும் நன்றி சொல்வதற்காக இரண்டு பிரம்மச்சாரிகள் தாங்கி பிடித்துக்கொண்டிருக்க, நடை தளர்ந்தவராக வந்தார் சத்குரு. தன் உடல்நிலை சிறிது காலத்தில் சரியாகிவிடும் என்று சொன்ன பிறகுதான் எங்களுக்கெல்லாம் நிம்மதி ஏற்பட்டது.

மூன்று நாட்கள் இடைவிடாது ஓம் நம சிவாய மந்திர உச்சாடனை... அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடியது. மூன்றாவது நாள் இறுதியில் சத்குரு தியானலிங்க வளாகத்தில் மீண்டும் அதே மிடுக்குடன் உள்ளே நுழைந்தார். கண்டார். கண்களில் கண்ணீர் கொட்டினார்.

அனைத்து தடைகளையும் தாண்டி தியானலிங்கம் முழுமை பெற்றிருந்தது. அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவிகள். பிரதிஷ்டையில் உடல் பலவிதமான பாதிப்புகளை அடைந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து சத்குரு என்ற ஒரு உயிர் பல நூறு ஞானிகளின் கனவுகளை நிலைகொள்ளச் செய்ததோடு அங்கே உயிர்ப்பாக நின்றது!”
-ஸ்வாமி நிர்விச்சாரா

வெள்ளியங்கிரி மலைச்சாரலுக்கு சத்குரு வந்தபோது...

தன்னார்வத்தொண்டர் திரு.சதாசிவம் கூறும்போது...

தியானலிங்கம் உயிர்ப் பெற்ற தருணம்... உணர்ச்சிமிகு பகிர்வுகள்!, dhyanalingam uyirpetra tharunam unarchimigu pagirvugal தேடினோம், சத்குருவிடம் காண்பித்தோம், பல இடங்கள் ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டன. பின்னர் சத்குரு வெள்ளியங்கிரி மலையை பார்க்க வந்தபோது, இந்த இடம்தான் ஆசிரமம் அமைக்க சரியான இடம் என்று கூறினார். இடம் யாருடையது என்றுகூட தெரியாத நிலையில், பார்த்த 11 நாட்களில் இடத்தை கிரையம் செய்தது பெரும் வியப்பிற்குரியது.

அதன்பிறகு 1994ல் முதல்முறையாக 90 நாள் ஹோல்னஸ் வகுப்பு ஆசிரமத்தில் நடந்தது. அதற்கு தன்னார்வத்தொண்டராக வந்திருந்தேன். அப்போது ஒருநாள் சத்குரு பேசும்போது, தியானலிங்கம் உருவாக்குவதே எனது நோக்கம் என்றார்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தியானலிங்கப் பிரதிஷ்டையில் நானும் கலந்துகொண்டேன்; பிரதிஷ்டை 3 நாட்கள் நடந்தது. அப்போது சத்குரு பிரதிஷ்டை முடியும் தருணத்தில் தான் சென்றுவிடும் சூழல் உருவாகும் என்று கூறினார். அதற்கு நாங்கள் தியானலிங்கம் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும் என்று கூறினோம். அதற்கு சத்குரு ‘ஒருசில வழிகள் இருக்கின்றன, இயலாத தருவாயில் தியானலிங்கத்தில் கலந்துவிடுவேன்’ என்று கூறியிருந்தார். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் என்னசெய்ய வேண்டும் என்றும் முன்பே குறிப்புகள் கொடுத்திருந்தார். அதுபோலவே பிரதிஷ்டையின் மூன்றாம் நாளில் பலவித தடைகளைக் கடந்து சத்குரு வெற்றிகரமாக பிரதிஷ்டையை பூர்த்தி செய்தார். இப்போது சத்குருவும் தியானலிங்கமும் நம்மிடம் உள்ளதில் பெரும் ஆனந்தமே!

இப்பொழுது 18வது பிரதிஷ்டை தின விழா கொண்டாடப்படுகிறது. இதிலும் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. 17 ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. இன்றும் தியானலிங்க பிரதிஷ்டை நாள் நினைவிலேயே உள்ளது. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த சத்குருவிற்கு அநேக நமஸ்காரங்கள்.”

ஒரு சிறுமியின் பார்வையில் தியானலிங்க பிரதிஷ்டை

“1991ல் குழந்தைகள் வகுப்பில் நான் கலந்துகொண்டேன். சிறுமியாக இருந்தாலும் வகுப்புகள் நடக்கும்போது என் அம்மாவுடன் நானும், எனது தங்கையும் சேர்ந்து வாலண்டியரிங் செய்வோம். தியானலிங்கம் கட்டுமானப் பணி துவங்கியது. அதற்காக நிறையப்பேர் நிதியுதவி செய்தார்கள். அதைப் பார்த்தபோது எங்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எனது அப்பா ஒரு புது வீடு கட்டிக்கொண்டிருந்தார். அதில் நாங்கள் சிறு சிறு வேலைகள் செய்வோம். வேலை ஆட்கள் கூலி வாங்க நிற்கும்போது நாங்களும் சென்று, எங்களுக்கும் கூலி குடுங்க என்று கேட்டுவாங்கி அதை கொண்டுவந்து கொடுத்தோம்.

1997ல் 13 நாள் யோகா வகுப்பு செய்தேன். தியானலிங்கப் பிரதிஷ்டையில் கலந்து கொண்டேன். சிறுமியாக இருந்தும் அப்படியொரு வாய்ப்பைப் பெற்றது எனது பாக்கியம் என்றே கூற வேண்டும். 2004ல் முழுநேர தன்னார்வத்தொண்டராக ஆசிரமம் வந்துவிட்டேன். 18வது வருட தியானலிங்கப் பிரதிஷ்டை நாள் கொண்டாடப்படுகிறது, எனக்கு முதலாவது பிரதிஷ்டை நடந்த அந்த நிகழ்வே இன்றும் நினைவில் இருக்கிறது.”
-நித்யா

பிரதிஷ்டையில் உடல் நலிவுற்ற சத்குருவை பார்த்தபோது...

தியானலிங்கம் உயிர்ப் பெற்ற தருணம்... உணர்ச்சிமிகு பகிர்வுகள்!, dhyanalingam uyirpetra tharunam unarchimigu pagirvugal
“தியானலிங்கப் பிரதிஷ்டையின்போது தியானலிங்கத்திற்குள் அனைவரும் கண்கள் மூடி மந்திர உட்சாடனை செய்துகொண்டிருந்தோம். பின் கண்களைத் திறந்தால், பிரம்மச்சாரிகள் சத்குருவை அப்படியே தூக்கிக்கொண்டு சென்றார்கள். அதுபோன்ற நிலையில் சத்குருவைப் பார்த்ததும் உயிரே போய்விட்டது. பின் தியானலிங்கப் பிரதிஷ்டை அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் நல்லமுறையில் முடிந்துவிட்டது என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் செய்தி அனுப்பினார்.

அவர் என்ன சொன்னாலும் சத்குருவை பார்க்கும் வரை மனம் சமாதானம் அடையவில்லை. எப்பொழுதும் கம்பீரமாக, அவரே கார் ஓட்டிவரும் அழகே அழகுதான்! ஆனால் அன்று நாங்கள் கண்டகாட்சி... அத்தனை பேரும் கதறிவிட்டோம்! மறுநாள் சத்குருவை இருவர் கைத்தாங்கலாக அழைத்துவந்து, அமர வைத்தார்கள். பின் தியானலிங்கப் பிரதிஷ்டை நடந்ததைப் பற்றி வாசித்தார்கள்.

எங்களுக்குத் தெரிந்தது இதுமட்டும்தான்! சத்குருவின் விருப்பம் தியானலிங்கம் உருவாக்குவது. அதற்காக நாங்கள் அனைவரும் என்ன தேவையோ அதை செய்தே ஆகவேண்டும். தியானலிங்கம் உருவாக்குவதற்காக சத்குரு மூன்று பிறவிகளாக வந்துள்ளார் என்பதையெல்லாம் பின்னர்தான் தெரிந்துகொண்டோம்.” -சுகந்தி, கரூர்

ஈஷாவில் ஐக்கியமான பாட்டி கதை!

dhyanalingam-uyirpetra-tharunam-unarchimigu-pagirvugal-2பாட்டிமார்கள் கதை சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இந்த பாட்டியோ ஈஷாவில் தனது வாழ்வை ஐக்கியமாக்கிக் கொண்ட கதையை சொல்கிறார் கேளுங்கள்!

1991ல் என்னுடைய மகன் என்னை ஈஷா யோகா வகுப்பிற்கு அழைத்து சென்றான். என் மகன் அடிக்கடி யோகா வகுப்பிற்கு தன்னார்வத்தொண்டு செய்வதற்குச் செல்வான். ஈஷாவில் முதன்முதலில் 4 அல்லது 5 பேர் மட்டுமே தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு சமையல் செய்யத் தெரியாமல் பாத்திரத்தை கருகவிட்டுவிடுவார்கள். அதைத் தெரிந்துகொண்ட என் மகன் நீங்கள் அங்கு சென்று சமையல் செய்து தருகிறீர்களா என்று என்னிடம் கேட்டான். எனக்கும் சத்குரு மீதும் ஈஷா யோகா மீதும் மிகுந்த ஆர்வம் இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். இதன் காரணமாக நான் ஆசிரமம் உருவாகும்போதே இங்கே வந்து தங்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. பின்னர் 90 நாட்கள் ஹோல்னஸ் வகுப்பு இங்கே நடைபெற்றது. நான் அப்போது அங்கிருந்து அனைவருக்கும் உணவு தயார் செய்துகொடுத்தேன். அப்போது சத்குரு தியானலிங்கம் உருவாக்குவதே தனது நோக்கம் என்றார். நான் மட்டுமல்லாமல் என்னுடன் என் பேரன்களும் சேர்த்து தியானலிங்க கட்டுமானப் பணிகளில் தன்னார்வத்தொண்டு புரிந்தோம். இன்றுவரை ஆசிரமத்தில் தங்கியிருக்கிறேன். இங்கே வாழும் இந்த வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியமாகவே கருதுகிறேன்.” -ஈஷா பாட்டி

 

 

பிரதிஷ்டை நாள் கொண்டாட்டங்கள் - தியானலிங்கத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு

ஜுன் 24, தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் இது. இங்கு ஈஷா யோக மையத்தில் வாழ்வோரின் மூச்சுக்காற்றாய், இதயத்துடிப்பாய், மையத்தின் உயிர்நாதமாய் விளங்கும் தியானலிங்கத்தின் அருள் ஸ்பரிசம் என்றும் எங்களை ஆசுவாசப்படுத்த தவறுவதில்லை. ஆலய கருவறைக்குள் செல்லும் போதே பல்வேறு மதங்களைச் சேர்ந்த மந்திரங்கள் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையை இன்று இங்கு ஏற்படுத்தி இருக்கிறது.

கண்களில் நீர் தவழ, வெளியே எழுந்து செல்ல மனமில்லாமல் இங்கு அமர்ந்திருப்போர் ஏராளம். இன்றைய நாள் முழுவதும், பல்வேறு நம்பிக்கைகள், பழக்கங்களைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து மந்திர உச்சாடனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புனிதமான சூழ்நிலையில் நீங்களும் இணைந்திருக்க, தெய்வீகத்தை சுவைத்திருக்க, மையவாசிகளான எங்களால் ஆன ஒரு சிறிய அர்ப்பணிப்பு - இந்த நேரடி ஒலிபரப்பு. தொடர்பில் இருங்கள்.

IshaFoundation is on Mixlr

இன்று தியானலிங்கத்தில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளின் விபரங்கள்...

காலை

6.00 - 7.00 பிரம்மச்சாரிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

7.00 - 8.00 பிரம்மச்சாரிணிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

8.00 - 8.45 சவுன்ட்ஸ் ஆப் ஈஷா வழங்கும் புத்த மந்திர உச்சாடணங்கள்

8.45 - 9.30 ஆசிரமத்தினர் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

9.30 - 10.00 ஆசிரமவாசிகள் வழங்கும் கிறிஸ்த்துவ ஒலி அர்ப்பணிப்பு

10.00 - 10.30 ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் குருபாதுகா ஸ்தோத்திரம்

10.30 - 11.00 விருந்தினர் வழங்கும் இஸ்லாமிய ஒலி அர்ப்பணிப்பு

11.00 - 11.45 விருந்தினர் வழங்கும் கிறிஸ்த்துவ ஒலி அர்ப்பணிப்பு

மதியம்

11.45 - 12.10 நாத ஆராதனை

12.15 - 1.00 விருந்தினர் வழங்கும் குர்பானி ஒலி அர்ப்பணிப்பு

1.00 - 1.30 பிரம்மச்சாரிகள் வழங்கும் நிர்வாண ஷடகம்

1.30 - 2.15 சவுன்ட்ஸ் ஆப் ஈஷா வழங்கும் புத்த மந்திர உச்சாடணங்கள்

2.15 - 3.00 ஆசிரமத்தினர் வழங்கும் சூஃபி அர்ப்பணிப்பு

3.45 - 5.00 ஈஷா சம்ஸ்கிருதியின் அர்ப்பணிப்பு

மாலை

5.00 - 5.30 பிரம்மச்சாரிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

5.30 - 5.40 தியானலிங்கத்தில் குருபூஜை

5.45 - 6.10 நாத ஆராதனை