தியானலிங்கம் - தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!
தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நேரத்தில், நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!
 
 

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நேரத்தில், நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!

பிரதிஷ்டை நாள் கொண்டாட்டங்கள் - தியானலிங்கத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு

ஜுன் 24, தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் இது. இங்கு ஈஷா யோக மையத்தில் வாழ்வோரின் மூச்சுக்காற்றாய், இதயத்துடிப்பாய், மையத்தின் உயிர்நாதமாய் விளங்கும் தியானலிங்கத்தின் அருள் ஸ்பரிசம் என்றும் எங்களை ஆசுவாசப்படுத்த தவறுவதில்லை. ஆலய கருவறைக்குள் செல்லும் போதே பல்வேறு மதங்களைச் சேர்ந்த மந்திரங்கள் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையை இன்று இங்கு ஏற்படுத்தி இருக்கிறது.

கண்களில் நீர் தவழ, வெளியே எழுந்து செல்ல மனமில்லாமல் இங்கு அமர்ந்திருப்போர் ஏராளம். இன்றைய நாள் முழுவதும், பல்வேறு நம்பிக்கைகள், பழக்கங்களைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து மந்திர உச்சாடனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புனிதமான சூழ்நிலையில் நீங்களும் இணைந்திருக்க, தெய்வீகத்தை சுவைத்திருக்க, மையவாசிகளான எங்களால் ஆன ஒரு சிறிய அர்ப்பணிப்பு - இந்த நேரடி ஒலிபரப்பு. தொடர்பில் இருங்கள்.

IshaFoundation is on Mixlr

இன்று தியானலிங்கத்தில் நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளின் விபரங்கள்...

காலை

6.00 - 7.00 பிரம்மச்சாரிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

7.00 - 8.00 பிரம்மச்சாரிணிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

8.00 - 8.45 சவுன்ட்ஸ் ஆப் ஈஷா வழங்கும் புத்த மந்திர உச்சாடணங்கள்

8.45 - 9.30 ஆசிரமத்தினர் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

9.30 - 10.00 ஆசிரமவாசிகள் வழங்கும் கிறிஸ்த்துவ ஒலி அர்ப்பணிப்பு

10.00 - 10.30 ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் குருபாதுகா ஸ்தோத்திரம்

10.30 - 11.00 விருந்தினர் வழங்கும் இஸ்லாமிய ஒலி அர்ப்பணிப்பு

11.00 - 11.45 விருந்தினர் வழங்கும் கிறிஸ்த்துவ ஒலி அர்ப்பணிப்பு

மதியம்

11.45 - 12.10 நாத ஆராதனை

12.15 - 1.00 விருந்தினர் வழங்கும் குர்பானி ஒலி அர்ப்பணிப்பு

1.00 - 1.30 பிரம்மச்சாரிகள் வழங்கும் நிர்வாண ஷடகம்

1.30 - 2.15 சவுன்ட்ஸ் ஆப் ஈஷா வழங்கும் புத்த மந்திர உச்சாடணங்கள்

2.15 - 3.00 ஆசிரமத்தினர் வழங்கும் சூஃபி அர்ப்பணிப்பு

3.45 - 5.00 ஈஷா சம்ஸ்கிருதியின் அர்ப்பணிப்பு

மாலை

5.00 - 5.30 பிரம்மச்சாரிகள் வழங்கும் ஆஉம் நம: ஷிவாய

5.30 - 5.40 தியானலிங்கத்தில் குருபூஜை

5.45 - 6.10 நாத ஆராதனை

 
 
 
 
Login / to join the conversation1
 
 
1 வருடம் 1 மாதம் க்கு முன்னர்

guru deva

1 வருடம் 1 மாதம் க்கு முன்னர்

guru,we see live video