விழிப்புணர்வுமிக்க உலகம் - சத்குருவுடன் குணால் நைய்யர் கலந்துரையாடல்

கடந்த ஜூலை 10ம் தேதி இந்தியாவையும் சிறந்த ஒரு புதிய உலகத்தையும் மீட்டெடுக்கும் நோக்கில், விழிப்புணர்வுமிக்க உலகத்தை உருவாக்குதல் (Conscious Planet: The Way Forward) எனும் தலைப்பில் ஒரு ஆங்கிலோ இந்திய நடிகரான குணால் நைய்யர் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார்.

நிவாரணப் பணிகளுக்கு ஓவியங்கள் மூலம் சத்குரு வழங்கிய தொகை

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில், சத்குரு வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம் கிடைத்த ரூ.9.2 கோடியை ஈஷா அவுட்ரீச்சின் சமூக நலத்திட்டங்களுக்காக சத்குரு வழங்கினார். இதில் ஒரு ஓவியம் ஈஷா மையத்தில் வாழ்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் மறைந்த பைரவா என்ற காளையின் நினைவைப் போற்றும்விதமாக சத்குரு வரைந்தது.

புகழ்பெற்ற ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுடன் சத்குரு

புகழ்பெற்ற ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுடனான ஒரு வெபினாரில், கொரோனாவுக்கு பின் உலகில் கல்விமுறைகள் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை சத்குரு பேசினார். அமெரிக்கா முழுவதும் எழும் இனவெறி குறித்த விவாதம் மற்றும் வரவிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளை இளைஞர்கள் எவ்வாறு சமாளிக்கலாம் போன்றவை இதில் விவாதிக்கப்பட்டன.

குரு பௌர்ணமி சத்சங்கம்

குரு பௌர்ணமி திருநாளான கடந்த ஜூலை 5ம் தேதியன்று, காலை 7 மணிக்கு தமிழ் சத்சங்கத்தில் நேரலையில் இணைந்த சத்குரு, மாலை 6 மணியளவில் ஆங்கில சத்சங்கத்தையும் இணையம் வாயிலாக வழங்கினார்

ஹார்வர்டு மருத்துவப் பள்ளி பேராசிரியர்களுடன் சத்குரு

ஹார்வர்டு மருத்துவப் பள்ளி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்டீபன் டி.பிராட் ஆகியோர் கொரொனா தடுப்பு பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி சத்குருவுடன் விவாதித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிரண் மஜூம்தார் ஷாவுடன் சத்குரு

சவாலான இந்நேரத்தில் கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு கேள்விகளை முன்வைத்து கிரண் மஜூம்தார் ஷா அவர்கள் கடந்த ஜூன் 26ம் தேதி சத்குருவுடன் நேரலையில் கலந்துரையாடினார்.

ஒருங்கிணைந்த மற்றும் நிலையான இந்தியாவை மறுவடிவமைத்தல்

சத்குருவுடன் ET எட்ஜ் மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் லீடர்ஷிப் கவுன்சில் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான இந்தியாவை மறுவடிவமைத்தல் எனும் தலைப்பில், கடந்த ஜூன் 25ல் நேரலையில் கலந்துரையாடினர்.

உலக யோகா தினத்தில் சத்குருவின் நேர்காணல்

உலக யோகா தினமான கடந்த ஜூன் 21 அன்று, சத்குருவை டைம்ஸ் நவ் ஊடகம் நேர்காணல் செய்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஈஷா யோகா பயிற்சி செய்பவர்களிடம் நடத்திய சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து இந்த நேர்காணலில் சத்குரு விளக்கினார். சவாலான இந்த காலகட்டத்தில் ஈஷா யோகா ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் சிறப்பாக துணைநிற்பது ஆராய்ச்சி முடிவுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

IYO-Blog-Mid-Banner

இணைய நேரலையில் வாராந்திர சத்குரு தரிசனத்தில் தனது உலக யோகா தின வாழ்த்துக்களையும் யோகா பற்றிய முக்கியத்துவத்தையும் சத்குரு எடுத்துரைத்தார்.

சில்லறை வர்த்தகத்தின் எதிர்கால வழிகாட்டல்கள்

கடந்த ஜூன் 20ம் தேதி குளோபல் ரீட்டெய்ல் துறையின் தலைவர்கள் சத்குருவுடன் தொடர்புகொண்டு, சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலத்திற்கு அவசியமான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.

பாரதம் ஒரு கலாச்சார பொக்கிஷம்

கடந்த ஜூன் 20ம் தேதி சத்குருவுடன் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை மத்திய அமைச்சர் திரு.பிரஹலாத் சிங் பட்டேல் அவர்கள் ‘பாரதம் ஒரு கலாச்சார பொக்கிஷம்' என்ற தலைப்பில் இணையம் வாயிலாக கலந்துரையாடினார்.

ஆடை வடிவமைப்பு மற்றும் அழகின் மறுவடிவமைப்பு

சத்குருவுடன் ஃபேஷன் உலகில் பிரபல ஆளுமையான திரு. சபியாசாச்சி முகர்ஜி அவர்கள் ஆடை வடிவமைப்பு மற்றும் அழகு சார்ந்த அம்சங்களை மறுவடிவமைப்பு செய்தல் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து கலந்துரையாடினார்.

உலக அரசாங்க உச்சி மாநாட்டில் சத்குரு

கடந்த ஜூன் 19ம் தேதி சவாலான நேரத்தில் விழிப்புணர்வு எனும் தலைப்பில், உலக அரசாங்க உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சத்குருவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது மற்றும் கலாச்சார வெளியுறவுத் துறை துணை அமைச்சர் H.E. உமர் சைஃப் கோபாஷ் கலந்துரையாடினர்

சத்குருவுடன் மேத்யு ஹைடன் கலந்துரையாடல்

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யு ஹேடன், ஆஸ்திரேலியாவின் ஆண்கள் சுகாதார வாரத்தை முன்னிட்டு முழுமையான ஆரோக்கியம் குறித்த ஒரு யோகியின் பார்வை பற்றி சத்குருவிடம் கேட்டறிந்தார்.

நரம்பியல் ஆராய்ச்சியாளருடன் சத்குரு

மனித நரம்பியல் மண்டலத்தில் விழிப்புணர்வு நிலை பற்றி ஆராய்ச்சி செய்யும் உலகின் முன்னணி அறிவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்டீவன் லாரீஸ் கடந்த ஜூன் 16ல் நேரலையில், சத்குருவிடம் சில சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்தார்.