சென்னை வேளச்சேரியில் புதிய தியான மண்டபம்!

சென்னையின் சுற்றுச்சூழலும், வாழ்க்கைமுறையும் தியானம் செய்பவர்களுக்கு எப்போதும் சவாலாகவே உள்ளன. பரபரப்பான சந்தை தெருக்களில் அமர்ந்தாலும் நமக்குள் தியானம் நிகழ வேண்டுமென சத்குரு சொல்லும் அந்த நிலைக்கு ஒருவர் வரும்வரை, தியானத்திற்கென ஒரு இடம் இருக்கவேண்டியது அவசியமாகிறது. சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தியானமண்டபம் குறித்து சில தகவல்கள் இங்கே!
 

சென்னையின் சுற்றுச்சூழலும், வாழ்க்கைமுறையும் தியானம் செய்பவர்களுக்கு எப்போதும் சவாலாகவே உள்ளன. பரபரப்பான சந்தை தெருக்களில் அமர்ந்தாலும் நமக்குள் தியானம் நிகழ வேண்டுமென சத்குரு சொல்லும் அந்த நிலைக்கு ஒருவர் வரும்வரை, தியானத்திற்கென ஒரு இடம் இருக்கவேண்டியது அவசியமாகிறது. சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தியானமண்டபம் குறித்து சில தகவல்கள் இங்கே!

சத்குரு ஞானோதயமடைந்த திருநாளான, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று, வேளச்சேரி பகுதியில் சத்குரு சந்நிதியுடன் புதிதாக தியான மண்டபம் திறக்கப்பட்டது.

இந்த மண்டபம் அமைவதற்கு தங்கள் இடத்தை நன்கொடை செய்த திரு.சேதுபதி-ரம்யா தம்பதியர்களும், கட்டிடம் கட்டுவதற்கு பொருளுதவி செய்த தியா அறக்கட்டளை நிறுவனர் திரு.சுந்தர் அவர்களின் பெற்றோர் சேதுராமன்-கல்யாணி அம்மாள் தம்பதியரும் குத்துவிளக்கேற்றி, தியான மண்டபத்தை திறந்து வைத்தனர். கடந்த இரண்டு மாதங்களாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் முழுமூச்சாக நிதியுதவி திரட்டி, கட்டிட வேலைகளில் ஈடுபட்டு, மண்டபத்தை குறித்த நேரத்தில் கட்டிமுடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2100 ச.அடிகளில் அமைந்துள்ள இந்த தியானமண்டபம், இனி வேளச்சேரி/மடிப்பாக்கம் பகுதியிலுள்ள ஈஷா அன்பர்கள் தங்கள் அன்றாட யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், பிற ஈஷா வகுப்புகள் நிகழ்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இங்கு நடைபெறும் மாதாந்திர சத்சங்கங்களில் கலந்துகொள்வதன் மூலம், யோகப் பயிற்சிகளில் தங்களுக்குள்ள சந்தேகங்களை தியான அன்பர்கள் தீர்த்துக்கொள்ள முடியும். வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை தியான மண்டபங்கள் திறந்திருக்கும்.

முகவரி: பிருந்தாவன் தெரு, 5வது குறுக்கு, ஸ்ரீநிவாசா நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி M.R.T.S ரோடு, சென்னை - 91 (அனிதா மருத்துவமனை/சன்ஷைன் பள்ளி அருகில்)

தொடர்புக்கு: 97908 96671/ 78710 41915/ 98418 41223

சென்னையில் கீழ்கண்ட இடங்களில் ஏற்கனவே தியான மண்டபங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தி நகர் - 83000 11000
ஆவடி - 94450 35011
அண்ணா நகர் - 83000 35000
அடையாறு - 83000 32000
மேடவாக்கம் - 98404 72013
நங்கநல்லூர் - 94449 11747
திருவொற்றியூர் - 98400 42515
பெரம்பூர் - 83000 36000

சென்னையின் தியான மண்டபங்கள் மற்றும் பிற விபரங்களைத் தெரிந்துகொள்ள 8300011000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1