கல்வியின் அங்கமாக இருக்கும் சென்னை மீனாட்சி கல்லூரி, ஞானத்தின் பிரம்மாண்டமாக காட்சியளித்தது நேற்று. வழக்கமாக ஒரு திங்கட்கிழமை எப்படி ஆரம்பிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், சென்னையின் ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு இப்படி ஒரு உற்சாகமான திங்கட்கிழமை இதுவரை வாய்த்திருக்குமா தெரியவில்லை!

கல்வியின் அங்கமாக இருக்கும் சென்னை மீனாட்சி கல்லூரி, ஞானத்தின் பிரம்மாண்டமாக காட்சியளித்தது நேற்று. வழக்கமாக ஒரு திங்கட்கிழமை எப்படி ஆரம்பிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், சென்னையின் ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு இப்படி ஒரு உற்சாகமான திங்கட்கிழமை இதுவரை வாய்த்திருக்குமா தெரியவில்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடனான சத்குரு அவர்களின் சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இது என்றேனும் ஒருநாள் நடக்கும் அற்புதமான நிகழ்வு.

ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடனான சத்குரு அவர்களின் சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இது என்றேனும் ஒருநாள் நடக்கும் அற்புதமான நிகழ்வு.

அன்பின் வெளிப்பாடாக, தங்கள் அனுபவத்தின் பகிர்தலாக, தங்கள் குருவுடனான இத்தகைய ஒரு நாள், ஒவ்வொரு ஈஷா தியான அன்பரும் ஏங்குகின்ற ஒரு அழகான நிகழ்வு. அன்பும் அருளும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தாங்கள் உணர்ந்ததை பிறருக்கும் பகிர்ந்திட இந்த தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைவிடவும் பலமடங்கு அதிகமாக அர்ப்பணிப்போடு இயங்குவதுதான் ஈஷா. அதுதான் ஈஷாவை இவ்வளவு பெரிய அன்பின் இயக்கமாக வளர்த்திருக்கிறது.

காலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை நடந்த இந்த சந்திப்பு, Sounds of Isha குழுவினரின் மனதையள்ளும் இசையுடன் துவங்கியது. சத்குரு அவர்களின் உரை, கேள்வி-பதில் ஆகியவற்றுடன் இனிதே நடைபெற்றது.

சத்குரு, தனது வழக்கமான பாணியில் பதில்களை வீசி அனைவரையும் சுண்டியிழுத்தார். கூடியிருந்த கூட்டத்தினர் தங்களை மறந்து அன்பில் பரவசமடைந்தனர். ஆனந்தமாய் மனம்விட்டு சிரித்தனர்.

ஆதியோகி சிலை எதற்காக? என ஒருவர் கேட்டபோது...

தெற்கே, கோவையில். கிழக்கே வாரணாசியில். மேற்கே மும்பையில். இவையெல்லாம் கோவையில் பிரதிஷ்டை செய்த பிறகு விரைவுப்படுத்தப்படும். இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதியோகி சிலை நிறுவப்படும்.

"மக்களுக்கு, குறிப்பாக இந்த தலைமுறை மக்களுக்கு உள்நிலை மாற்றம் குறித்த கவனம் வரவில்லையெனில், அடுத்த 50 வருடங்களில் இங்கு அனைவருமே குடிகாரர்களாகி விடுவார்கள். அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படுகிறதாம். இது இந்தியாவிலும் நடந்துவிடக்கூடிய அபாயங்கள் உள்ளன. அதனால், ஆதியோகி.

தெற்கே, கோவையில். கிழக்கே வாரணாசியில். மேற்கே மும்பையில். இவையெல்லாம் கோவையில் பிரதிஷ்டை செய்த பிறகு விரைவுப்படுத்தப்படும். இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதியோகி சிலை நிறுவப்படும். வடக்கில் மட்டும் கொஞ்சம் தாமதமாகலாம். நந்தி சிலையை பிரதிஷ்டை செய்ததன் மூலம் பல நுட்பங்களை புரிந்துகொண்டோம். இந்த சிலைகள் அடுத்த 1000 வருடங்களுக்கு வாழும் தன்மையுடையதாய் இருக்கும்.
யோகீஷ்வரர் லிங்க பிரதிஷ்டை வருகின்ற பிப்ரவரியில், சிவராத்திரியின்போது நடைபெறவுள்ளது. அனைவரும் வரவேண்டுகிறோம் என்று அனைவருக்கும் அழைப்பினை விடுத்தார்.

சத்குருவின் அன்பும் அருளும் வழிந்தோடிய இந்த இரண்டு மணிநேர சந்திப்பு, ஈஷாவின் சென்னை தன்னார்வத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, இதன் நேரடி ஒளிபரப்பில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கும் மிகப்பெரிய தெம்பும், தெளிவும் அளித்திருக்கிறது. மனிதகுலம் மலர்வதற்கான அற்புதப் பணியில் தொடர்ந்து தங்களை இணைத்துக்கொள்ள இது ஒரு பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. இது, அங்கு கூப்பிய கரங்களுடனும், கண்ணீர் ததும்பிய விழிகளுடனும் அமர்ந்திருந்த அத்தனை பேரும் உணர்ந்த உன்னதம்.