சத்துமிக்க பால்கொழுக்கட்டை ரெசிபி!
அல்சர் பிரச்சனை உள்ளோருக்கு உகந்த ‘கேரட் தேங்காய்பால் கீர்’ எப்படி செய்வது என்பதையும், சத்துமிகுந்த பச்சரிசி கொழுக்கட்டை ரெசிபியையும் இங்கே படித்தறியலாம்!
 
சத்துமிக்க பால்கொழுக்கட்டை ரெசிபி!, Chathumikka palkolukkattai recipe
 

ஈஷா ருசி

அல்சர் பிரச்சனை உள்ளோருக்கு உகந்த ‘கேரட் தேங்காய்பால் கீர்’ எப்படி செய்வது என்பதையும், சத்துமிகுந்த பச்சரிசி கொழுக்கட்டை ரெசிபியையும் இங்கே படித்தறியலாம்!

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு
புழுங்கலரிசி - 3 ஆழாக்கு
வெல்லம் - ½ கிலோ
தேங்காய் - 1
ஏலக்காய்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை

அரிசியை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும். ஆட்டிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வேஷ்டியில் உலர விடவும். வெல்லத்துடன் 8 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி பாகை அடுப்பில் வைக்கவும். பாகு கொதித்துக் கொண்டிருக்கும் போதே உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை அதில் போடவும். தேங்காய் துருவலை நீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். கொழுக்கட்டைகள் வெந்தவுடன் ஏலக்காய்தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின்னர் தேங்காய் பால் சேர்க்கவும். சூடாகவோ, குளிச்சியாகவோ பரிமாறவும்.

கேரட் - தேங்காய்ப்பால் கீர்

தேவையான பொருட்கள்:

கேரட் (பெரியது) - 2
தேங்காய்ப்பால் - அரை கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - சிறிதளவு

செய்முறை

பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். அடுப்பை குறைவாக வைத்து சர்க்கரை சேர்த்து கரைய விடவும். கரைந்ததும், தேங்காய் பால், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து வைக்கவும் (ஆறியவுடன் ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்). கேரட்டை துருவி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும் (ஜூஸர் இருந்தால், அதில் எடுக்கலாம். சாறு நன்றாக இருக்கும்). இந்த கேரட் சாறை, காய்ச்சி வைத்திருக்கும் பால் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. 2 மணிநேரம் வேறு எதுவும் சாப்பிட கூடாது. இதை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1