சந்திரஜீவன் - ஈஷாவின் புதிய இசை தொகுப்பு
ஈஷா அன்பர்களின் உள்ளம் கவர்ந்த சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் முதல் இந்தி இசை தொகுப்பாக "சந்திரஜீவன்" சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பற்றி ஒரு பார்வை...
 
 

ஈஷா அன்பர்களின் உள்ளம் கவர்ந்த சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் முதல் இந்தி இசை தொகுப்பாக "சந்திரஜீவன்" சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பற்றி ஒரு பார்வை...

"நிலவிற்கென்று தனியொரு குணம் கிடையாது. அது சூரியனை பிரதிபலிக்கிறது. நீங்கள் தெய்வீகத்தை அறிய வேண்டுமென்றால், உங்களுக்கென்று தனியொரு குணமில்லாமல், வெறும் பிரதிபலிப்பாய் மாறிவிடுவது ஒன்றே வழி. நீங்கள் பிரதிபலிப்பாய் மாறினால், எதனைப் பிரதிபலிப்பீர்கள்? உச்சபட்சமான ஒன்றினை மட்டுமே உங்களால் பிரதிபலிக்க முடியும்." - சத்குரு

ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு எண்ணமும், மனித அனுபவத்திலுள்ள ஒவ்வொரு அம்சமும் அவர் ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்போது ஆழப்படுகிறது. குருவின் அன்பு, ஏக்கம் அளிக்கும் வேதனை-வலி, அவரது அருளை, இருப்பைக் கொண்டாடி அதற்காக காத்திருக்கும் தருணங்கள்... இப்படி ஒவ்வொரு சஞ்சலமும் இனிப்பாய் மாறிவிடுகிறது. சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் முதல் ஹிந்தி வெளியீடான "சந்திரஜீவன்" இவற்றை சப்தத்திலும் வார்த்தையிலும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே. இசையோடு கலந்திடுங்கள், ஈஷா யோக மையவாசிகள் இந்த அனுபவங்களின் சுவையை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறார்கள்...

சந்திரஜீவன் சிடியில் உள்ள 7 பாடல்கள், ஈஷா யோக மையத்தில் பல்வேறு சந்தர்பங்களில், நிகழ்ச்சிகளில் தொகுக்கப்பட்டது. ‘சந்திரஜீவன்’ இசைத்தொகுப்பின் பாடல்களை Isha Download Store ல் டவுன்லோட் செய்துகொள்ளமுடியும்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1