ஈஷாவில் 2ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய இரண்டாம் நாள் கொண்டாட்டத்தில் கர்நாடாக இசையில் குரலிசை கலைஞாரகத் திகழும் ஶ்ரீ விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குரலிசைக் கச்சேரி நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

கர்நாடக இசையில் பார்வையாளர்களை திளைக்கச் செய்த விக்னேஷ்!

carnataka-isaiyudan-erendaamnaal-navarathri-kondatam-ishatamilblog-subimgஈஷாவில் இரண்டாம் நாள் நவராத்திரி கொண்டாட்டங்கள், கர்நாடக இசையில் வளர்ந்துவரும் இளம் பாடகரான ஸ்ரீ விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குரலிசைக் கச்சேரியுடன் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறின. மனம் மயக்கும் இனிய ராகங்களை தனது குரல் வளம் மற்றும் இசை நுட்பத்தின்மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை தன் வசப்படுத்தினார் ஸ்ரீ விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பக்கபலமாக மிருதங்கம் மற்றும் வயலின் வித்வான்கள் சிறப்பான பக்கவாத்திய இசையினை வழங்கினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று…

மூன்றாம் நாள் விழாவான இன்று (அக்டோபர், 12 ) திரு. அனுகிரஹா லக்ஷ்மணன் அவர்களின் பாடல்களுடன் இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.

இன்று (அக்டோபர் 12) மாலை 5:30 மணிக்கு லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி பூஜையின் நேரலை ஒளிபரப்பில் இணைந்து தேவியின் அருள் பெறுங்கள்!

நாளை...

நான்காம் நாள் விழாவான நாளை (அக்டோபர், 13 ) குமாரி. ரேஷிகா அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !