இருபது லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையை கடந்து அதிவேகமாக கொரோனா தொற்று இந்தியாவில் பரவி வரும் இந்த சூழலில், நாட்டின் கிராமப்புற சமுதாயங்களுக்கு இது பெரும் ஆபத்தையும் கடினமான சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. சில கிராமப்புற சமூகங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் சவால்கள் உருவெடுத்திருந்தது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என பலதரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களும் தங்களை காத்துக்கொள்ள எந்தவித வழியும் இன்றி தவித்து வந்தனர்.

கோவை கிராமங்களில் உள்ள மக்கள் இந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட போது உள்ளூர் மக்களும் ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு புதிய இயக்கத்தை துவங்கினர்: வைரஸை வெல்வோம்(#BeatTheVirus) என்ற நோக்கில் ஒன்றிணைவது. சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஈஷா தன்னார்வலர்கள் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு துணிகரமாக சென்று, அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க உதவியதோடு மட்டுமல்லாமல், இந்த சோதனை காலத்தில் கிராமப்புற மக்களுக்கு பல வகையில் ஆதரவாகவும் இருந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் களத்தில் இருந்த தன்னார்வலர்கள், அரசு அமைப்புகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் என அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உதவியாளர்கள்

blog_alternate_img

 

இந்த நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி மனம் தளராமல் சிறியவர் பெரியவர் என அனைவரும் பல்வேறு பொறுப்புகளையேற்று சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் துன்பங்களை போக்க செயல் புரிந்தனர். பிரதாப் மற்றும் விஷ்ணு போன்ற பணிக்குச் செல்லும் இளைஞர்களும் கூட கிராமப்புற சமூகங்களுக்கு உதவுவதற்கும் அங்குள்ள முதியவர்களுக்கு சிறந்த பராமரிப்பு கிடைப்பதற்கும் தங்களின் முழு நேரத்தையும் செலவிட்டனர்.

"பல நேரங்களில் முதியவர்கள் கண்ணீர் மல்க எங்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.இவர்களின் எதிர்காலம் பற்றிய பயமும் பிரச்சனைகளும் பற்றி நாங்கள் அறிவோம். இருப்பினும் இதில் இருந்து உறுதியுடன் அவர்கள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது," என்று விஷ்ணு கூறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அருகாமையில் உள்ள கல்லூரிகளில் இருந்து பல மாணவ தன்னார்வலர்கள் ஈஷா தன்னார்வர்களோடு இணைந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டனர். உணவு பொட்டலம் கட்டுவதில், கொண்டு செல்வதில் விநியோகிப்பதில் மற்றும் முதியவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் அவர்கள் உதவினர்.

கொடை குணம்

blog_alternate_img

 

பல இன்னல்கள் இருந்த போதிலும் இந்த நெருக்கடி விவசாயிகளையும் கிராம சமூகங்களையும் முன்பெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிணைத்துள்ளது. நமது சமூக சமையற்கூடங்களிலும் சமூக கூடங்களிலும் நன்கொடைகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஸ்ரீ ராம் கார்டனிலிருந்து வந்த சில பெண்கள் பெருமளவில் அரிசி, சக்கரை, மிளகு மற்றும் மற்ற உணவு பொருட்களை வழங்கினர்.

உள்ளூரில் உள்ள உழவர் உற்பத்தி அமைப்புகள் பெருமளவிலான பலசரக்கு பொருட்களான கோதுமை, அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை வழங்கினர். நரசிபுரம், செல்லப்ப கௌண்டன் புதூர், நல்லூர்வயல் போன்ற பல கிராமங்களில் இருந்து தாராள மனம் கொண்ட பல விவசாயிகள் தக்காளி, சுரைக்காய், பழங்கள் மற்றும் காய்கள் என நிறைய நன்கொடைகளை அளித்தனர்.

பாதிக்கப்படக்கூடியவருக்கு உதவுவது

blog_alternate_img

 

பலரது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் கிராமப்புறங்களில் வாழும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மேம்படுத்துவதை ஈஷா அவுட்ரீச் தன்னார்வலர்கள் தங்களின் தலையாய பணியாக கொண்டுள்ளனர். ஈஷாவின் பல்வேறு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகித்தனர். மேலும் மக்களிடையே இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதிலும் உதவினர்.

மேலும் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்டிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வந்து பல கோவை கிராமங்கங்ளில் இந்த ஊரடங்கு காலத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினர். கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கியதோடு மட்டுமல்லாமல் பற்பல உதவிகளும் புரிந்தனர். இந்த நோய்த்தொற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரோடு சேர்ந்து விழிப்புணர்வு காணொளிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் விநியோகித்தனர்.

நமது மீட்பர்களை காப்பது

blog_alternate_img

 

இந்தக் கொடிய வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் நமது செயல் வீரர்களைக் காப்பது மிக அவசியமான ஒன்று. உள்ளூர் தன்னார்வலர்கள், மருத்துவ வல்லுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், நியாயவிலைக் கடை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் சுமைதூக்குபவர்கள் அனைவருக்கும் முகக்கவசம், சுத்திகரிப்பு கரைசல், மற்ற மருத்துவ பொருட்களை உள்ளடக்கிய பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட்டன. நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டது.

கசாயத்துக்காக காத்திருக்கும் மக்கள்

blog_alternate_img

 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானமான நிலவேம்பு கசாயம் கிராப்புற மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வெகுநாட்கள் பிடிக்கவில்லை. நமது தன்னார்வலர்கள் இந்த கசாயத்தை பல கிராமங்களில் விநியோகித்து அதன் நன்மைகளை மக்களுக்கு விளக்கினர். இந்த கிராமங்களில் சிறியவர் பெரியவர் என அனைவருக்கும் பிடித்தமான ஒரு பானமாக இந்த கசாயம் மாறியது. அதிலும் சுவாரஸ்யம் என்னவென்றால், அங்குள்ள குழந்தைகள் கசாயம் பெற்றுக்கொள்ள வரிசையில் முதலாவதாக நிற்பார்கள். குழந்தைகளின் இந்த உற்சாகம் பெரியவர்களையும் தொற்றிக் கொண்டு தினமும் கசாயம் குடிக்க அவர்களை ஊக்கப்படுத்தியது.

பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் கிராமப்புற சமூகங்கள் இந்த நோய்த்தொற்றை எதிர்க்க ஒற்றுமையோடு ஒன்றிணைந்தனர். சிலருக்கு வாழ்க்கை பழைய நிலையில் மாறத் துவங்கியிருந்தாலும் இந்த நோய்த்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலருக்கும் எதிர்காலம் இருக்கும் இந்த சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்; பாதுகாப்போடு இருக்க வேண்டும்; உதவியை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.

கிராமப்புற சமூகங்களுக்கு புத்துயிர் ஊட்டும் ஈஷாவின் முயற்சிகள் பற்றி அறிய, இந்த பக்கத்தை 'லைக்' செய்யுங்கள்: Fb.com/ActionForRuralRejuvenation

கிராமப்புற சமூகங்களுக்கு புத்துயிர் ஊட்டும் எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து நன்கொடை அளியுங்கள்: ishaoutreach.org/beatthevirus