ஒரே நோக்கத்தில் ஒன்றிணையும் மனிதர்கள்

ஈஷா தன்னார்வலர் நவீன், மத்வராயபுரம் கிராமத்திற்கு சமீபத்தில் சென்றபோது, அங்குள்ள அனைத்து கிராம மக்களும் சேர்ந்து, அவரை மிக உற்சாகத்தோடு வரவேற்று வைரஸை வெல்வோம் என்ற உறுதியுடன் அவரோடு ஆர்வத்தோடு இணைந்து கொண்டனர். நமது தன்னார்வலர்களின் உறுதியான முயற்சியுடன் சேர்ந்து உள்ளூர் மக்கள் இரண்டாம் நிலை தற்காப்பு கவசமாக அணிவகுத்து இருக்கின்றனர்.

தன்னார்வலர் நவீனோடு இணைந்துள்ள மேலும் 15 பேர், காக்கும் படை வீரர்களைப் போல, உணவு விநியோகிப்பதிலும், நிலவேம்பு கசாயம் கொடுப்பதிலும், மற்ற அத்தியாவசியப் பொருட்களை கொடுப்பதிலும் உதவுகிறார்கள்.

மத்வராயபுரத்தில் மட்டுமல்ல, நரசீபுரம், மடக்காடு கிராமங்களில் வசிப்பவர்களும் உதவிக்கு முன்வருகிறார்கள். தன்னார்வலர்களுக்கு உதவுவது, மக்கள் ஊரடங்கு சட்டங்களை கடைபிடிக்க அறிவுறுத்துவது என, பல செயல்களில் ஈடுபடும் அவர்கள், உணவு விநியோகிப்பது மற்றும் எளிதில் பாதிப்படையக் கூடியவர்களை பாதுகாப்பது என, பல வழிகளில் உதவுகிறார்கள்.

blog_alternate_img

பாரம்பரியதீர்வுகள்

கிராமங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பேணிக்காக்க அங்குள்ள ஆர்வமிக்க மக்கள் தாங்கள் அறிந்திருக்கும் பாரம்பரிய முறைகளை செயல்படுத்துகிறார்கள். அங்கு வசிப்பவர்கள் மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடியை தூவி தங்கள் வீட்டையும், வீதிகளையும் கிருமியின்றி காக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் வீடுகளின் முன் சாணம் மொழுகி, கோமியம் தெளித்து கிருமிகள் தங்களை அண்டாத வண்ணம் காக்கிறார்கள். தாங்கள் இருக்கும் சமூக கூடங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விநியோகிக்க உபயோகிக்கும் வாகனங்கள் என அனைத்தையும் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்யும் ஈஷா தன்னார்வலர்களுக்கு, கிராம மக்கள் தங்கள் பங்குக்கு கடைபிடிக்கும் இத்தகைய பாரம்பரிய பாதுகாப்பு முறைகள் உதவிகரமாக இருக்கின்றன. 

கடுமையானசூழலில்...

கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் வாழ்வாதாரத்தை இழந்த கூலித்தொழிலாளி ஒருவர், சமீபத்தில் பெய்த கடும் மழையால் வருமானமின்றி வாடினார். மாநில அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச பொருட்களை வழங்கினாலும், தன் குடும்பத்தை பராமரிக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். ஈஷா தன்னார்வலர்கள் தினமும் உணவு பொட்டலங்களை வழங்கி அவரையும், அவரைப்போல் உள்ள மற்றவரையும், அந்த கடின சூழலிலிருந்து காப்பாற்றினார்கள். அந்த தொழிலாளி, "நான் ஈஷா தன்னார்வலர்களுக்கு நன்றி கூறுகிறேன், அவர்கள் என்னுடைய கவலைகளை களைந்துவிட்டனர்" என்று கூறினார்.

blog_alternate_img
 

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கொரோனா வைரஸ் பரவல் பல சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், நமது குழந்தைகள்தான் பெருமளவு அவதிக்கு உள்ளாகிறார்கள். நமது குழந்தைகளை நாம் பேணிக்காப்போம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.