ஒழுக்கமான அணுகுமுறை

கிராமவாசிகளின் அணுகுமுறையில் உள்ள தெளிவான வித்தியாசத்தை பழங்குடி கிராமங்களிலும் பார்க்க முடிந்தது. முன்னர் தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை கிராமங்களில் தொடங்கியபோது, கிராமவாசிகள் உணவையும் நிவாரணப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள கூட்டமாக அவர்களை சூழ்ந்துகொள்வார்கள்.

எனினும், அவர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க வகையில் மாறியது. தன்னார்வலர்கள் வழங்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் சமூக விலகலை கடைபிடிப்பதிலும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துக்கான கடுமையான தரநிலைகளை கடைபிடிப்பதிலும் உள்ள முக்கியத்துவத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்து கொண்டனர்.

blog_alternate_img
 

இப்போது பழங்குடி கிராமத்தினர், சமூக விலகலை கடைப்பிடித்து வரிசையில் நிற்கின்றனர். சாடிவயல் பகுதியில் வாழும் திரு.சரவணன் தன்னார்வலர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் உதவி புரிந்து வருகிறார். அவர் தினமும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை குறிப்பிட்டபடி வெகுவாக பின்பற்றி வருகிறார். அவர் தன் கைகளை நன்றாக கழுவிய பின்னரே விநியோகம் செய்யவிருக்கும் உணவு பொட்டலங்களை கையாள்கிறார்.

blog_alternate_img
 

அந்த பழங்குடி கிராமங்களில் வழங்கப்படும் உணவிற்கு இப்போது பெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. அந்த சமூகம் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் உணவுக்கு பெரும் பாராட்டுதல்களை தெரிவிக்கின்றனர் - காய்கறி பிரியாணி, தக்காளி சாதம் மற்றும் காய்கறி கூட்டு ஆகியவை அவர்கள் விரும்பத்தக்க உணவு வகையாய் மாறியுள்ளது. ஆனால் அந்த கிராமத்தினரின் மிகவும் விருப்பமான உணவு, ஈஷாவின் அடையாளமான உணவான சாம்பார் சாதமே ஆகும். பெரும்பாலான கிராமங்களில் இருந்து இதற்கு பல சிறப்பு கோரிக்கைகள், நம் தன்னார்வலர்களுக்கு வந்த வண்ணம் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.