கொரோனா தேநீர்

தென்னமநல்லூரில் நிலவேம்பு கசாயம் பெரும் பிரபலம் அடைந்துவிட்டது. இங்கு முதியவர் இளையவர் என அனைவரும் இதை "கொரோனா தேநீர்" என்றுதான் அழைக்கின்றனர். இந்த கசாயம் நோய்த்தொற்று காலத்தில் தங்களின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் தன்னார்வலர்கள் அந்த கிராமத்தை அடைந்தவுடன், "அன்பிற்கு உரியவர்களே! தோழர்களே! கொரோனா தேநீர் வந்துவிட்டது, எல்லோரும் வெளியே வாருங்கள்," என்ற உற்சாகக் குரலில் கோரஸாக அங்குள்ள குழந்தைகள் கூவி அழைப்பர்.

அந்த உற்சாக குரலுக்கு செவி சாய்த்து வெளியே வந்து வரிசையில் சமூக விலகலைக் கடைப்பிடித்து நிற்கும் மக்களுக்கு, நிலவேம்பு கசாயம் விநியோகிப்பதில் அந்த குழந்தைகள், தானே ஒரு தான்னார்வலராய் மாறி ஈஷா குழுவுக்கு உதவி வருகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விலையில்லா கசாயம் ரெடி!

தீத்திபாளையத்தில் தன்னார்வலரிடம் நிலவேம்பு கசாயம் வாங்க ஓடிவந்த ஒரு சிறுவன் அவரிடம் 20 ரூபாய் கொடுத்தான். அந்த கசாயத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் போல என்று அவன் எண்ணிக்கொண்டான். இந்த கசாயம் விற்பனைக்கு அல்ல என்றும், நோய்த்தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக விநியோகிக்கப்படுகிறது என்றும் அவனிடம் தன்னார்வலர்கள் பொறுமையாக விளக்கினர். மேலும், அவன் குடும்பத்தாருக்கும் கூட அவன் பெற்றுச் செல்லலாம் என்று அவர்கள் கூறியபோது, அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஒரு குவளை கசாயத்தை தான் அருந்திய பின், தன் பெற்றோருக்கு இரண்டு குவளைகளில் பெற்றுச் சென்றான் அந்த சிறுவன்.

blog_alternate_img

தீத்திபாளையத்தில் வசிக்கும் சிறுவர்கள் தன்னார்வலர்களை வரவேற்று, தாங்களும் அவர்களுக்கு உதவ விரும்புவதாக வலியுறுத்தினர். முடிவில் அவர்களின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்ற பின்பு தன்னார்வலர்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்றனர். அந்த சிறுவர்கள் தங்கள் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று அந்த கிராமத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகித்தனர்.

வேடப்பட்டியைச் சேர்ந்த சிறிய அளவிலான தொழில்களில் பணி புரியும் சில தொழிலாளர்கள் தினசரி காலை அருந்தும் தேநீருக்கு பதில் நிலவேம்பு கசாயத்துக்கு மாறிவிட்டனர். தங்களின் தேநீர் இடைவேளையில் அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குமாறு ஈஷா தன்னார்வலர்களிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆற்றல் ஊக்கி

ஒவ்வொரு சிறிய அன்பான செயல்பாடும் நம் தன்னார்வலர்களுக்கு பெரிய ஊக்கமாக மாறி, வைரஸை வெல்வோம் என்ற நோக்கில் கூடுதல் உற்சாகத்துடன் செயல்பட அவர்களை ஊக்குவிக்கிறது. சமீபத்தில் பஞ்சன்வயல்பதியில் ஈஷா தன்னார்வலர்களுக்கு தன் தோட்டத்தில் விளைந்த நெல்லிக்காய்களை வழங்கி ஒரு விவசாயி உபசரித்துள்ளார். அந்த விவசாயி இந்த முயற்சியில் பங்குகொண்டு நம் தன்னார்வலர்களுக்கு உதவ விரும்புவதாக கூறினார். நம் தன்னார்வலர்களை அவர் தன் தோட்டத்தில் சிறிது நேரம் இளைப்பாறி, வேண்டுமளவு நெல்லிக்காயை உண்டு, பின்னர் தங்களின் பணியைத் தொடருமாறு வேண்டிக்கொண்டார். பஞ்சன்வயல்பதி விவசாயியின் இந்த கருணை நம் தன்னார்வலர்களுக்கு உற்சாக துடிப்பை ஏற்படுத்தியது.