குட்டி தேவதைகள்

சமீபத்தில் செல்லப்பக்கவுண்டன் புதூரில் ஒரு இதயம் உருக வைக்கும் நிகழ்வு நிகழ்ந்தது. ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அந்த பகுதியை அடைந்தபோது, எட்டு இளம் குட்டீஸ்கள் ஓடிவந்து தங்களுக்கும் உணவு வேண்டுமெனக் கேட்டார்கள். இயல்பான குழந்தைகளின் உற்சாகத்தை அங்கிருந்த தொண்டர்கள் குறையாமல் பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அந்த இடமே எதிர்பாராமல் ஏற்பாடு செய்த ஒரு இன்பச் சுற்றுலா போலானது. உற்சாகமாக தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டே ஒன்றாக அனைவரும் உணவை உட்கொண்டார்கள்.

தினசரி செல்லப்பக்கவுண்டன் புதூரில் தன்னார்வத் தொண்டர்களை வரவேற்பது குழந்தைகளின் உற்சாக கூக்குரல்தான். தன்னார்வத் தொண்டர் மகேஸ்வரன் அண்ணா தமது அனுபவத்தை இப்படி கூறுகிறார்: அந்த குழந்தைகளின் வெள்ளந்தியான முகங்களும் அணுகுமுறையும் எங்களை கரையைச் செய்கிறது. பெரும்பாலும் நாங்கள் எங்கே சென்றாலும் எங்களுடனே அவர்களும் வருவார்கள். எல்லா கிராமங்களிலும் ஈஷாவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்து ஆதரவளிப்பதில் குழந்தைகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது.

மற்றொரு தன்னார்வத் தொண்டர் பகிர்ந்துகொண்டது இது: "இந்த கிராமத்து குழந்தைகளுடன் எங்களுக்கு எப்போதுமே ஒரு வலுவான, தோழமையான பிணைப்பு இருப்பதாகவே பார்க்கிறோம். கிராமத்தின் எந்தப் பகுதியிலும் அவர்கள் எங்களோடு இணைந்து கொள்கிறார்கள். அவர்களின் இருப்பே தினமும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது, புதிய உத்வேகத்தையும் தருகிறது."

blog_alternate_img

தன்னார்வலர்களுக்கு குழந்தைகளின் கைமாறு

உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குழந்தைகளின் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் எல்லா இடங்களிலும் தன்னார்வத் தொண்டர்கள் பெறுகிறார்கள். சமணப்புதூர் கிராமத்திலும் தங்களின் உற்சாகம் ததும்பும் குரலோடு தன்னார்வத் தொண்டர்களை வரவேற்ற பிறகுதான், குழந்தைகள் அவர்களிடமிருந்து உணவு பொட்டலங்களை பெற்றுக்கொண்டு தங்கள் இல்லம் திரும்பினார்கள்

சற்று நேரம் அங்கேயே இருந்து குழந்தைகளுடன் அளவளாவிய தன்னார்வத் தொண்டர்கள், ஒவ்வொரு வீடாக கிராமம் முழுவதும் அனைவரும் உணவு பெற்றிருப்பதை உறுதி செய்துகொண்டார்கள். ஒரு மூதாட்டியின் இல்லத்தை அடைந்தபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தன்னார்வலர்கள் எடுத்துச்சென்ற உணவை கிராமத்தில் வேறு யாருக்காவது வழங்குமாறு கேட்டுக்கொண்டார் அந்த மூதாட்டி.

தன்னார்வத் தொண்டரான ஜெயகுமார் அண்ணா காரணத்தை விளக்குகிறார்: "தனது பேரப்பிள்ளை நம்மிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்ட குழந்தைகளில் ஒருவன் என்பதை குறிப்பிட்ட மூதாட்டி, அந்த சிறுவன் உணவை தன்னுடன் பகிர்ந்து கொண்டதையும் குறிப்பிட்டு, அதுவே தங்களுக்கு போதுமானதாக இருந்தது என்பதை நன்றியுடன் பகிர்ந்து கொண்டவர், பசியோடு இருக்கும் வேறு யாருக்காவது இந்த உணவு தேவைப்படும் என்று கூறி, சக மனிதர்கள் மீது அக்கறையோடு வாழ்த்தி வழியனுப்பினார். எளிமையான மனிதர்களின் இதயத்தில் அன்பு அமுதசுரபியாக இருக்கிறது, எப்போதும்!”

blog_alternate_img

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.