இனிப்பு பரிமாற்றம்

ஈஷா தன்னார்வலர் பிரேம்குமார் அண்ணா மூலக்காடுப்பதியில் தன் தினசரி பணிகளை செய்து வந்தபோது சாலையோரத்தில் அமர்ந்து ஒரு சிறுவன் கரும்பை சுவைத்துக் கொண்டிருப்பத்தைக் கண்டார். பிரேம்குமார் அந்த சிறுவனை அணுகி பேச்சு கொடுத்தார். அந்த சிறுவனிடம் கரும்பு பிடித்திருக்கிறதா என்று விசாரித்தபோது, குறும்பாக சிரித்தபடி அந்த சிறுவன் அங்கிருந்து ஓடினான்.

சிறிது நேரத்தில் தன் தாயோடு வந்த அந்த சிறுவன் அருகில் இருந்த அவர்களின் வயலுக்கு பிரேம்குமாரை அழைத்துச் சென்றான். தங்களின் வயலிலிருந்து கரும்பை வெட்டியெடுத்து, தங்கள் நன்றியின் வெளிப்பாடாக அவர்கள் பிரேம்குமாருக்கு வழங்கினர். அந்த சிறுவனின் தாய் கூறினார், "நீங்களும் மற்ற தன்னார்வலர்களும் எங்களுக்கு செய்யும் உதவிக்கு மிகுந்த நன்றி. நீங்கள் அனைவரும் எங்கள் கிராமத்துக்கு பெரும் நன்மையை செய்கின்றீர்கள்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
blog_alternate_img
 

ஆலாந்துறை பஞ்சாயத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் தனசேகர் அவர்கள் 25 கிலோ அரிசி கொண்ட 20 அரிசி மூட்டைகளை நன்கொடையாக நம் தன்னார்வலர்களுக்கு வழங்கினார். கிராமப்புற சமூகங்களுக்கு ஈஷா ஆற்றிவரும் சேவையில் தானும் ஒருமித்து செயல்பட விழைவதாக தெரிவித்தார்.

ஒரு தன்னார்வலரான நவீன் அண்ணா கூறும்போது, "கிராம மக்களின் பாராட்டைக் கேட்கும்போது மிகவும் நெகிழ்வாக உள்ளது. மிகுந்த மன நிறைவோடும், நெகிழ்வாகவும் உணர்கிறோம். மத்வராயபுரத்தைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், நம் பணியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இன்னும் நீண்ட காலத்துக்கு நாம் இந்த உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று ஊக்கப்படுத்தினார்” என்றார்.

அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த அபூபக்கர், தான் ரமலான் நோன்பு இருப்பதாக நம் தன்னார்வலர்களிடம் தெரிவித்தார். தன்னார்வலர்களின் பணியை பாராட்டிய அவர், தான் தினமும் ஈஷா தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டுதான் தன் நோன்பை முடிப்பதாகக் கூறினார்.

மத்வராயபுரம் பஞ்சாயத்து செயலாளர் கூறும்போது, "நம் பகுதியில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் ஈஷா பெரும்பங்கு வகிக்கிறது." அங்குள்ள அஞ்சல் நிலைய தலைமை அதிகாரியும் தன் பாராட்டுதல்களை ஈஷா தன்னார்வலர்களுக்கு தெரிவித்தார். மேலும் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் அவர்களுக்கு தினமும் உணவும் நிலவேம்பு கசாயமும் கொடுப்பது குறித்தும் வெகுவாக பாராட்டினார்.

பைரவனுக்கு அஞ்சலி

சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் காலமான காளை பைரவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வழிபாடு ஏற்பாடு செய்திருந்த ஒரு கிராம மக்கள், நம் தன்னார்வலர்களை அந்த வழிபாட்டில் கலந்துகொள்ள அழைத்தனர். "அங்குள்ள மக்கள் பைரவனின் மேல் கொண்டிருந்த உணர்வையும் அவனுக்கு வழங்கிய அஞ்சலியையும் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போனோம்," என்று ஒரு தன்னார்வலர் கூறினார்.