சிறிய கரங்களின்சீரியதொண்டு…

8 வயதே நிரம்பிய சிறுவர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீனிவாஸ் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை விடுத்து அவர்களுக்குள் சண்டை போடுவதையும் மறந்தனர். ஈஷா தன்னார்வலர்களோடு சேர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவர்களின் குழந்தைத்தனமான போட்டியையும் தணித்தது.

அந்த இரட்டையர் முதலில் தக்காளி அறுவடை செய்வதில் தன்னார்வலர்களுக்கு உதவினார். பின்னர் உற்சாகமாக தங்களுக்கு பிரியமான நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு விநியோகிக்க உதவினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தி கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்ற சில குழந்தைகள் ஈஷா தன்னார்வலர்கள் தங்கள் கிராமத்தில் நுழைவதைக் கண்டவுடன் தங்கள் ஆட்டத்தை நிறுத்தினர். ஒரு தன்னார்வலர் கூறினார், "அவர்கள் எங்களோடு இணைந்து எங்கள் பணிகளில் உதவினர். கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதிலும், ஒருவருக்கொருவர் அக்கறை எடுத்துக் கொள்வதிலும், இந்த குழந்தைகள் அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்."

ஆட்டோக்காரர்களின்தன்னார்வம்…

குழந்தையைப் போல அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ டிரைவர்களும் ஈஷா தன்னார்வலர்கள் அந்த கிராமங்களை அடைந்தவுடன் உதவிக்கு வருகின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம் வழங்குவது பொதுமக்களுக்கான அறிவிப்பை வழங்குவது உணவு மற்றும் நிலவேம்பு கசாயம் விநியோகிப்பது என பலப் பணிகளிலும் அவர்கள் உதவ முன்வந்துள்ளனர். இந்த செயல் பல கிராமங்களிலும் நடந்து வருகிறது. மக்கள் மற்றவர் உதவிக்காக முன்வந்துள்ளனர்.

blog_alternate_img

குமார் அண்ணா மற்றும் சசி அண்ணா

தன்னார்வலர்களின் தினசரி பணிகளில் உதவ முதன்முதலில் முன்வந்தவர்களில் குமார் அண்ணாவும் ஒருவர். கிராமப்புற மக்களை பாதுகாப்பதற்காக, கிராமங்களுக்கு சென்றடைந்த ஈஷா களக்குழுவுக்கு அவர் ஆதரவாக இருந்து வருகிறார்.

கிராமத்தில் இருந்து வந்த மற்றுமொரு தன்னார்வலர் சசி அண்ணா கூறினார், "சும்மா உட்கார்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதை கழித்துக் கொண்டிருந்த எனக்கு, சத்குரு இப்போது, பிறருக்கு ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்க வாய்ப்பு அளித்துள்ளார்."

ஈஷா தன்னார்வலர்களின் வாகனம் ஒன்றின் கதவு பழுதடைந்த போது சசி அண்ணா ஆட்டோ பழுது பார்ப்பதில் தனக்கிருந்த அறிவை நன்முறையில் பயன்படுத்தி அந்த கதவை சரிசெய்தார்.

தன்னார்வலர்கள் அவரின் அந்த சேவைக்கு பணம் வழங்கிய போது அதை வாங்க மறுத்த அவர், "பற்பல வழிகளில் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். இது நான் உங்களுக்கு திருப்பி செலுத்தும் ஒரு எளிய வாய்ப்பாக இருக்கட்டும்," என்று கூறினார்.

blog_alternate_img