இனிப்பு கசாயம்

தீத்திபாளையத்தில் இருக்கும் சிறுமி சாதனா தன்னார்வலர்களிடம் ஓடிவந்து நிலவேம்பு கசாயம் குடிக்க தருமாறு கேட்டாள். முகம் சுழிக்காமல், கசக்கிறது என்று புகார் சொல்லாமல் அந்த கசாயத்தை அவள் கடகடவென குடித்தாள்.

"கசாயம் இனிப்பாக உள்ளது. கசக்கவே இல்லை. அதை குடிக்கும் போது எனக்கு உமட்டவே இல்லை" என்று அவள் கூறினாள். பெரும்பாலான நாட்களில் சாதனாவும் அவள் தோழிகள் நால்வருமே வரிசையில் முதலாவதாக நின்று தினமும் நிலவேம்பு கசாயம் வாங்கி அருந்துவர். தீத்திபாளையத்தில் உள்ள மக்கள் உத்வேகம் பெரும் வகையில் அந்த குழந்தைகள் இருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் இந்த கசாயம் விநியோகம் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது. கிராம மக்கள் மட்டுமின்றி அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் அரசு அதிகாரிகள் என அனைவரும் இந்த செயலை பாராட்டுகின்றனர்.

blog_alternate_img

அன்பு இல்லத்தின் ஆசீர்வாதம்

அங்குள்ள கிராமங்களில் ஒன்றில் அமைந்துள்ள "அன்பு இல்லம்" என்ற முதியோர் இல்லத்தில் வாழும் மூதாட்டிகள் தங்களுக்கு தினமும் சரியான நேரத்துக்கு உணவு வழங்கும் நம் தன்னார்வலர்களைப் பாராட்டி அவர்களை ஆசீர்வதித்தனர். அங்குள்ள மூதாட்டி ஒருவர் தன் நன்றியைத் தெரிவித்ததோடு, தன்னார்வலர்களிடம் இவ்வாறு கூறினார், "நீங்கள் தினமும் சமைத்து எடுத்து வரும் சுவையான உணவுக்கு நன்றி. எங்களுடைய ஆசீர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கும்."

blog_alternate_img

மொழி ஒரு தடையில்லை

வைரஸைவெல்வோம் என்ற தீர்மானம் பல கிராமங்களில் மொழி தடைகளையும் கடந்துவிட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து கோவையில் தங்கியுள்ள பல மொழி பேசும் மக்களும் இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈஷா தன்னார்வலர்களோடு இணைந்து தங்களால் இயன்ற செயல்களை செய்து வருகின்றனர். பல தருணங்களில் புரியாத மொழிகளில் பேசுபவருக்கு தடையாக இருக்குமோ என்று எண்ணியபோது, அதற்கு இடம் கொடாமல் கையசைப்புகளும் தலையசைப்புகளும் கொண்டே பல வேலைகள் சிறப்பாக நிகழ்ந்தேறின. சமூகத்துக்கான இந்த சேவையில் எந்த ஒரு தடையும் இடராக இருக்கவில்லை. "மொழி ஒரு தடையே இல்லை. பல்வேறு மொழி பேசும் மக்கள் உணவு விநியோகிப்பதிலும், நிலவேம்பு கசாயம் வழங்குவதிலும் மற்றும் பல பணிகளிலும் நமக்கு உதவுகிறார்கள்" என ஈஷா தன்னார்வலர் ஒருவர் கூறினார்.

தீத்திபாளையத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கோகிலா இருவரும் நம் தன்னார்வலர்களுக்கு உற்சாகமான உதவியாளர்களாக உள்ளனர். தினமும் தன்னார்வலர்கள் அந்த கிராமத்தை அடைந்தவுடன் இந்த இருவரும் உடனே ஓடி வந்து அவர்களின் பணிகளை செவ்வனே செய்ய உற்சாகத்தோடு உதவி புரிந்து வருகிறார்கள். விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய சுவரொட்டி ஒட்டுவது, உணவு விநியோகிப்பது என அனைத்து பணிகளிலும் இந்த இருவரும் இணைந்து செயல்பட்டு தன்னார்வலர்கள் பணிகளை சுலபமாக்கி விடுகிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.