ஆஸ்துமா போயே போச்சு !
நாட்பட்ட நோய்கள் வந்துவிட்டாலே மன உளைச்சல் அதிகம்தான். அதுவும் ஆஸ்துமா வந்துவிட்டால், பாக்கெட்டில் இன்ஹேலரும், பர்ஸில் மாத்திரையும் இருப்பதைத் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அப்படி 30 வருடங்களாக ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு, ஈஷா யோகா செய்து, ஈஷா புத்துணர்வு மையத்தின் வைத்தியத்தால் ஆஸ்துமாவை விரட்டியடித்த தன் கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சௌந்தரா...
 
 

நாட்பட்ட நோய்கள் வந்துவிட்டாலே மன உளைச்சல் அதிகம்தான். அதுவும் ஆஸ்துமா வந்துவிட்டால், பாக்கெட்டில் இன்ஹேலரும், பர்ஸில் மாத்திரையும் இருப்பதைத் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அப்படி 30 வருடங்களாக ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு, ஈஷா யோகா செய்து, ஈஷா புத்துணர்வு மையத்தின் வைத்தியத்தால் ஆஸ்துமாவை விரட்டியடித்த தன் கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சௌந்தரா...

சௌந்தரா:

என் பெயர் சௌந்தரா, வயது 64. நான் கடந்த 30 வருடங்களாக ஆஸ்துமாவினால் (மூச்சிரைப்பு வீசிங்) மிகவும் சிரமப்பட்டேன். ஆரம்பத்தில் தூசியினால் மூச்சிரைப்பு எப்பொழுதாவது வரும். மருந்து, ஊசி மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும். ஆனால் பக்க விளைவாக கை, கால் நடுக்கம் வரும். வருடங்கள் ஆக ஆக அடிக்கடி மூச்சிரைப்பு வர ஆரம்பித்ததால் ஆங்கில மருத்துவர் இன்ஹேலர் உபயோகிக்கச் சொன்னார். மருந்து, ஊசி, இன்ஹேலர் மூலம் மூச்சிரைப்பை எப்படியோ கஷ்டப்பட்டு சமாளித்து வந்தேன்.

ஒரு வாரத்திலேயே மூச்சு விடுவதில் முன்னேற்றம் தெரிந்தது. மெதுவாக இன்ஹேலர் உபயோகிக்கும் அளவு குறைய ஆரம்பித்தது. யோகா பயிற்சியையும் தொடர்ந்தேன்.

ஆனால் கடந்த 2 வருடங்களாக மிகவும் அதிகமாக மூச்சிரைப்பு வர ஆரம்பித்தது. சிறிது தூரம் கூட நடக்க முடியாது. 2, 3 படி கூட ஏற முடியாது. அதிகமாக பேச முடியாது. மூச்சிரைப்பு வந்துவிடும். தூங்கும்போது கூட இன்ஹேலர் உபயோகிக்க ஆரம்பித்தேன். இன்ஹேலர் இல்லாமல் எங்கும் வெளியே செல்ல முடியாது. எனது பர்ஸில் எப்போதும் இன்ஹேலர் இருக்கும். எனது உடல் எடையும் 48 கிலோவிலிருந்து 38 கிலோவாக குறைந்தது. அடிக்கடி இன்ஹேலர் உபயோகித்ததால் நெஞ்சில் வலி, இன்ன பிற உடல் வேதனைகளால் மிகவும் சிரமப்பட்டேன். இரவில் கண்ணீருடன் “எனக்கு விமோசனமே கிடையாதா?” என்று அமர்ந்து இருப்பேன். ஆங்கில மருத்துவரும் ஏற்கனவே நான் எடுத்துவரும் மருந்துகள், ஊசி, இன்ஹேலருக்கு மேல் எந்த மருந்தும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

இதனிடையில் ஜுலை 2010ல் ஈஷா யோகா வகுப்பு செய்து அந்தப் பயிற்சி தினமும் இரண்டு வேளை தவறாமல் பயிற்சி செய்து வந்தேன். எனக்கு முன்பே என் மகள் ஈஷா வகுப்பு செய்திருந்தாள். அவள் அதற்கு 5 மாதங்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா புத்துணர்வு மையம் (சிகிச்சை மையம்) சென்றிருந்தாள். அப்பொழுது அங்குள்ள வரவேற்பறையில் “சித்த மருந்துகள்” அட்டவணை இருந்திருக்கிறது. அதில் ஆஸ்துமாவிற்கு மருந்து உள்ளது என்று படித்தவுடன் அங்கு இருக்கும் பிரம்மச்சாரிணியிடம் என்னைப் பற்றி விவரம் சொல்ல, அவர்களும் என்னை அங்கு வர சொன்னார்கள்.

நான் அங்கு சென்ற சமயம் அவர்கள் என்னைப் பரிசோதித்து விட்டு “30 ஆண்டுகளாக சிரமப்படுகிறீர்கள். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். முதலில் 2 மாதங்களுக்கு நாங்கள் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள். அதற்கு பிறகு வந்தால் தேவையான சிகிச்சையை செய்யலாம், அநேகமாக ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்,” என்று சொன்னார்கள்.

நானும் மிகுந்த நம்பிக்கையுடன், அந்த மருந்து என்னிடம் வந்து சேர்வதில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி, தினசரி அந்த மருந்தை சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு வாரத்திலேயே மூச்சு விடுவதில் முன்னேற்றம் தெரிந்தது. மெதுவாக இன்ஹேலர் உபயோகிக்கும் அளவு குறைய ஆரம்பித்தது. யோகா பயிற்சியையும் தொடர்ந்தேன்.

48 நாட்கள் முடிவதற்குள்ளேயே ஆங்கில மருந்துகளும் இன்ஹேலரும் தேவையில்லாமல் போனது. எனது உடல் எடையும் சிறிது சிறிதாக அதிகரித்து 45 கிலோவை அடைந்தேன். எனது உடல் முழுவதும் புத்துணர்வை உணர்ந்தேன். பிறகு அவர்கள் சொன்னபடி, இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈஷா புத்துணர்வு மையத்திற்கு சென்றேன். என் முன்னேற்றத்தை பார்த்து அங்குள்ள மருத்துவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு 3 நாட்கள் மட்டும் மசாஜ் போன்ற ஒரு தெரபியை எடுத்துக் கொண்டேன்.

இப்பொழுது ஆங்கில மருந்து, இன்ஹேலர் எதுவும் உபயோகிக்காமல் மிகவும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும், வயது குறைந்து போன உணர்வுடனும் இருக்கிறேன். கை நடுக்கம் போயே போய்விட்டது. எங்கள் பேமிலி டாக்டர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இப்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன். நன்றாக பசி எடுக்கிறது. சின்ன பிள்ளைகள் போல் விளையாட வேண்டும் போல இருக்கிறது. அவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் என்னிடம் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து காரணம் கேட்கிறார்கள்.

இதற்குக் காரணமான நான் வணங்கும் சத்குரு, லிங்கபைரவி மற்றும் ஈஷா புத்துணர்வு மையத்திற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். இப்பொழுது யாராவது எனது உறவினர்களோ, நண்பர்களோ எந்த நோயால் அவதிப்பட்டாலும், ஈஷா புத்துணர்வு மையம் பற்றிக் கூறி, அங்கு சிகிச்சை பெற சொல்லி வருகிறேன். அனைவருக்கும் நன்றி!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1