யோகா டயரி - கோடிக்கணக்கானவர்களை மாற்றிய உப-யோகா
உலக யோகா தினத்தை மையப்படுத்தி, கடந்த சில வாரங்களாக நாடுமுழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் உபயோகா வகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவ்வகுப்புகளை வழங்கியோர் மற்றும் பங்கேற்றோர் இவ்வகுப்பை எப்படி உணர்ந்தார்கள்? வாருங்கள் அவர்களிடமே கேட்போம்!
உலக யோகா தினத்தை மையப்படுத்தி, கடந்த சில வாரங்களாக நாடுமுழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் உபயோகா வகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவ்வகுப்புகளை வழங்கியோர் மற்றும் பங்கேற்றோர் இவ்வகுப்பை எப்படி உணர்ந்தார்கள்? வாருங்கள் அவர்களிடமே கேட்போம்!
#45 ஐஸ் க்ரீம் விற்பனையாளர்களையும் ஈர்த்த யோகா!
#44 குழந்தைகளுடன் மதிய உணவு!
#43 நியூட்டனின் ஆப்பிளும் யோகாவும்!
#42 யோகா திரைப்படத்திற்கு அரங்கு நிறைந்த காட்சி!
#41 பரபரப்பான ஓட்டமும், சுமூகமான வகுப்பும்!
#40 சத்குருவின் குரலால் ஈர்க்கப்பட்ட மாணவன்!
#39 நிகழ்காலத்தில் வாழும் குழந்தைகள்!
#38 ஒரே நாளில் பறந்த வலி!
#37 உடைந்த எலும்புகள், உடையாத உறுதி!
#36 கிராம மக்களின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர்
#35 குழந்தை பருவத்தில் யோகா...
#34 எதிர்ப்பு கோஷம் ஆதரவானது!
#33 உற்சாக வெள்ளத்தில் கோட்டா!
#32 நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த அற்புத பரிமாற்றம்!
#31 காவல் துறையினரிடம் யோகா தந்த மாற்றம்!
#30 யோகாவைப் புரிந்துகொண்டேன்!
#29 உணர்வுப்பூர்வமாகவும் நன்றியின் வெளிப்பாடாகவும் குழந்தைகள்!
#28 சத்குருவின் பேச்சின் தாக்கம்!
#27 ஒரு நாள்முழுக்க கொண்டாட்டம்!
#26 நான் செய்த உன்னத காரியம்!
#25 குழந்தைகளின் வாழ்வில் இனி யோகா!
#24 மோசமான சூழல் உற்சாகத்தை தடுக்குமா?!
#23 நான் புதிதாகத் துவங்குகிறேன்!
#22 அது சினிமா அல்ல, அதையும் தாண்டியது!
#21 இந்த போலீஸ்காரருக்கு நமது சல்யூட்!
#20 வீடு வீடாக கதவுகள் தட்டப்பட்டன!
#19 சக்கர நாற்காலியில் கற்றுக்கொண்ட உபயோகா!
#18 மதங்களுக்கு அப்பாற்பட்டது, யோகா!
#17 உபயோகா, சற்று வித்தியாசம்!
#16 கல்வியில் மேம்பாடு தரும் உபயோகா!
#15 வாய்க்குள் சிரிப்பை அடக்கிய சத்தத்துடன் யோகா!
#14 மாணவர்கள் பள்ளிக்கு வரும் காரணம் மாறியிருக்கிறது
#13 எளிய யோகா, எப்படி உத்கேகம் தருகிறது?!
#12 மரம் நடுவதும், ஏழைகளுக்கு உதவுவதும் யோகா!
#11 பள்ளிக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணம்!
#10 குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!
#9 இப்போது உயிர்ப்பாக...
#8 குழந்தைகள் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம்
#7 வெள்ளிக்கிழமை மாலை... வேகமாக வீட்டிற்கு!
#6 ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஆனந்தம்!
#5 தெய்வீகப் புன்னகையை வழங்கிய சிறப்பான ஒரு ஞாயிறு
#4 பாடத்தைக் காட்டிலும் உபயோகா வகுப்பில் மாணவர்கள் காட்டிய ஆர்வம்
#3 யோகா எனது நேசத்திற்குரியது
#2 இம்மாணவர்களை தவறாகப் புரிந்துகொண்டதை அப்போதே உணர்ந்தேன்
#1 எங்களை இதற்குமுன் யாரும் யோகாவிற்காக அணுகியதில்லை
#1 எங்களை இதற்குமுன் யாரும் யோகாவிற்காக அணுகியதில்லை
“நகர்ப்புறத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமப்புறப் பகுதியான எங்களை இதற்குமுன் யாரும் யோகாவிற்காக அணுகியதில்லை. ஈஷாவிலிருந்து உபயோகா வகுப்புகள் வழங்க இங்கே வந்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கவுள்ளோம்!” -தலைமை ஆசிரியர், கிளியூர் அரசு பள்ளி, கிளியூர் கிராமம், (திருச்சிராப்பள்ளி)
#2 இம்மாணவர்களை தவறாகப் புரிந்துகொண்டதை அப்போதே உணர்ந்தேன்
“இந்த மாணவர்கள் உண்மையிலேயே யோகாவில் ஆர்வமாக உள்ளார்களா அல்லது அவர்களின் ஆசியர்கள் கூறினார்கள் என்பதற்காக வந்துள்ளார்களா என்பது முதலில் எனக்கு ஒரு புதிரான கேள்வியாகவே இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இதற்கான விடை எனக்குக் கிடைத்துவிட்டது.
நான் அடுத்த வகுப்பு எடுப்பதற்கான ஆலோசனையில் ஹாலிற்கு வெளியில் சக தன்னார்வத் தொண்டர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வகுப்பு நிறைவடைந்தவுடன் ஒரு மாணவி என்னிடம் வந்து, உபயோகா குறிப்புகள் அடங்கிய CDயின் விலை குறித்து கேட்டாள். நான் அவளிடம் சொன்னதும், அவளது சிறிய பணப்பையிலிருந்து ரூ10 மற்றும் சில ஒரு ரூபாய் நாணயங்களை தேடி எடுத்து CDயை வாங்கிச் சென்றாள். நான் அவளிடம் தொகையை வரவு வைக்கும் பொருட்டு பெயரைக் கேட்டபோது, சுராஜுனிஷா எனத் தெரிவித்தாள். நான் முதலில் இம்மாணவர்களை தவறாகப் புரிந்துகொண்டதை அப்போதே உணர்ந்தேன்.” -ஜோதிபாசு, தன்னார்வத் தொண்டர். (சுமார் 2000 குழந்தைகளுக்கு உபயோகா வகுப்புகளை வழங்கியுள்ளார்)
#3 யோகா எனது நேசத்திற்குரியது
“ஏனென்று தெரியவில்லை, ஆனால் நான் மிகவும் அருமையாக உணர்கிறேன். யோகா எனது நேசத்திற்குரியது!” -வகுப்பில் கலந்துகொண்ட 9 வயது குழந்தை, SOS children’s village of India, சென்னை.
#4 பாடத்தைக் காட்டிலும் உபயோகா வகுப்பில் மாணவர்கள் காட்டிய ஆர்வம்
“நான் என்னுடைய வீட்டிலிருந்து LCD டிவியை கொண்டுவந்து வகுப்பில் பொருத்தினேன். அங்கு திரையிடல் மூலம் உபயோகா வகுப்பு வழங்கப்பட உள்ளதை அறிந்துகொண்ட மாணவர்கள் உடனே மிகுந்த ஆர்வம் காட்டினர். வழக்கமாக நாங்கள் எடுக்கும் பாட வகுப்பில் ஆர்வம் காட்டுவதைக் காட்டிலும் பல மாணவர்கள் DVD திரையிடல் மூலம் யோகா கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர். அன்று 100% வருகைப் பதிவு பதிவானது!” -ஷ்யாம் சிங், ஸ்மரக் கன்யா இன்ட்டர் காலேஜ், உத்திர பிரதேசம்
#5 தெய்வீகப் புன்னகையை வழங்கிய சிறப்பான ஒரு ஞாயிறு
‘Twist with Upa-Yoga at Olive in Savers’ என்ற தலைப்பில் சென்னை டச்சஸ் கிளப் உயர்வகுப்பு உறுப்பினர்களுக்காக உபயோகா வகுப்புகள் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் மூலம் கிளப் உறுப்பினர்கள் பலர் தாங்கள் வார்த்தையில் அடங்காத உன்னத அனுபவத்தை உணர்ந்ததாக பகிர்ந்துகொண்டனர். அவர்கள் அந்த அனுபவத்தை இன்னும் அதிகமாகப் பெற வேண்டும் என விரும்பினர். அன்றைய நாள் அவர்களுக்கு ஒரு தெய்வீகப் புன்னகையை வழங்கிய சிறப்பான ஒரு ஞாயிற்றுக்கிழமையாக மாறியது. -ரம்யா, ஈஷா தன்னார்வத் தொண்டர்.
#6 ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஆனந்தம்!
எங்கள் குழந்தைகள் வாழ்க்கையை ஈடுபாட்டுடன் வாழ்வதற்காகவும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர்வதற்காகவும் இதுபோன்ற ஒன்றை எதிர்பார்த்திருந்தோம். இந்த மாலைப் பொழுதில் சுமார் ஒன்றரை மணி நேரம் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாய் அமைந்தது. நான் இதனை ஒரு துவக்கமாகவே பார்க்கிறேன். இந்த உபயோகா வகுப்பு நிச்சயம் இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன், கூடவே எங்களுடைய வாழ்விலும்! - சகோதரி சகாயா டேவிட், புனித.கேத்தரின் ஆதரவற்ற பெண்குழந்தைகள் இல்லம், மும்பை
#7 வெள்ளிக்கிழமை மாலை... வேகமாக வீட்டிற்கு!
அன்று வெள்ளிக்கிழமை மாலை! வழக்கமாக 5:30 மணிக்கெல்லாம் அனைவரும் வீட்டிற்கு வேகமாக செல்லும் மும்முரத்தில் இருப்பார்கள். ஆனால், நாங்கள் ஏற்கனவே உபயோகா வகுப்பு இருப்பதாக அறிவித்திருந்ததால், அவர்கள் அனைவரும் ஆர்வமாகவும் திறந்த மனப்பான்மையுடனும் வகுப்பில் கலந்துகொண்டனர். வகுப்பு முடிந்ததும், பல ஆனந்தமான முகங்களைக் காண்பது மிகவும் அற்புத உணர்வாக இருந்தது. இது வெறும் ஒரு உடற்பயிற்சியைப் போல இருக்கும் என எண்ணி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை வழங்கியது! - ஈஷா தன்னார்வத் தொண்டர் ( டிலோய்ட்டி, ஹைதராபாத்தில் சுமார் 222 மேலாளர்களுக்கு உபயோகா கற்றுத்தரப்பட்டுள்ளது!)
#8 குழந்தைகள் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம்
50 வயதைத் தாண்டியவர்கள் மூட்டு வலி, கால் வலி, கீழே குத்த வைத்து உட்கார முடியவில்லை என புலம்புவதைப் பார்த்திருக்கிறோம்! ஆனால், 10 வயதிலிருக்கும் குழந்தைகள் சிலர் யோக நமஸ்காரப் பயிற்சியை கற்றுக்கொண்டிருக்கையில், இப்படி சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. ‘டென்ஷன், மன அழுத்தம்’ போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதைப் பார்த்த எனக்கு இதயம் உடைவதுபோல் ஆகிவிட்டது. சமூகம் இதுகுறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது! வருங்கால தலைமுறையான குழந்தைகள் அனைவருக்கும் யோகா சென்று சேரவேண்டிய அவசியம் உள்ளது. உபயோகா கற்றுக்கொண்ட பின்னர், குழந்தைகள் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, மன அழுத்தம் நீங்கி அமைதியை உணர்வதாக பகிர்ந்துகொண்டனர்.
-கீதா, ஈஷா தன்னார்வத் தொண்டர், 6th கிரேடர்ஸ் மெரிடியன் ஸ்கூல்
#9 இப்போது உயிர்ப்பாக...
“இப்போது உயிர்ப்புடன் இருப்பதாக உணர்கிறோம்” - தமிழ்நாடு, வேலம்மாள் வித்யாசிரமம் கல்லூரிகள் குழுமத்திலிருந்து கலந்து கொண்ட 2000 மாணவர்களில் ஒருவர் இப்படி பகிர்ந்துகொண்டார்.
#10 குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!
“நாராயணா ஸ்கூலில் உபயோகா வகுப்பு வழங்கியபோது, ஒரு சிறுவன் மிகவும் ஈடுபாட்டுடன் கவனத்துடனும் பயிற்சியைக் கற்றுக்கொண்டதைப் பார்த்தேன். வகுப்பு முடிந்ததும் அவனிடம் வகுப்பு குறித்த அனுபவத்தைச் சொல்லச் சொல்லி, பதிவுசெய்துகொள்ளலாம் என நினத்தேன். ஆனால், அவன் எனக்கு ஒரு அதிர்ச்சிகொடுக்க காத்திருந்தான். நான் அவனிடம் கேட்டபோது, ‘நான் ஏன் என்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்? அது என்னுடைய அனுபவம். அதனை நான் யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டேன். இது எனக்கே உரித்தான சுய அனுபவம்.’ என்று அவன் கூறியது எனக்கு வியப்பையும் குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதையும் புரியவைத்தது.”
-பவ்யா, ஈஷா தன்னார்வத் தொண்டர்.
#11 பள்ளிக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணம்!
“இப்போது எங்களுக்கு பள்ளிக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணம் கிடைத்துள்ளது. இது எங்களை மேலும் சிறப்படையச் செய்யும்”
- உபயோகா கற்றிக்கொண்ட மாணவர், அரசுப்பள்ளி, பட்டா பரசுல், உத்திர பிரதேசம்
#12 மரம் நடுவதும், ஏழைகளுக்கு உதவுவதும் யோகா!
“யோகா உலகத்தில் அமைதியைக் கொண்டுவரும். மரம் நடுவதும், ஏழைகளுக்கு உதவுவது என அனைத்தும் யோகாதான்!”
- மாணவர், அச்சல ராஜா நகர், பெங்களூரூ
#13 எளிய யோகா, எப்படி உத்கேகம் தருகிறது?!
“இந்த எளிய யோகா எப்படி இந்த மொத்த குழுவினருக்கும் உத்கேகம் தருகிறது என பேயர் R&D மையத்தின் (Bayer R&D) தலைமைக் குழு மற்றும் முதுநிலை மேலாளர்கள் ஆச்சரியப்பட்டனர். முதலில் குழுவினர் இதுகுறித்து விருப்பமில்லாமல் இருந்தாலும், இப்போது அவர்கள் தொடர்ந்து உபயோகா வகுப்புகளை வழங்குமாறு கேட்கின்றனர். நிகழ்ச்சியில், Bayer நினைவுப் பரிசையும் ஆரோக்கியமான சுவைமிகுந்த மதிய உணவையும் வழங்கியது குறித்து அவர்கள் மனம் நெகிழ்ந்தனர்.”
- சுபாசிஸ் கோஷ், ஈஷா தன்னார்வத் தொண்டர்
#14 மாணவர்கள் பள்ளிக்கு வரும் காரணம் மாறியிருக்கிறது
“பள்ளி மாணவர்களில் சிலர் மதிய உணவிற்காக பள்ளிக்கூடம் வரும் நிலை இருக்கும். ஆனால், இப்போது உபயோக பயிற்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கு வருவதைப் பார்க்கிறோம்.” - ஆசிரியர், அரசுப் பள்ளி கிஸான் மஜ்தூர் ஆதர்ஷ் கல்லூரி, அஜய்ப்பூர், உத்திரபிரதேசம்.
#15 வாய்க்குள் சிரிப்பை அடக்கிய சத்தத்துடன் யோகா!
“அந்த மாணவிகள் தங்கள் சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு உபயோகா கற்கத்துவங்கினர். கழுத்துப் பயிற்சியின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு ஏதோ வேடிக்கையும் சிரிப்புமாக இருந்தது. சத்குருவின் குரலில் “ஆ” சப்தம் வரும்போது சில மாணவிகள் பொத்திவைத்த சிரிப்புச் சத்தம் தெளிவாகவே கேட்டது. ஆனால், ஷாம்பவி முத்ரா பயிற்சி கற்றுக்கொண்டபோது, அவர்களிடம் அபரிமிதமான மாற்றத்தைக் காணமுடிந்தது. ஆழ்ந்த அமைதியை அவர்களிடத்தில் கண்டேன். அவர்களை ஆழமாக ஏதோ ஒன்று தொட்டிருந்தது. சிரிப்பும் கேலியுமாக துவங்கிய மாணவிகள், அற்புத பரிமாற்றம் அடைந்ததைக் கண்டு வியந்தேன்!”
- ஈஷா தன்னார்வத் தொண்டர்
#16 கல்வியில் மேம்பாடு தரும் உபயோகா!
“நான் மிகவும் அமைதியாக உணர்கிறேன். நான் தொடர்ந்து தியானம் செய்தால், மிகவும் சாந்தமாக இருப்பேன் மற்றும் இது என் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.
- மாணவி ஃபாத்திமா, - RV பெண்கள் பள்ளி ஜெயாநகர், பெங்களூரூ
#17 உபயோகா, சற்று வித்தியாசம்!
“நான் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் வழங்கும் பல்வேறு வகையான யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது சற்று வித்தியாசமானது! இறுதியாக நான் இந்த உபயோகாவைக் கற்றுக்கொண்டது எனது அதிர்ஷ்டம்தான்! நான் இதை தொடர்ந்து பயிற்சிசெய்து பலன்பெற விரும்புகிறேன். தன்னார்வத் தொண்டர்கள் இதனை மென்மேலும் அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்த எளிய சக்திவாய்ந்த பயிற்சியை வழங்கிய சத்குருவிற்கு எனது நன்றிகள்!”
- உபயோகா பங்கேற்பாளர், ஜெய்ப்பூர்
#18 மதங்களுக்கு அப்பாற்பட்டது, யோகா!
கொச்சியிலுள்ள தேவாலயத்தில் உபயோகா வகுப்பு...
நான் லிசி ஜேக்கப், பிறப்பால் ஒரு கிறிஸ்துவப் பெண். 2014ல் நான் ஈஷா யோகா வகுப்பு செய்தேன். ஈஷா யோகாவை பயிற்சி செய்யத் துவங்கிய பின்னர், என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது இந்த ஈஷா யோகா என்பதை நான் உணர்ந்தேன். மேலும், அதனால் என்னுடைய மதம் சார்ந்த நம்பிக்கையும் குறைந்துவிடவில்லை.
நான் தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வந்திருப்போருக்கு ஈஷா உபயோகா வகுப்பு வழங்கும்போது, மக்கள் முழுமையான ஈடுபாட்டுடன் நான் கூறுவதை கவனமாகக் கேட்பார்கள். அந்த தேவாலயத்தின் தந்தை, அருமையான மனிதர்! எங்களுக்கு அவரே தேநீர் மற்றும் வறுத்த கடலைகளை பரிமாறினார். ஈஷாவைப் பற்றியும் சத்குருவைப் பற்றியும் கேள்விப்பட்ட பிறகு, வகுப்பில் கலந்துகொள்வதற்கு நிறைய மக்களை அவர் ஊக்கப்படுத்தினார்.
#19 சக்கர நாற்காலியில் கற்றுக்கொண்ட உபயோகா!
பன்ஸால் நிறுவனங்களின் நிறுவனரான திரு.பன்ஸால் அவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஈஷா வழங்கிய உபயோகா வகுப்பில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் வெளிப்படுத்திய பகிர்தல் மனதை தொடும் விதமாக அமைந்தது. அவரது உணர்வு வார்த்தைகளில் அடங்காததாய், அற்புத அனுபவமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். தனது வாழ்வில் நிகழ்ந்த சிறந்த நிகழ்வு என்றால், அது இந்த வகுப்புதான் என அவர் பகிர்ந்துகொண்டார். பல வருடங்களுக்குப் பின் திரு.பன்ஸால் அவர்கள் கலந்துகொள்ளும் ஒரு பொதுநிகழ்ச்சி இது என்பதை பின்னர் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம்!
#20 வீடு வீடாக கதவுகள் தட்டப்பட்டன!
உலக யோகா தினத்திற்காக எங்களில் பலரும் அயராது செயல்களை செய்துகொண்டிருந்தாலும், ஜூன் 19 வரை எங்களிடம் தீவிரம் சற்று குறைவாகவே இருந்ததாக உணர்ந்தோம். ஆனால், அடுத்த 2 நாட்கள் நாங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு முழுமையாக செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தோம்.
ஒவ்வொரு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டுவதென முடிவெடுத்தோம். ரமா அக்கா, மாலினி அக்கா மற்றும் எங்கள் குழுவின் அர்ப்பணிப்புமிக்க தன்னார்வத் தொண்டர்கள் என நகர்ப்பகுதி முழுக்க வீடு வீடாகச் சென்று, இயன்றவரை IDY பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்! மற்றவையெல்லாம் தானாக ஒரு மாயாஜாலம் போல நிகழ்ந்தன. அநேக கார்ப்பரேசன் பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் எங்களுக்கு யோகா வகுப்பு வழங்குவதற்கான அனுமதி கிடைத்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கிறிஸ்துவ மத பிரார்த்தனைக் குழுவின் அமைப்பின் கிழ் இயங்கும் புனித.மைக்கேல் பள்ளியில் வகுப்பு நிகழ்த்துவதற்கான அனுமதி கிடைத்தது.
எவ்வளவு எண்ணிக்கையிலான பணிகளை செய்கிறோம் என்பதைத் தாண்டி, குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஒரு சிறிய மாற்றத்தை உருவாக்குகிறோம் என்பது மிகப்பெரிய ஆனந்தத்தை தருகிறது!
-ஈஷா தன்னார்வத் தொண்டர், அடையாறு
#21 இந்த போலீஸ்காரருக்கு நமது சல்யூட்!
நிகழ்ச்சியின் இறுதியில் போலீஸ் பயிற்சி அகாடமியின் முதல்வர் மாரல் அவர்கள் உரையாற்றுவதற்காக மேடைக்கு வந்தார். “நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 500 போலீஸ்காரர்களுக்காவது இதனை கற்றுத்தரவேண்டும். இதற்கான பிரதிநிதி நீங்கள்தான்!” எனக்கூறி, அவர்களிடத்தில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தினார். அதன்பின் அவர் பேச்சுவாக்கில், போலீஸ்காரர்கள் இதில் ஆர்வம் காண்பிக்கும்பட்சத்தில் இந்த திறமையானது ஒரு சிறப்பு திறமையாக அங்கீகரிக்கப்படும் எனக் கூறியதோடு, அவர்கள் ஈஷா ஆசிரியர்களாக இருக்கும்போது, அவர்களின் இடம் மாற்றம் தவிர்க்கப்படும் எனவும் கூறி பங்கேற்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
- ஈஷா தன்னார்வத் தொண்டர், போலீஸ் அகாடமி
#22 அது சினிமா அல்ல, அதையும் தாண்டியது!
இந்த படத்தில் நடித்த பிறகு (IDYக்காக ஈஷா ‘Life – 70 MM’ எனும் படத்தை ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியிட்டது), இதில் அனைத்துமே இலகுவாக நடந்துமுடிந்துள்ளதை பார்க்கமுடிகிறது. படம் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிர்ஷ்டவசமாக பெங்களூரூவில் இந்த படத்தை சென்று பார்ப்பதற்கான விமான டிக்கெட் என்னிடம் கிடைத்தது. திரையரங்கில் திரைப்படம் துவங்கியதும் நான் உணர்ந்துகொண்டேன், இது வெறும் ஒரு திரைப்படம் இல்லையென்று! அந்த இசை, கதை, உரையாடல்கள், பயிற்சிகள், பெரிய திரையில் தோன்றிய சத்குருவின் தோற்றம் என அனைத்துமே ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கும் அனுபவத்தை தாண்டி முற்றிலும் வேறுபட்டதாய் அமைந்தது.
அந்த அரங்கத்தில் சக்குருவின் சக்திவாய்ந்த இருப்பு முழுமையாய் இருந்தது. அந்த ஒலியமைப்பில் சத்குருவின் குரல் எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவமாய் இருந்தது. எனது கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; கண்களைத் திறக்கவும் முடியவில்லை! அது இன்னொருமுறை தீட்சை பெற்ற அனுபவம்போல இருந்தது. அங்கு நேரம் போனதை என்னால் அறியமுடியவில்லை. நான் காலம் மற்றும் இடம் ஆகியவற்றைக் கடந்து இருப்பதாக உணர்ந்தேன். இதற்கெல்லாம் மேலாக, திரைப்படத்தின் இறுதியில் பொதுமக்களை திரைப்படம் வெகுவாக தொட்டிருப்பதை பார்க்கமுடிந்தது. நடிகர்களின் நடிப்பு அவர்களை சென்றடைந்திருந்தது, உபயோகப் பயிற்சிகள் மற்றும் நேர்த்தியான பின்னணி இசையுடன் கூடிய சத்குருவின் பேச்சு ஆகியவையும் பார்வையாளர்களுக்கு சரியாக உள்வாங்க முடிந்தது. இதை உருவாக்கி முடிக்க எங்களுக்கு 21 நாட்களே ஆகியிருந்தாலும் அந்த சினிமா பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருப்பதைப் பார்க்கும்போது அது அற்புத உணர்வாக இருந்தது. அனைத்தும் சத்குருவின் அருளாலேயே நிகழ்ந்தது!
- மேரி, தன்னார்வத்தொண்டர்
#23 நான் புதிதாகத் துவங்குகிறேன்!
கடந்த வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நிகழ்ந்து, நான் மருத்துவமனையில் இருந்தேன். அதன்பிறகு சக்கர நாற்காலியின் மூலமும் ஊன்றுகோல் மூலமும் தான் நடமாடிவந்தேன்.
சமீபத்தில் உகாண்டாவில் நிகழ்ந்த இன்னர் இஞ்சினியரிங் வகுப்பில் ஒரு தன்னார்வத் தொண்டராக கலந்துகொண்டேன். இது சத்குரு எனக்காக வழங்கிய ஒரு வாய்ப்பு! இடுப்பில் எனக்குள்ள வலிகுறித்த பயத்தைப் பற்றி நான் சத்குருவிடம் பகிர்ந்துகொண்டேன் (தன்னார்வத் தொண்டர் சந்திப்பில்). அவர் இப்படி சொல்லி எனை உற்சாகப்படுத்தினார் “இது மெதுவாக மீண்டும் துவங்கும் நேரம்”. ஆம், உண்மையில் நான் துவங்கிவிட்டேன்!
இன்று உலக யோகா தினக் கொண்டாட்டத்தில், காலை 5:30 மணிக்கு நிகழ்ந்த வகுப்பில் கலந்துகொண்டேன். நான் அங்கிருந்த தரைவிரிப்பில் அமர்ந்தபோது எனது இடுப்புவலி முற்றிலும் மறைந்துவிட்டது. அன்றைய நாள் எனக்கு மிகவும் அற்புதமாகவும் செயல்திறன் மிக்க ஒன்றாகவும் அமைந்தது. எனது கால்கள் பலமுடையதாக இருப்பதையும், வலி இல்லாமல் இருப்பதையும் உணர்ந்தேன். நான் முற்றிலும் குணமானதுடன், புது நம்பிக்கையுடனும் உணர்கிறேன். வானில் பறப்பதுபோல் உணர்கிறேன்! எனது சக பணியாளர்கள் என்னிடம், நான் முன்புபோல் ஒரு நோயாளியாக தோற்றமளிக்காமல், புதுப் பொலிவுடன் திகழ்வதாக கூறினர்.
- கோலின், உகாண்டா ஈஷா தன்னார்வத் தொண்டர்.
#24 மோசமான சூழல் உற்சாகத்தை தடுக்குமா?!
கோட்டா எனும் இடத்தில் நிகழ்ந்த காலைநேர உபயோகா நிகழ்ச்சி அசாதாரணமான ஒன்றாக அமைந்தது! ஈஷாவின் மேல்நிலை வகுப்புகளில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களைப் போல மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் அந்த பங்கேற்பாளர்கள் இருந்தனர். ஆனால், அதற்கேற்றாற்போல சூழ்நிலை இல்லை! திடீரென்று மின்சாரத் தடை நேர்ந்தது. அதனால் நிகழ்ச்சி தாமதமானது. காற்று வெப்பமாகவும் வறண்ட காற்றாகவும் வீசியது! மின்விசிறி இல்லாததால் புழுக்கம் நிலவியது. ஆனால், இந்த சூழ்நிலைகள் எதுவும் பங்கேற்பாளர்களின் உற்சாகத்தைக் குறைத்துவிடவில்லை! பன்ஸால் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளர்களிடம் அற்புதமான உத்வேகமும் ஈடுபாடும் காணப்பட்டது. அவர்கள் தங்கள் நிர்வாக குழுவினருக்கென மாலை வகுப்பை பிரத்யேகமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இது தெய்வீகத்தின் அற்புதம்!
#25 குழந்தைகளின் வாழ்வில் இனி யோகா!
மும்பையின் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் உலக யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் குழந்தைகளிடத்தில் உபயோகாவை கொண்டு சேர்த்துள்ளனர்.
“இது என்ன சுனாமியா?!” எனக் கேட்கும் அளவிற்கு அது ஒரு பெரிய அலையாக அங்கு உருவெடுத்துள்ளது! குழந்தைகள் அமைதியாக வகுப்பினை அனுபவித்து கற்றுக்கொண்டனர். சத்குருவின் பேச்சையும் பயிற்சியையும் அவர்கள் ஆழ்ந்து கவனித்தனர். இந்த வகுப்பு அவர்களின் வாழ்க்கை முழுக்க உடனிருக்கும் என நம்புகிறேன்!
- ஈஷா தன்னார்வத்தொண்டர்
#26 நான் செய்த உன்னத காரியம்!
நான் இதுவரை செய்த காரியங்களிலேயே இதுதான் மிக உன்னதமான காரியம்! இன்றைய தினம்தான் என் வாழ்வில் சிறந்த தினம்! இப்படி என்னை இந்த உபயோகா ஆசிரியர் பயிற்சி உணரச்செய்தது! இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது எவ்வளவு அற்புதமானது என்பதை வார்த்தைகளால் என்னால் வெளிப்படுத்த இயலவில்லை! வகுப்பினை நான் வழங்கி முடித்ததும், பங்கேற்பாளர்கள் அனைவரும் என்னிடம் வருகிறார்கள், என்னைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள், எனக்கும் ஈஷாவிற்குமான தொடர்பு பற்றி கேட்டறிகிறார்கள்! குழந்தைகள் என்னை மிகவும் விரும்புகிறார்கள்! அவர்கள் என்னை கட்டியணைத்து, என்னை மிகவும் விரும்புவதாகக் கூறி, தினமும் வரும்படி கேட்கிறார்கள்!
- ஈஷா தன்னார்வத் தொண்டர் மும்பை.
#27 ஒரு நாள்முழுக்க கொண்டாட்டம்!
முந்தைய நாள் இரவு, தன்னார்வத் தொண்டர்கள் தங்களால் இயன்றவரை அதிகமான மக்களை சென்றடையும்படியாக கடினமான ஒரு கால அட்டவணையை வகுத்து அனைவரிடமும் வழங்கியிருந்தோம்! பெரும்பாலானவர்வகள் வகுப்பு வழங்குவதற்கான அடிப்படையான பயிற்சியை மட்டுமே பெற்றிருந்தனர். நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாளக்கூடிய அளவிற்கு பயிற்சி இல்லை! எங்களிடமிருந்த கருவிகள் ‘ஈடுபாடும் ஆர்வமும்’தான்!
Subscribe
காலை 7 மணிக்கு நாங்கள் பல்வேறு திசைகளில் பயணித்தோம். பல பள்ளிக்கூடங்கள் வரவேற்பளித்தன; தங்கள் பள்ளி வளாகத்தில் வகுப்பை வழங்க அனுமதி வழங்கினர். சில பள்ளிகளில் தங்கள் ஆசிரியர்களுக்கும் இவ்வகுப்பினை வழங்கும்படி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டனர். மேலும், சில பள்ளிகளில் தங்கள் ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு வகுப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். பெரும்பாலானோர் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தில் இதனை சேர்த்துக்கொள்ளப்போவதாகத் தெரிவித்தனர்.
உபயோகா வகுப்பு கற்பிப்பதற்கான பயிற்சி மேற்கொள்ளாத சில தன்னார்வத் தொண்டர்கள் உணவு ஏற்பாடு செய்தல் போன்ற பிற வகையிலான உதவிகள் செய்வதன் மூலம் இந்த விழாவை சிறப்பாக நடத்த உறுதுணைபுரிந்தனர்.
அனைத்திற்கும் மேலாக மாலை 6 மணிக்கு உலக யோகா தினத்திற்காக ஈஷா வெளியிட்டுள்ள ‘Life – 70 MM’ எனும் சினிமாவை பார்ப்பதற்காக நாங்கள் சென்றோம். அது அருளில் தோய்ந்த ஒரு அற்புதமான படம்! எங்களில் பலர் ஆனந்தக் கண்ணீருடன் படத்தைப் பார்த்தோம். இரவு 11:30 மணிக்கு இதயத்தில் பக்தியும் அன்பும் நிரம்பியபடி விடைபெற்றோம்!
#28 சத்குருவின் பேச்சின் தாக்கம்!
உலக யோகா தினத்திற்காக தன்னார்வத் தொண்டர்களாகிய நாங்கள் பள்ளிகளில் உபயோகா வகுப்புகளை வழங்குவதற்காக, பல்வேறு பகுதிகளில் பள்ளிகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம். மிகப்பெரிய சிரமங்களுக்கு மத்தியில், ஒரு பகுதியில் இருக்கும் பள்ளியை அணுகலாம் என அங்கு ஆர்வத்துடன் சென்றபோது, அங்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வெளியில் சென்றுவிட்டதை அறிந்தோம்! அங்கே ஒரே ஒரு பள்ளி ஆசிரியர் இருப்பதைக் கண்டோம். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு சத்குருவைப் பற்றி அறிமுகம் செய்தோம். “ஓ அந்த வெள்ளை தாடி வைத்த குரு தானே?! அவர் ஒருமுறை சனி கோயிலில் ஏன் பெண்கள் நுழையக் கூடாது என விளக்கிக்கொண்டிருந்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் அவரது பேச்சுக்களை தொடர்ந்து கேட்டுவருகிறேன்.” என கூறிய அவரிடம் சத்குருவின் ஆழம் மிக்க கருத்துக்களின் தாக்கம் இருப்பதைக் காணமுடிந்தது. பின் அவர் மனநிறைவுடன் எங்களை வழியனுப்பி வைத்தார்.
#29 உணர்வுப்பூர்வமாகவும் நன்றியின் வெளிப்பாடாகவும் குழந்தைகள்!
நேற்றைய எனது முதல்நாள் உபயோகா வகுப்பை நான் வழங்கினேன். அங்கே குழந்தைகளும் ஆசிரியர்களும் ஒன்றாக முழு கவனத்துடன் கலந்துகொண்டதைப் பார்ப்பது மிக அழகான நிகழ்வாக அமைந்தது. அந்த குழந்தைகள் வகுப்பின் இறுதியில் மிகவும் உணர்வுப் பூர்வமாகவும் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. சுமார் 20 மாணவர்கள் என்னைச் சுற்றி சூழ்ந்துகொண்டு, அந்த அற்புத வகுப்பை வழங்கியதற்காக எங்களுக்கு நன்றி கூறினார்கள்!
- மஞ்சுளா, விஜயாநகர், B.E.T. கான்வென்ட், RR நகர், பெங்களூரூ
#30 யோகாவைப் புரிந்துகொண்டேன்!
ஒரு இந்திய பிரஜையாக இருந்துகொண்டு நான் யோகா என்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை! உபயோகா வகுப்பிற்கு சென்றுவந்த பிறகு நான் யோகா பற்றி புரிந்துகொண்டது ஒரு அனுபவப்பூர்வமான புரிதலாக இருந்தது. யோகா என்பது முழுமையான அன்பும் ஆனந்தமும் என்று நான் புரிந்துகொண்டேன். யோகா என்பது உடல் ஆரோக்கியத்தை நல்கும் ஒரு கருவி என்ற நிலையில் மட்டும் இருப்பதன்று!
- உபயோகா பங்கேற்பாளர், ஜெய்ப்பூர்
#31 காவல் துறையினரிடம் யோகா தந்த மாற்றம்!
நான் ஒரு தன்னார்வத் தொண்டராக ஒரு நிகழ்ச்சியில் இருப்பது இதுவே முதல்முறை. நான் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு முடித்துவிட்டு, ஆசிரமத்திற்கு இன்சைட் நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன். ஆனால், இப்போது கிடைத்துள்ள அனுபவம் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை வாய்ந்தது. காவல் துறையினர்களுக்கான சந்திப்புக் கூட்டம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியுள்ளது. நான் இங்கே கண்ட மிக அழகான அம்சம் என்னவென்றால், யோகா குறித்த விழிப்புணர்வை மட்டும் ஈஷா ஏற்படுத்தவில்லை, உபயோகா கற்பிப்பதற்கான அடிப்படையான ஆசிரியர் பயிற்சியையும் அவர்கள் வழங்குகிறார்கள். அதையேதான் அவர்கள் காவல்துறையினருக்கும் செய்கிறார்கள். இந்த வித்தியாசமான அணுகுமுறை, ஒரு அற்புதமான விஷயம் என கருதுகிறேன். இந்த சீரிய முயற்சியில் நானும் ஒரு சிறிய பங்காற்றியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
இந்த பயிற்சியின் முடிவில் காவல்துறையினர் முகங்களில் காணப்பட்ட புன்னகையும் சாந்தமும் விலைமதிப்பற்றதாய் தோன்றியது. இந்த வகுப்பு 4 முதல் 5 நாட்கள் நிகழ்ந்திருக்க வேண்டியது ஒரே நாளில் நிகழ்ந்துவிட்டது என பங்கேற்பாளர்கள் நினைக்கும் அளவிற்கு அது உண்மையிலேயே அற்புதமானதாக அமைந்தது.
-சுதிர் ஷர்மா, சன்ஷைன் புரொடெக்சன் உரிமையாளர், மும்பை, ஈஷா தன்னார்வத் தொண்டர் (உபயோகா ஆசிரியர்), போலிஸ் பயிற்சி அகாடமி, மாரல்
#32 நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த அற்புத பரிமாற்றம்!
நான் விதிஷாவிலிருந்து உதய்ப்பூருக்கு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக வந்தேன். 3 இரயில் வண்டிகளைப் பிடித்து மாறிய பின், அங்கு காலை 8 மணிக்கு வந்தடைந்தேன். நிகழ்ச்சி காலையில் 9 மணிக்கு துவங்கியது. நான் விரைவாக குளித்து தயாராகி, எனது யோகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தபோதுதான் அங்கு எதிர்பாராத சூழ்நிலை நிலவுவதை அறியமுடிந்தது. அந்த நிகழ்ச்சி மற்ற ஈஷா யோகா நிகழ்ச்சிகளை விட அதிக சவால் நிறைந்ததாகவும் வித்தியாசமாகவும் இருப்பதை உணர்ந்தேன். மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட யோகா ஆசிரியர் பயிற்சிக்கான அறிவிப்பால் மட்டுமல்லாமல், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை கண்டறிவதற்கு அவர்களுக்கு இருந்த சிரமத்தாலும் பள்ளி ஆரிரியர்கள் மிகவும் களைப்பாகக் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் 50 டிகிரி வெப்பநிலையில் பேருந்து மற்றும் இரயில்களில் பயணித்து, உதய்ப்பூரின் வெளியிலிருந்து வந்திருந்தார்கள்.
எனவே, நான் முதலில் நமஸ்காரம் என்றதும், அவர்களிடமிருந்து வந்த கேள்வி ‘இந்த வகுப்பு எப்போது முடியும்?’ என்பதுதான்! நாம் அவர்களிடம் CDயைக் கொடுத்து அவர்களைப் போகச் சொல்லிவிடலாமா? ஏன் இவ்வளவு நடைமுறைகள்? இப்படி பலவித கேள்விகள் நம்மை வந்து அச்சுறுத்திக்கொண்டிருந்தன. மொபைல் ஃபோன்கள் நமது வசதிக்காக இருக்கும் ஒரு கருவி என்ற நிலையிலிருந்து பலரது வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளதை அங்கு நம்மால் கண்டுகொள்ள முடிந்தது. சிலர் தொடர்ந்து ஃபோனில் செல்ஃபி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக இருந்தனர். இறுதியாக பலவித விவாதங்கள்-வேண்டுகோளுக்குப் பிறகு அவர்களை நாம் சமாதானப்படுத்தினோம். ஆனால் அதன்பிறகு, சிறிதுநேரத்தில் மின்சாரம் போய்விட்டது. இப்போது சலிப்பும் களைப்பும் மீண்டும் ஆட்கொள்ளத் துவங்கியது.
எனக்குத் தெரிந்து இந்த ஒரே ஒரு ஈஷா நிகழ்ச்சியில்தான் பங்கேற்பாளர்கள் உள்ளே போவதும் வெளியேறுவதுமாக இருந்துள்ளார்கள் என நினைக்கிறேன். ஆனால், பிற தன்னார்வத் தொண்டர்கள் சோர்ந்துவிடாமல் அவர்களிடம் ஈஷா என்றால் என்ன? சத்குரு யார்? இந்த பயிற்சிகளின் நோக்கம் என்ன? அரசாங்கம் ஏன் இந்த குறுகிய கால அறிவிப்பு கொடுத்து அவர்களை அழைத்துள்ளது? எனப் பல கேள்விகளுக்கு விளக்கத்தை அளித்த வண்ணம் இருந்தனர்.
ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வருவதற்கு அரைமணி நேரங்கள் ஆனது. பிறகு நாம் கைகூப்பியபடி அவர்களிடம், இந்த CDயை வாங்கிக்கொண்டு போகிறீர்களா அல்லது நாம் விட்ட இடத்திலிருந்து துவங்கலாமா எனக் கேட்டோம். எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியுமும் தரும் விதத்தில் வகுப்பை தொடரச் சொல்லி பெரும்பான்மையானோர் கூறினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில், பலர் அப்படியே தலைவணங்கி கும்பிட்டதையும், அழகான வார்த்தைகளால் நன்றி தெரிவித்ததையும் பார்த்தோம். சிலர் நமஸ்காரம் செய்தபடி எங்கள் காலைத் தொடுவதற்காக வந்ததை பார்த்தோம். அந்த அனுபவத்தை எங்களால் எப்போதும் வாழ்வில் மறக்கமுடியாது.
-டாக்டர்.ப்ரீத்தி அரோரா, ஈஷா தன்னார்வத் தொண்டர், மத்திய பிரதேசம்
#33 உற்சாக வெள்ளத்தில் கோட்டா!
உற்சாகக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இராஜஸ்தானின் கோட்டா இருக்கிறது. இந்தியாவின் வேறெந்த நகரத்திலும் இல்லாத அளவிற்கு இங்கே IDY கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. வானமெங்கும் வானவேடிக்கைகள் பூக்கின்றன; ஒவ்வொரு தெருவெங்கும் மேளதாளங்கள் முழங்குகின்றன; குழந்தைகளும் வாலிபர்களும் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடுகிறார்கள். உற்சாகத் துள்ளலுடன் மக்கள் வானத்தில் ஒளியைப் பரப்புவதோடு தங்கள் உள்ளத்திலும் உள்ளொளி ஏற்றி உலக யோகா தினத்தை வரவேற்பதைப் பார்ப்பதற்கு மிக அற்புதமானதொரு காட்சியாக இருக்கிறது.
- பாவ்யா, இராஜஸ்தான்
#34 எதிர்ப்பு கோஷம் ஆதரவானது!
ஜோத்பூரில் இரண்டு உபயோகா நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தன. நான் மாடியில் உள்ள ஹாலில் வகுப்பை வழங்கினேன். ஒரு 12 மணிவாக்கில் ஒரு மனிதர் வகுப்பின் பாதியில் உள்ளே நுழைவதற்கு எத்தனித்தார். அவர் உள்ளே நுழைந்தால் பங்கேற்பாளர்களுக்கு இடையூறாக இருக்குமென்பதால், அங்கே பதிவுக்கான மேசையில் இருந்த ஈஷா தன்னார்வத் தொண்டர் ஒருவர் அவரை தன்மையாக தடுத்து நிறுத்தினார். அந்த தன்னார்வத் தொண்டருக்கு அந்த மனிதரை அடுத்து ஒரு மணி நேரத்தில் துவங்க உள்ள அடுத்த வகுப்பில் பதிவு செய்யச் சொல்வதில் மகிழ்ச்சியே!
ஆனால் அந்த மனிதருக்கு கடுமையான கோபம் வந்து, “நான் உங்களை அடுத்த வகுப்பை இங்கே நடத்தவிடாமல் செய்கிறேன்” எனக் கத்தினார்.
நான் மதியம் 1:15 மணிக்கு அடுத்த வகுப்பிற்காக நுழைந்தபோது, ஒருசில பேர் அங்கே வழிமறித்துக்கொண்டு “யோகா முகாமை மூடு!” என கோஷமிட்டனர். நான் அவர்களிடம் கூடுமானவரை வேண்டிக்கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை!
எனக்கு வேறுவழி இல்லாததால், நான் இருகரங்களை கூப்பியபடி ஓரமாக நின்றேன். அந்த நேரத்தில் இன்னொரு தன்னார்வத் தொண்டர் வந்து சமாதானப்படுத்த அவர்கள் ஒருவழியாக உள்ளே வந்து அமைதியாக அமர்ந்தனர். எனக்குத் தெரியும், இது என்னாலோ அல்லது வேறு எவராலோ நிகழவில்லை, சத்குருவின் அருளினால் மட்டுமே நிகழ்ந்துள்ளது!
அவர்கள் அமைதியாக அமர்ந்ததும், அவர்களில் ஒருவர் ‘மேடம், நான் எல்லோர் சார்பிலும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! அவர்கள் அவ்வாறு செய்திருக்க கூடாது.” என்றார். அந்த வகுப்பு மிகவும் அற்புதமாக சென்றது. பங்கேற்பாளர்கள் அந்த நிகழ்ச்சி முழுவதும் முழுமையாக ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.
-ப்ரீத்தி ஜோஷி, ஈஷா தன்னார்வத் தொண்டர், மத்திய பிரதேசம்.
#35 குழந்தை பருவத்தில் யோகா...
நேஹல் வழங்கிய இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனது இளம் பிராயத்தில் யோகா எனைத் தொட்டது, நான் அதற்காக எப்போதும் விருப்பத்துடன் இருந்தேன். இப்போது குழந்தைகளுக்கு இந்த யோகா வழங்குவதற்காக நான் துணைநிற்பதையும் முக்கியமாகக் கருதுகிறேன்.
ஒவ்வொரு யோக உடல் நிலைகளிலும் குழந்தைகள் இருக்கும்போது அவர்கள் மிகவும் வாஞ்சையாக தெரிகிறார்கள். அவர்கள் முகம் சிறிது பொறுப்புணர்ச்சியும் சிறிது குறும்பும் கலந்து இருப்பதோடு மிகவும் இனிமையாக இருக்கும்.
பாம்பே முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியின் உட்புற அம்சங்களைப் பார்வையிடும் வாய்ப்பை இந்த வேலை வழங்கியது. தனியார் பள்ளியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது அந்தப் பள்ளி. பல குழந்தைகள் உடல்நிலையில் வலுவற்று இருப்பதைக் கவனித்தேன். அதேபோல் சில குழந்தைகள் அளவுக்கதிகமான எடை கொண்டிருப்பதையும் பார்க்கமுடிந்தது.
- ஈஷா தன்னார்வத் தொண்டர், மும்பை
#36 கிராம மக்களின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளை ஒருங்கிணைத்ததன் பின்னர், மும்பை-புனே பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வாய்ப்பு 21ஆம் தேதியன்று நமக்கு கிடைத்தது.
சமீபத்தில், புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16 கிராமங்களில் 70 கிராம மக்கள் மராத்தியில் உபயோகா ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டனர். அவை MPக்கள் மற்றும் MLAக்களால் தத்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களாகும்.
வகுப்பு நிகழும்போது நாங்கள் நிறைய தளவாடப் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. பயிற்சி நடைபெறும் இடம்குறித்து உறுதியான நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த மக்கள் வகுப்பில் கலந்துகொண்ட விதம் அனைத்தையும் ஈடுசெய்வதாய் இருந்தது. பல கிராம மக்கள் 100-150 கி.மீ தூரம் பயணம் செய்து, சாப்பிடாமல் பசியைப் பொறுத்துக்கொண்டு வந்திருந்தனர். இதையெல்லாம் விட, வகுப்பு முடியும்வரை அவர்கள் எந்தகுறையும் சொல்லாமல், பக்தியுடன் கண்களில் நன்றியின் வெளிப்பாடாய் கண்ணீர் வழிந்தோட எளிமையாக அமர்ந்திருந்தனர்.
தற்போது இவர்கள் 21ஆம் தேதிமுதல் தங்கள் கிராமங்களில் வகுப்புகளை வழங்கத் துவங்கியுள்ளனர். நாம் இவர்களுக்கு இதற்காக துணைநிற்கிறோம்!
- தன்னார்வத் தொண்டர், மும்பை
#37 உடைந்த எலும்புகள், உடையாத உறுதி!

அதிவேகமாக வந்த கார் ஒன்று அந்த மனிதரின் பைக்கை முதலில் நொறுக்கியது, அதன்பின் முதுகுத்தண்டை நொறுக்கியது, அதோடு அவரது கனவுகளையும். ஆனால், அவரிடம் உடைக்கமுடியாத அவரது இலட்சியம் இருந்தது! அதுதான் சித்தார்த்தை தேசிய அளவிலும் மாநில அளவிலும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதிக்கச் செய்தது.
இப்போது அந்த உறுதியான இலட்சியம்கொண்ட, சக்கர நாற்காலியில் இருந்தபடியே தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சித்தார்த் பாபு, ஆசிரமத்தில் ஹத யோகா நிகழ்ச்சியில் இருந்தார். அவரால் ஆசனங்கள் மற்றும் சூரியக் கிரியா போன்ற பயிற்சிகளை செய்ய இயலாது என்றாலும், அவர் வகுப்புகளின் இடையில் எங்கும் செல்லாமல் முழுமையாகப் பெங்கேற்றார்.
-8 நாள் ஹத யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்.
#38 ஒரே நாளில் பறந்த வலி!
8 நாட்கள் ஹத யோகா வகுப்பில் கலந்துகொண்ட ஒரு பங்கேற்பாளர் தான் அதிகமாக கணினி மௌசை பிடித்ததால் கையில் பலமான வலியும் வீக்கமும் ஏற்பட்டிருந்ததாகப் பகிர்ந்துகொண்டார். பலவித சோதனைகளுக்குப் பிறகு கடைசி முடிவாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைதுள்ளதாகத் தெரிவித்தார். ஹத யோகா வகுப்பில் பங்கேற்றுவிட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதாகக் கூறினார். ஆச்சரியப்படும் விதமாக வீக்கமும் வலியும் உபயோகா பயிற்சிக்குப் பிறகு பறந்துவிட்டன.
அதோடு அவர் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறையும் சிறுநீர் கழிக்கும் விதமாக தனக்கு சிறுநீரகத் தொற்று இருப்பதாகக் கூறியதால், அவரை வகுப்பின் இடையே வெளியில் சென்று வர அனுமதித்திருந்தோம். அவர் தனது முதல்சுற்று நாடி விபாஜனா செய்யத் துவங்கியதும் அவர் முழுமையாக வியர்க்கத் துவங்கினார். ஒரு நாள் கழித்து, அவரிடம் அப்படியொரு மாற்றம்! சூரிய கிரியாவை துவங்கியதும், அவருக்கு கழிவறை செல்ல வேண்டுமென்ற உந்துதல் எதுவும் இல்லாமல் போனது. வகுப்பின் இடைவேளை நேரங்களில் மட்டுமே சென்று வந்தார்.
- ஈஷா யோகா ஆசிரியர்.
#39 நிகழ்காலத்தில் வாழும் குழந்தைகள்!
காக்கும் கரங்கள் குழுவினர் எடுத்து நடத்தும் ஒரு ஆதரவற்ற மாணவர் இல்லம் ஒன்று கலாக்ஷேத்ரா போகும் வழியில் உள்ளது. அந்த இல்லம் ஒரு தொலைக்காட்சி அறையுடன் கூடிய நடுத்தர அளவிலான இரு ஹால், துணிமாற்றும் அறை மற்றும் மாடியில் சமையலறை என புதுப்பிக்கப்பட்டிருந்தது. அங்கே நிறைய நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பழைய துணிகள் மற்றும் அதுபோன்ற சாதாரணமாக உபயோகப்படுத்த இயலாத நிலையிலுள்ள நிறைய பொருட்கள் இருந்தன.
நான் மற்ற இரண்டு தன்னார்வத் தொண்டர்களுக்காக காத்திருந்தேன்; மதிய உணவிற்குப்பின் சில குழந்தைகள் சற்று தூக்க மயக்கத்திலும், சில குழந்தைகள் கேரம் விளையாடுவதுமாகவும் இருந்தனர். கடைசியாக மாலை 4 மணிக்கு வகுப்பை துவங்கினோம். 12 வயதிற்கும் குறைவான அந்த குழந்தைகளை ஒரு கை நீட்டும் தூரத்திற்கு இடைவெளி விட்டு நிற்குமாறு செய்தோம்.
விரைவிலேயே சப்தம் கேட்க, அவர்களாகவே திரையை நோக்கி திரும்பி அமர்ந்துகொண்டனர். அனைத்து பயிற்சிகளையும் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் மேலாளர் வந்தார். பின்னர் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தனர். தங்களுக்கென கிடைக்க வேண்டிய பெற்றோரின் அன்பு மற்றும் அக்கறை போன்ற சரியான வளரும் சூழல் கிடைக்கப்பெறாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; மிகவும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்!
நிகழ்ச்சியின் இறுதியில் சிலர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆச்சரியத்திற்கு இடமில்லாமல் ‘அன்பு மற்றும் அமைதிக்காக யோகா’ என்பதை பெரும்பாலானோர் விரும்பினர்.
-டான்பாஸ்கோ வழிகாட்டி, ஈஷா தன்னார்வத் தொண்டர், சென்னை.
#40 சத்குருவின் குரலால் ஈர்க்கப்பட்ட மாணவன்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்புலம் கொண்ட இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு பெறும் திறமையை வழங்கும் டெக் மஹிந்த்ரா அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருக்கும் பாதிரியார் அவர்கள், உபயோகா வகுப்பை நடத்த அனுமதி அளித்தார்.
5 நேர் வரிசையில் 150 மாணவர்கள் அமர்ந்தனர். பாதிரியார் எனக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இன்னொரு தன்னார்வத் தொண்டருக்கு மாணவர் ஒருவர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் வகுப்பு அமைதியில் மூழ்கியது, அங்கிருந்த பங்கேற்பாளர்கள் குறிப்புகளை முழுமையாகக் கவனிக்கத் துவங்கினர். உள் அமைதிக்கான யோகாவான நாத யோகாவின் போது பெரும்பாலானோர் கண்களை மூடியபடியும் சரியாக முத்ராவை பிடித்தபடியும் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் அமைதியில் தோய்ந்திருப்பதாகத் தெரிந்தது.
நிகழ்ச்சி முடிந்தபின், அவர்கள் கண்களைத் திறந்தனர், சிலர் தங்கள் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டனர். இன்னர் இஞ்சினியரிங் மற்றும் ஈஷா குறித்து பலர் கேட்டுக்கொண்டிருந்த வேலையில், ஒரு ஏழை மாணவன் தயங்கியபடியே வந்து, CDயில் ஒலித்த சத்குரு பாடிய அந்த பாடல் அவனுக்கு கிடைக்குமா என்று கேட்டான். சத்குருவின் குரலாலும் பாடலாலும் ஒரு மாணவன் ஈர்க்கப்பட்டது அந்த வகுப்பில் ஒரு புதிய நிகழ்வாக இருந்தது.
-அனிதா பாபு, ஈஷா தன்னார்வத் தொண்டர், சென்னை
#41 பரபரப்பான ஓட்டமும், சுமூகமான வகுப்பும்!
மலாடிலுள்ள அரசுப்பள்ளியான சர்வோதே பாலிகா வித்யாலயாவை மதியம் 1:45 மணிக்கு சென்றடைந்தோம். அங்கு 200 குழந்தைகளுக்கு உபயோகா வகுப்பு வழங்கவேண்டியுள்ளது. நாங்கள் முன்கூட்டியே அந்த இடத்திற்கு சென்றுவிட்டதால் பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்பு நடைபெறும் நேரத்தை 2 மணிக்கு மாற்றினர். ஹாலில் ஒலியமைப்பு எங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டது.
ஆனால், நான் மடிக்கணினியைக் கவனித்தபோது அதில் CDயை இயக்கும் வசதி இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும், இலகுவாக வீடியோவை இயக்குவதற்குத் தேவையான RAM மிகக் குறைவாகவே இருந்தது. நல்லவேளையாக நான் என்னுடைய மடிக்கணினியை கொண்டுசென்றிருந்ததால் அதை உபயோகித்துக்கொள்ள தீர்மானித்தேன்.
‘இப்போது எல்லாமே தயாராக உள்ளது’ என ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தவுடன், நாங்கள் ஏதும் சொல்லாமலே குழந்தைகளை அந்த ஹாலுக்கு ஆசிரியர்கள் ஆர்வத்துடன் அழைத்து வந்தனர். குழந்தைகளின் சலசலப்பு சத்தங்களும் சிரிப்போசைகளும் அங்கே நிறைந்திருந்தன.
அப்போது திடீரென்று எங்களுக்குத் தெரிய வந்தது, அங்கே மடிக்கணினியிலிருந்து ஒலியமைப்புடன் இணைக்கும் இணைப்பு வயர் இல்லையென்று! நான் உடனே அவர்களிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, நானும் ஜீனே அண்ணாவும் ஆளுக்கொரு திசையில் வயர் வாங்குவதற்காக கடைத் தெருவிற்கு ஓடினோம்!
விரைவில் அங்கே ஒரு கடை இருப்பதை நான் பார்த்ததும், ஜீனே அண்ணாவிற்கு அழைத்து, திரும்பிப்போய் குழந்தைகளுக்கு அருகில் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அங்கு இன்னொரு பிரச்சனை... அந்த கடைக்காரர் மிகவும் சாவகாசமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் வெகுநேரமாக பணத்தை எண்ணுவதில் மும்முரமாக இருந்தார் (ஒருவேளை எனக்கு அது வெகுநேரமாக இருந்திருக்கும்). அவர் என்னைப் பார்க்கக் கூட இல்லை! வேறுவழியில்லாமல் கடைசியில், யோகா, 200 குழந்தைகள், வயர் இல்லை என அனைத்து கதையையும் படபடக்க, இறுதியாக எனக்கு என்ன வேண்டும் என கடைக்காரர் கேட்டார். இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகு வயரை கடைக்காரர் கொடுத்தார். நான் ஹாலிற்கு ஓடினேன்.
3 மணிக்கு வகுப்பு ஆரம்பித்தது. மற்றபடி அனைத்தும் எங்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மிக அற்புதமாக அமைந்தது!
- ரவி சேகர், ஈஷா தன்னார்வத் தொண்டர்.
#42 யோகா திரைப்படத்திற்கு அரங்கு நிறைந்த காட்சி!
இந்த திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும், 100 ரூபாய் கொடுத்து பெரும்பாலான மக்கள் யோகா பற்றிய படத்தை பார்க்கமாட்டார்கள் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், ஆச்சரியப்படத் தக்க வகையில், டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன; நான் உள்ளே நுழையும்போது அரங்கு நிறைந்த காட்சியாக அமைந்தது. சினிமா துவங்கியதும் பார்வையாளர்கள் கைதட்டலும் உற்சாகக் குரலுமாக குதூகலித்துக்கொண்டிருந்தனர். நாங்களும் அவர்களுடன் குழுவில் இணைந்துகொண்டோம்!
படத்தின் ஒளிப்பதிவு, கதை நிகழும் இடங்களின் தேர்வு, பின்னணி இசை, கேமரா கோணங்கள் என அனைத்துமே மிக அருமையாக அமைந்திருந்தன. முன் அனுபவம் ஏதும் இல்லாதபோதிலும் அந்த நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த கதாபாத்திரங்களுள் ஏதேனும் ஒருவருடன் நம் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் தொடர்புபடுத்தி பார்க்கமுடியும்.
சத்குருவை பெரிய திரையில் பார்க்கும்போது அது பிரம்மிப்பு தருவதாக இருந்தது. ‘நமஸ்கார்’ வீடியோவை பார்க்கும்போது நான் ஆழமாக தொடப்பட்டேன்.
பார்ப்பதற்கு மிகவும் அரிதான தருணம் என்னவென்றால், பார்வையாளர்கள் அனைவரும் உபயோகா பயிற்சிக்காக எழுந்து நின்றோம். அனைவரும் ஆர்வத்துடன் பயிற்சி செய்வதற்காக எழுந்து நின்றது பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாக அமைந்தது. திரைப்படத்தின் இடையே ஒரு பயிற்சியைக் கற்றுக்கொள்வதென்பது அங்கிருந்தவர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும்!
என்னவொரு நேர்த்தியான, புதுமையான அணுகுமுறை!
-சனம் தஸ்மஹபுத்ரா, பெங்களூரூ
#43 நியூட்டனின் ஆப்பிளும் யோகாவும்!
நியூட்டனின் ஆப்பிள் எப்படி தலையில் விழுந்ததோ, அதேபோல எனது தலையில் பெரிய அடியாக விழுந்து யோகா எனை ஆட்கொண்டது! எனது முறையற்ற வாழ்க்கைமுறை இறுதியில் எனக்கு அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. மிகவும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்ந்த எனக்கு, எனது மகள் பிறக்கும் வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரசவத்தில் ஏற்பட்ட சிரமமும் வலியும் எனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. தண்டுவட தட்டுகளில் விலகல் இருப்பதும், கடுமையான இரத்தசோகை இருப்பதும், ஆஸ்டோபெரிஸ் இருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் மிகவும் பலவீனமாக இருந்தேன். அதோடு, பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகளும் இருந்தன. நான் 31 வயதில் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன். அதை சரிப்படுத்துவதற்கும் குணமாக்குவதற்கும் தேவையான தருணம் இது என உணர்ந்தேன். அறுவை சிகிச்சை அல்லது யோகா, இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி எனது மருத்துவர் கேட்டுக்கொண்டார். நான் சரியாக யோகாவைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் எனது வேலையை விட்டுவிட்டு யோகாவை முழுநேரமாக எடுத்துக்கொண்டேன். மும்பையின் பழமையான யோகா நிறுவனங்களில் ஒன்றான அந்த மையத்தின் ஆசிரியர்கள் எனது வழிகாட்டிகளாக மாறினர். அந்த யோகா மையம் மிகவும் அற்புதமான பசுமை சூழலில், மும்பையின் இரைச்சலில் இருந்து விலகி அமைந்துள்ளது. நான் மிகத் தீவிரமாக யோகாவை பயிற்சி செய்ய துவங்கினேன். எனது அந்த தீவிரம், ஆரோக்கியம் நல்வாழ்வு என்பதைத் தாண்டி எனக்குள் ஒரு தேடலை ஏற்படுத்தியது. அந்த தேடலை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதென்பது இயலாது. அந்த நேரத்தில் நான் சத்குருவை சந்தித்தேன். நான் அவரை சந்திப்பேன் என்றோ அல்லது அவர் என்னைக் கண்டறிவார் என்றோ நான் நினைக்கவில்லை! அவர்தான் எனது குரு; எனது வாழ்வை பரிமாற்றம் அடையச் செய்தவர்.
நான் அவரை சந்தித்ததையும் மற்றும் அவரது பாதையில் வழிகாட்டுதலில் நடந்து வருவதையும் எனது பாக்கியமாக நினைக்கிறேன். இன்று ஒரு சிஷ்யையாக, பயிற்சியாளராக மற்றும் யோகா ஆசிரியராக, நான் பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன். யோகா எனது ஆரோக்கியத்தில் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை, சிறந்த மனித உயிர் என்ற விதத்திலும் பரிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், செயல்பாடுகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
நான் எனது நண்பர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், யோகாவை ஒரு நாள் அளவிலோ, ஒரு மாத அளவிலோ பின்பற்றாமல், முழுமையாக, வாழ்க்கை முழுவதற்கும், ஈடுபாடும் காதலும் கொள்ளுங்கள்!
எனது குருவின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘உங்கள் தலையில் அது அடிக்கும்வரை காத்திருக்காதீர்கள்!’
#44 குழந்தைகளுடன் மதிய உணவு!
இன்றைய போட்டி உலகத்தில், அழுத்தம் மிகுந்த சூழலில், பள்ளிக் குழந்தைகளுக்கு நல்வாழ்விற்கான கருவியாக விளங்கும் உபயோகா வகுப்பை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்றைய இந்த சமூகச் சூழலில் குழந்தைகளுக்கு யோகா மிக அவசியமானது என கருதுகிறேன். உபயோகா வகுப்பு நடக்கவிருந்த அந்த வகுப்பறையில் 84 இளம் மாணவர்கள் இருந்தனர். அவர்களது கண்களில் ஆர்வம் மிகுதியைக் காணமுடிந்தது. அந்த இடத்தில் எதிர்பார்ப்பு எங்கும் நிறைந்திருந்தது. எனது நகரத்திலேயே எந்தவித கோளாறும் ஏற்படாத கம்ப்யூட்டர் சிஸ்டமாக என்னுடையது இருந்ததால் நான் மற்ற பயிற்சி ஆசிரியர்களைவிட அதிர்ஷ்டசாலிதான்.
பள்ளி ஆசிரியர்களின் உதவி எதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர்களது ஒத்துழைப்பும் உதவியும் என்னை திகைக்க வைக்கும் வகையில் அமைந்தது. அனைத்திற்கும் மேலாக, மாணவர்கள் அனைவரும் மிகவும் கட்டுப்பாடுடனும் கவனத்துடனும் இருந்தனர். அவர்கள் என்னை மதிய உணவில் கலந்துகொள்ளுமாறு அழைத்தனர். நான் அதை மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன். அது மிக எளிமையான உணவுதான் என்றாலும், அந்த இனிய குழந்தைகளுடன் அமர்ந்து உண்டது ஒரு பெரிய விருந்தாக இருந்தது. இந்த உபயோகா வகுப்புகள் கூட்டத்தின் மீது எனக்கிருந்த பயத்தை போக்கியது.
வருங்கால தலைமுறையான குழந்தைகளுக்கு உள்நிலை பரிமாற்றத்திற்கான கருவியை கொண்டுசேர்ப்பதற்கு என்னை அனுமதித்ததற்காக சத்குருவிற்கு எனது மனமார்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- நவாஸ் ஹுசைன், மும்பை
#45 ஐஸ் க்ரீம் விற்பனையாளர்களையும் ஈர்த்த யோகா!
சத்குருவாலும் ஈஷா யோகா நிகழ்ச்சியாலும் தொடப்பட்டிருந்த பல தன்னார்வத் தொண்டர்கள், அவர்களின் வழக்கமான ஞாயிறு கேளிக்கைகளைத் துறந்து, உலக யோகா தினத்தை கொண்டாடும் விதமாக நேற்றைய நாளை லண்டன் பார்க்கில் செலவழித்தனர். லண்டனில், ஐகானிக் டவர் பிரிட்ஜின் அருகிலுள்ள போட்டர்ஸ் ஃபீல்ட்ஸ் மற்றும் அலக்ஸாண்ட்ரா பேலஸ் ஆகிய இரு இடங்களிலும் ஈஷா அறக்கட்டளையின் பூர்வாங்க நிகழ்வுகள் அன்று நிகழ்ந்தன.
போட்டர்ஸ் ஃபீல்ட்ஸில் பிற்பகல் வேளையில் இரண்டு ஈஷா ஆசிரியர்கள் மேடைக்கு வந்தனர். சத்குருவைப் பற்றிய அறிமுகத்தையும் லண்டனில் நிகழவுள்ள ஈஷா யோகா நிகழ்ச்சிகள் குறித்தும் அவர்கள் உரை வழங்க, சாலையைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களோடு ஆர்வத்துடன் காத்திருக்கும் யோகிகள் கூட்டத்தினரும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். ஈஷா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான IDY வீடியோ அங்கே ஒளிபரப்பப்பட்டது. அந்த அற்புத வீடியோ காட்சி அங்கிருந்த கூட்டத்தினரை வெகுவாகக் கவர்ந்தது. அங்கிருந்த பாதுகாவல் பணியாளர்கள் மற்றும் ஐஸ் க்ரீம் விற்பனையாளர்களையும் அந்த வீடியோ காட்சி வெகுவாக ஈர்த்தது.
இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay