ஆன்மீக சாதனைக்கு துணைபுரியும் நாட்காட்டி!
புதிய வருடம் பிறந்ததும் பழைய நாட்காட்டிகளைத் தூக்கிப்போட்டுவிட்டு, பிடித்தமான கடவுள்கள் அச்சிடப்பட்ட புதிய வண்ணமயமான நாட்காட்டியை வாங்கி மாட்டுகிறோம். ஆனால், ஒரு ஆன்மீக சாதகராக ஒருவர் நம் பாரம்பரிய நாட்காட்டியை கடைப்பிடிப்பதற்கான அவசியத்தை இந்தப் பதிவு உணர்த்துகிறது!
மனிதனுக்கும் கோள்களின் அசைவுகளுக்கும் இருக்கும் தொடர்பினை நிராகரிக்கும் நவீன நாள்காட்டிகளுடன் ஒப்பிடுகையில், பாரதத்தின் சூரிய-சந்திர நாள்காட்டிகள், நமக்கும் கோள்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பினை உணர்ந்து அமைக்கப்பட்டிருக்கிறது. கோள்களின் அசைவுகளுக்கும் நமக்கும் இசைவு ஏற்படுத்துகிறது.
சாதனா பாதை
தட்சிணாயணத்தில் பிறக்கும் முதல் பௌர்ணமியே குருபௌர்ணமி அன்றுதான் ஆதியோகியான சிவன் ஆதிகுருவாய் உருவெடுத்தார்.
மகாளய அமாவாசை தான் இலையுதிர்காலத்தின் முதல் அமாவாசை. பெண் தன்மையைக் கொண்டாடும் தசரா, அதற்கு அடுத்த நாளில் துவங்குகிறது.
Subscribe
பனிக்காலக் கதிர்திருப்பம் (டிசம்பர் 22) தட்சிணாயணம் முடிந்து உத்தராயணம் துவங்கும் காலம். ஞானப்பாதைப் பிறக்கிறது. இதனை மலர்தலின் நேரம் எனலாம்.
ஞானப்பாதை
கோடைக்காலக் கதிர்திருப்பம் (ஜுன் 21) உத்தராயணம் முடிந்து தட்சிணாயணம் பிறக்கிறது. சாதனா பாதையின் துவக்கம். முயற்சித்தலுக்கான காலம்.
புத்த பௌர்ணமி கௌதம புத்தரின் ஞானோதயத்தை இத்தினத்தில் கொண்டாடுகிறோம்.
தமிழ் வருடப் பிறப்பிற்கு பிறகு வரும் 21 நாட்கள், பூமியின் வடகோளத்தில் வெப்ப மிகுதியான ஒரு காலக்கட்டம்.
வசந்தகால & பனிக்காலக் கதிர்திருப்பங்கள் (மார்ச் 21 & செப்டம்பர் 23) ஒரு ஆன்மீக சாதகர் தன் உடலமைப்பிற்குள் சமநிலையைக் கொண்டு வருவதற்கு உகந்த காலக்கட்டம். தேவி பாதை பனிக்காலக் கதிர் திருப்பத்தில் பிறக்கிறது.
மஹாசிவராத்திரி ஆன்மீக ரீதியாக மிக முக்கியமான ஒரு நாள். இந்நாளில் நமது சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி எழும்புகிறது.
மௌனி அமாவாசை மஹாசிவராத்திரிக்கு முன்னர் வரும் அமாவாசை இது. இந்நாளிலிருந்து மஹாசிவராத்திரி வரையுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான யோகியர் மௌனத்தில் இருப்பர்.