அமெரிக்க போட்டிகளில் வெற்றிவாகை சூடிய ஈஷா மாணவர்கள்!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க கல்விசார் விளையாட்டுப் போட்டிகளில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். அதைப் பற்றி ஒரு பார்வை...
 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க கல்விசார் விளையாட்டுப் போட்டிகளில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். அதைப் பற்றி ஒரு பார்வை...

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க கல்விசார் விளையாட்டு - Academic Games Leagues of America (AGLOA) போட்டிகளில் கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். இந்த ஆண்டிற்கான போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோவில் நடைபெற்றன. 1000 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் 14 பேர் கலந்துகொண்டனர். அமெரிக்க பள்ளி அல்லாது வெளி தேசத்தில் இருந்து இப்போட்டிகளில் பங்கேற்ற ஒரே பள்ளி ஈஷா பள்ளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விசார் விளையாட்டு என்பது என்ன?

அகாடமிக் கேம்ஸ் என்பது கணிதம், கலை, நவீன தர்க்கம், கோட்பாடுகள் மற்றும் சமூக ஆய்வுகளை ஒருங்கிணைத்த ஒரு விளையாட்டாகும். இதை ஒரு சதுரங்க விளையாட்டின் மாதிரி என்று பலர் குறிப்பிடுவர். ஆனால், கணிதத்துடனோ, சில கோட்பாடுகளுடனோ இதை விளையாட வேண்டும். இந்த விளையாட்டை உருவாக்கியவர் பேராசிரியர் லய்மேன் இ அலென் (Laymen E. Allen).

AGLOA வின் 50 ஆவது ஆண்டு இது. இதன் வரலாற்றில் அமெரிக்க பள்ளி இல்லாமல் வெளியில் இருந்து பங்கேற்கும் இரண்டாவது பள்ளி ஈஷா. இதில் கலந்து கொள்வதே பலருக்கும் ஒரு சாதனைதான். தொடக்க விழா நிகழ்வில் ஈஷா பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களுக்கான விருந்தில் பழைய மாணவரான கான் அகாடெமியின் ஸல் கான் (Sal Khan) ஒரு முன்னாள் விளையாட்டு வீரராக தனது அனுபவங்களை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். கல்வியை மேம்படுத்துவதில் முதல் அடி எடுத்து வைக்க இந்த விளையாட்டுகள் எப்படி உதவியது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

ஈஷா மாணவர்களின் பங்கேற்பு!

9 வயது முதல் 12 வயது மாணவர்கள் அடங்கிய ஈஷா பள்ளி குழு, மிடில் டிவிஷனில் பங்கேற்றனர் (7 மற்றும் 8ஆம் வகுப்பு), 2 குழு எலிமெண்டரி டிவிசனில் பங்கேற்றனர் (6 மற்றும் அதற்கு கீழுள்ள வகுப்புகள்). எலிமெண்டரி அணி கலந்து கொண்ட 4 விளையாட்டுகளில் 36இல் 17 ஆவது இடம், 17இல் 7ஆவது இடம், 51இல் 33ஆவது இடம் பெற்றனர். இதில் ஈஷா பள்ளியின் 6ம் வகுப்பு மாணவரான பவன் சக்திவேல் தனிப்பட்ட அதிக மதிப்பெண்கள் எடுத்ததற்காக பதக்கமும் பெற்றார்.

ஈஷா AG ஒருங்கிணைப்பாளரான சுவாமி ஜடஜா போட்டிகளில் நீதிபதியாக இருந்தார். பழைய மாணவரான இவர் மூன்று முறை தேசிய சாம்பியனாக மிளிர்ந்தவர். இவர் இந்த விளையாட்டைப் பற்றி பகிர்ந்துகொள்ளும்போது...

"தங்கள் பள்ளி மாணவர்களுடன் மட்டுமே போட்டியிட்ட ஈஷா மாணவர்களுக்கு அமெரிக்க அளவில் பங்கேற்றது ஒரு பிரம்மாண்டமான விஷயம். 50 வருட இந்தப் போட்டிகளின் வரலாற்றில் இல்லாதவாறு, வெளிநாட்டவர் வெற்றி பெறுவது ஒரு பெரிய சாதனைதான். ஈஷா பள்ளியில், ஏஜி பயில்வதற்கு ஒரு கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் தங்கள் முயற்சியினால் கற்பது மட்டுமல்லாமல் கணக்கு, மொழிகள், கலை பகுத்தறிவு இவற்றின் நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெறுகின்றார்கள். அடுத்த சில வருடங்களில் இந்திய கல்வி திட்டத்தில் ஏஜி கால் ஊன்றும் சாத்தியங்கள் இருக்கிறது. இதை கற்க விரும்பும் பள்ளிகளுக்கு ஈஷா வாய்ப்பினை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கும்." என்றார்.

ஈஷாவிலிருந்து இதை கற்க விருப்பம் உள்ள கல்வியாளர்கள் agames@ishahomeschool.org என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

AGLOA Website: http://agloa.org/

To Purchase Games: http://www.gamesforthinkers.org/