மாதம் மும்மாரி பெய்கிறது என மன்னரின் ஆட்சியைப் புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசில்களைப் பெற்றுச்சென்ற இலக்கியங்களைப் படிக்கிறோம். ஆனால், அதெல்லாம் இனி பாடல்களிலும் இலக்கியங்களிலும் மட்டுமே காணக்கூடிய காட்சியாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் வருடம் மும்மாரி பெய்வதே பெரும்பாடாக இருக்கிறது.

பஞ்ச பூதங்களில் முக்கியமான ஒன்றான நீர், நாம் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்று! ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் வள்ளுவனின் கூற்று இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இந்நிலையில் நம்மூர்களில் குறைந்து வரும் பருவமழையளவு குறித்தும், காலநிலை தவறி பெய்யும் மழை குறித்தும் நாம் கவனிக்க தேவையுள்ளது.

மாறிவரும் பருநிலை...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சரி... பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு தற்போது என்ன செய்வது? நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நடுவதே இதற்கான வழி!

உலக வெப்பமயமாதல் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை பெற்றுக்கொண்டு, நாம் உள்ளிழுக்கும் ஆக்சிஜனை கொடுக்க மரங்கள் நம்மைச் சுற்றி இருப்பது அவசியம். சத்குரு கூறும்போது, “நமது ஒரு பகுதி நுரையீரல் மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என அடிக்கடி சொல்வதுண்டு. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வாகன அதிகரிப்பும் தொழிற்சாலை அதிகரிப்பும் நிகழாத வரையில் நம்மிடையே ஒரு இயற்கை சமநிலை இருந்தது.

ஆனால், காலம் செல்ல செல்ல காடுகள் அழிக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியதால் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் வெளியேற்றம், செயற்கை உரங்கள் அதிகளவு பயன்படுத்தல், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டது; மழையளவு குறைவது மற்றும் ஓரிரு நாட்களில் பெரும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது.

நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 2016ல் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதை நாம் பார்க்கிறோம். டிசம்பரில் உருவான நடா மற்றும் வர்தா புயல்களாலும் பெரிய அளவிற்கு மழையளவு அதிகரிக்கவில்லை, மாறாக விவசாயப் பயிர்களும் மரங்களும் சாய்ந்து அழிந்தன. வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டி விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, வாடிய பயிர்களைப் பார்த்து நொந்துபோய் மரணிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாம் செய்ய வேண்டியவை...

அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. மேலும், ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்கத்துடன் இணைந்து நாம் ஒவ்வொருவரும் இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த முயற்சி செய்யலாம். சரி... பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு தற்போது என்ன செய்வது? நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நடுவதே இதற்கான வழி!

நான் நடுவது என் கையில் உள்ளது, பிறர் நடுவது என் கையில் இல்லையே... இதனால் எப்படி மாற்றம் உண்டாகும் என வீணாக குழம்ப வேண்டாம். “நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்ற பாடல் வரியில் நல்லோர் என்பதற்கு பொருள் மரம் நடுபவர்கள் என்பதுதான் அர்த்தம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் சிலர் மரம் நட்டாலே, நம்மால் உலக மக்கள் அனைவரும் பலனடைவார்கள்.

ஈஷா பசுமைக்கரங்களுடன் இணையுங்கள்...

தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக் கரங்கள் திட்டத்தின் பணி முக்கியமானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது, ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்!

மேலும், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062