ஹெலிகாப்டர் ஒரு தனித்தன்மையான இயந்திரம். இயற்கையாகவும் சரி, மனிதனின் கண்டுபிடிப்புகளிலும் சரி, இந்த உலகில் உள்ள பறப்பனவற்றிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. சிறகுகள் இல்லாத இந்த இயந்திர பறவையில், காற்றியக்கவியலின் (aerodynamics) அடிப்படையான அம்சங்கள், மற்ற பறவைகள் அல்லது விமானங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது.

சத்குரு: நாம் பல்வேறு விதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், நம் நேரத்தை நிர்வகிக்க ஹெலிகாப்டர் இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும் என நினைத்தோம். இதன் மேலே உள்ள இறக்கைகள் சுழன்று காற்றை மேலே எழுப்புவதைவிட வேகமாக ஒரு ஆன்மீக புரட்சியை நாம் ஏற்படுத்த இருக்கிறோம். அடுத்த முறை சக்.. சக்.. சக்.. என ஹெலிகாப்டர் காற்றை மேலே தள்ளும் சப்தம் கேட்டால் எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கள்... உங்கள் வீட்டு மாடியில் நான் வந்து இறங்கினாலும் இறங்குவேன்...!