1. Home/
  2. Blog/
  3. Video/
  4. மந்திர மாவது நீறு

மந்திர மாவது நீறு

தேவாரம் என்பது 1200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றிய பக்திப் பாடல்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றிய சிவனைப் போற்றும் இப்பாடல்கள், தென்னிந்தியாவில் அப்போது பரவிய பக்தி இயக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றன. பெரும்பாலான பாரம்பரிய இசை முறைகளுக்கு முன் தோன்றிய தொன்மையான இசையமைப்பில் இப்பாடல்கள் பாடப்பட்டன. பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் இப்பாடல்களை, இந்த தேவாரப் பாடல்களை, இன்றைய உலகிற்கு ஓர் அர்ப்பணிப்பாக, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பாடியுள்ளார்கள். திருநீறு அல்லது விபூதி, எப்போதுமே நம் கலாச்சாரத்தில் போற்றப்பட்டது. ஒருநாள் நாம் இறப்போம் என்பதை நினைவூட்டுவது அதன் மகத்துவத்தைக் கூட்டுகிறது. பாரம்பரிய முறையில் மயானத்தின் சாம்பல் கொண்டு செய்யப்படும் திருநீறு, ஒருவரை அவருக்குள் உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் கொண்டதாகும். சம்பந்தர், "மந்திர மாவது நீறு" என திருநீற்றின் பல்வேறு நற்குணங்களைப் போற்றும் பாடலைப் பாடியபடியே, திருநீற்றை பூசி ஒரு அரசரின் மர்ம நோயையும் கூனையும் குணப்படுத்தினார் திருஞானசம்பந்தர் ஒரு இளம் துறவியாவார். இவர் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலயோகி. அவர் குழந்தையாக இருந்ததால் எதையும் போதிக்கமுடியவில்லை, எனவே தன் ஞானத்தை அழகிய பாடல்களாக வெளிப்படுத்தினார்.

video

Mar 1, 2020


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா?
ஆதியோகி ரதத்தை தங்கள் கைகளால் இழுத்தபடி, பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஈஷாவிலுள்ள ஆதியோகியை நோக்கி, பாத யாத்திரையாக வரும் சிவாங்கா பக்தர்களின் அனுபவ பகிர்வுகளை இந்த வீடியோவில் காணுங்கள்!
Mar 7, 2022
Loading...
Loading...
video  
கிராமத்தில் மேதைகளை உருவாக்கும் ஆசிரியர்கள்
கிராம குழந்தைகளின் கல்வித் தரத்தை, நகர கல்வித் தரத்திற்கு நிகராக உயர்த்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் கிராம சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
Sep 5, 2021
Loading...
Loading...
video  
ராக தரங்கா | இசை, யோகா மற்றும் தியானத்தின் ஒரு சங்கமம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இசை, யோகா மற்றும் தியானத்தை ஒருங்கிணைக்கும் 'ராக தரங்கா' எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம். புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்கள் இதில் இணைகிறார்கள். இந்நிகழ்ச்சியில் அனைவரும் நேரலையில் இணையலாம்
Jun 19, 2021
Loading...
Loading...