சத்குருவின் அளப்பரிய கருணையால் தன் உயிர் சக்தியை பல்வேறு வழிகளில் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்ற 14ம் தேதி, இல்லங்களில் குறிப்பிட்ட அதிர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட "நன்மை உருவம்" எனப்படும் இந்த சக்தி வாய்ந்த உருவம் சத்குரு அவர்களால் "சத்குருவுடன் 7% கூட்டு" வைத்துள்ள ஈஷாங்காக்களுக்கு வழங்கப்பட்டது.
7% ஈஷாங்கா கூட்டு பற்றி சத்குரு கூறும்போது மஹாபாரதப் போரில் 10,000 பேர் கொண்ட சேனை வேண்டுமா அல்லது கிருஷ்ணன் வேண்டுமா என்று கேட்கப்பட்டது, "ஆயுதம் ஏந்தாமல் நான் சும்மா இருப்பேன்," என்று சொன்ன கிருஷ்ணனைதான் அர்ஜுனன் தேர்ந்தெடுத்தான்.
"நானும் ஒன்றும் செய்ய மாட்டேன், சும்மாதான் இருப்பேன்," என்று சத்குரு கூறினாலும், சத்குருவுடன் ஒரு பாகமாக தன்னை சேர்த்துக் கொள்ளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக 1485 பேர் இந்நிகழ்ச்சியில் மிக ஆர்வமாக பங்கு கொண்டனர்.
சத்குரு இந்நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் எப்போதும் முட்டாள்தனத்தையே செய்கிறேன், நான் அறிவாளி போல் நடந்துக் கொள்வது இல்லை. இது நியாமான உடன்படிக்கை இல்லை, நீங்கள் 7% கொடுக்கின்றீர்கள் நான் மீதமுள்ள 93% கொடுக்கிறேன். இந்த 7% ஈஷாங்காவிற்கு நான் வாக்களித்து விட்டேன். இதனால் நான் இதனை செய்ய வேண்டி இருக்கிறது. இதன் பின்னால் சக்திநிலையில் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
7% என்பது பணத்தை பற்றியது அல்ல. ஒருவர் என்னுடையது என்பதிலிருந்து ஒரு 7% குறைத்தால், அந்த இடத்தை மிகப்பெரிய சாத்தியத்தால் நிரப்ப வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வாழ்வின் 7% என்னுடையது," என்றார்.
சத்குருவுடன் தம்மை ஒரு பாகமாக இணைத்துக் கொள்ளும் விதமாக ஈஷாங்காக்கள் "நன்மை உருவத்தின்" முன் அமர்ந்து மிகவும் சக்தி வாயந்த சாதனாவில் ஈடுபட்டனர். வீட்டில் தொடர்ந்து செய்ய வேண்டிய இந்த சாதானாவில் அதிர்வுகள் மிக்க மந்திர உச்சாடனத்தை தொடர்ந்து சத்குரு அவர்களுக்கு தீட்சை அளித்தார். தீட்சையின் போது வெளிப்பட்ட சக்திநிலையில் அவரது கருணை ஆதியோகி ஆலயம் முழுக்க நிரம்பியிருந்தது.
குழந்தை மனம் அறிந்து பால் ஊட்டும் தாய் போல யார் யாருக்கு என்னென்ன வேண்டுமோ அவரவர்க்கு தகுந்தாற் போல் சாதனாவை அளிக்கும் சத்குருவை எண்ணி கண்ணீரில் "கொடுக்கிறோம்" என்ற நிலை மறந்து "பெறுகிறோம்" என்ற உணர்வுடன் "நன்மை உருவத்தை" பெற்றுக் கொண்டனர் அந்த ஈஷாங்காக்கள்.
பொருள் சேர்க்கும் கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கும் இவர்கள், இந்த "நன்மை உருவம் சாதனாவால்" அதை இன்னும் சிறப்பாக செய்யும் சக்தியும் அருளும் பெற்றவர்களாய் மாறினாலும், பொருளாதாரத்தின் மீது இருக்கும் மோகம் மறைந்து உயிராதாரத்தை தொடுவதே வாழ்வின் பெரும் நோக்கமாக கொண்டு திரும்பி சென்றனர்.
ஈஷாங்கா என்றால் "ஈஷாவின் அங்கம்". "ஈஷாங்கா 7%" என்பது சத்குருவுடன் கூட்டு சேர்வது. அது, சத்குருவுடன் இணைந்து அவருடைய நோக்கங்களைப் பூர்த்தி செய்ய உங்களுக்குத் கிடைத்திருக்கும் ஒரு வாயப்பு. அதே நேரத்தில் உங்கள் வாழ்வில் அருள் மழை பொழிந்து அதன் மூலம் நீங்கள் உச்சபட்ச நல்வாழ்வினையும் அடைய முடியும்.
விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள
தொ.பே. 94425 04655/ 0422-2515378
இ-மெயில்: 7percent@ishafoundation.org