பொருளாதார அடிப்படையில் குறிப்பிட்ட சில மரங்களுக்கான சந்தை மதிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் தேக்கு, செஞ்சந்தனம் ஆகியவற்றுக்கு அடுத்து மதிப்புள்ள மரமாக கருதப்படுவது வேங்கை!

பொருளாதார அடிப்படையில் குறிப்பிட்ட சில மரங்களுக்கான சந்தை மதிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் தேக்கு, செஞ்சந்தனம் ஆகியவற்றுக்கு அடுத்து மதிப்புள்ள மரமாக கருதப்படுவது வேங்கை!

வேங்கை மருத்துவ குணம் வாய்ந்த மரமும்கூட. தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது இந்த வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். வேங்கை மரம் பற்றி அமையப்பெற்றுள்ள தேவாரப் பாடல் ஒன்று வேங்கை மரம் எவ்வளவு தொன்மைவாய்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறது. உலகில் இன்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள சர்க்கரை நோய்க்கு வேங்கை மரப்பட்டை நல்ல மருந்து என கண்டறியப்பட்டுள்ளது. தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதிலும் வேங்கை மரப்பட்டை நன்கு செயல்புரிகிறது. வேங்கை மரம் சுற்றுச்சூழலில் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பேருதவி புரிகிறது. கொழுத்தும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ குணத்தை இயற்கை இந்த மரத்திற்கு அளித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் வீட்டு உபயோக மரச்சாமான்களான கட்டில், நாற்காலி, மேசை போன்றவற்றை தயாரிப்பதற்கு வேங்கை மரங்கள் பயன்படுகின்றன. 10 ஆண்டுகளில் 15 அடி உயரம், 3 அடி சுற்றளவு என்று இந்த மரங்கள் வளர்கின்றன. 25 முதல் 30 ஆண்டுகளில் மரத்தில் வைரம் பாய்ந்திருக்கும். வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கர் கணக்கில் நடும்போது நன்கு வைரம்பாய்ந்த வேங்கை மரக்கட்டைகள் கன அடியைப் பொறுத்து லட்சக்கணக்கில் வருமானத்தை தரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கனிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். மேலும், வெக்கையை தணிக்கும் இதன் தன்மையைக் கருத்தில்கொண்டு வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் நாடுவதால் குளிர்ச்சியான சூழலைப் பெறமுடியும்.

கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் வேளாண்காடுகள் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

ஈஷா பசுமைக் கங்கள் திட்டம்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று -ரூ.7.00) வழங்கி வருகிறது.

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, மகோகனி, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள்.

தமிழகமெங்கும் 33 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளன. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062