சுவையான அவல் வகைகள் !
வீடுகளில் வழக்கமாக அவசரத்திற்கு செய்யும் உணவுகளில் அவல் என்பது நிராகரிக்கப்பட முடியாத ஒன்று. சாதாரணமாக, அரிசியில் தயாராகும் அவலை மட்டும்தான் நாம் உண்பது வழக்கம். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அவல் வகைகள் மிகவும் சுவையானவை, சத்தானவை. செய்து, ருசித்து மகிழுங்கள்!

ஈஷா ருசி

Subscribe
கம்பு அவல்
கம்பு அவல் - 100 கிராம் (ஊறவைத்தது)
காரட் - ஒன்று (துருவியது)
தேங்காய் - சிறிதளவு (துருவியது)
வாணலியில் கம்பு அவலைப் போட்டுத் தாளித்து, அதன் பின்னர் காரட் மற்றும் தேங்காய்த் துருவலைப் பச்சையாகச் சேர்த்துப் பரிமாறினால், தித்திப்பான கம்பு அவல் புசிக்கலாம்!
ராகி அவல்
ராகி அவல் - 100 கிராம் (ஊறவைத்தது)
முட்டைகோஸ் - 100 கிராம் (காரம் சேர்த்து மிகப் பொடியாக நறுக்கவும்)
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளித்து, காய்கறி வதக்கி, உப்பு சேர்த்து, ராகி அவலுடன் கலந்தால், ருசியான ராகி அவல் தயார்!
சோள அவல்
சோள அவல் - 100 கிராம் (ஊறவைத்தது)
காரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
முட்டைகோஸ் - சிறிதளவு
காரட், பீன்ஸ் மற்றும் முட்டைகோஸைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளித்துப்போட்டு, காய்கறிவேகும் வரை வதக்கி, பின்னர் சோள அவல் சேர்த்துக் கிளறினால், சோள அவல் ரெடி!