விருதுகள் - சத்குருவின் கவிதை
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்கள் சத்குருவிற்கு வழங்கினார். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், விருதுகள் அவருக்கு எத்தகையது என்பதை அழகான கவிதையாக சத்குரு வடித்துள்ளார். "வசந்தத்திற்கு அழகு சேர்ப்பதற்காக, எவராவது மலர்களுக்கு விருது வழங்குவார்களா?"
 
விருதுகள்

வசந்தத்திற்கு வண்ணமும் துள்ளலும் சேர்க்கும்
அழகான மலர்களுக்கு
எவரேனும் விருது வழங்குவார்களா.
நீங்கள் கற்பனையிலும் கண்டிராத இடங்களிலிருந்து
தேன் சேர்க்க
அயராது பாடுபடும் தேனீக்கு
எவரேனும் விருது வழங்குவார்களா.

பலர் மலர்களின் அழகை தவறவிட்டு
அந்த எளிய தேனீயின் அறுவடையை
கொள்ளையடிப்பர்.

மென்மையான அருளும் தித்திப்புமே
மிக உயர்ந்த விருதுகள்

Love & Grace

  0 Comments
 
Login / to join the conversation1