போலிகள் சிலர்...

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், "போலிகள் சிலர்..." என்ற தலைப்பில் சத்குரு வடித்த கவிதை உங்களுக்காக...
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், "போலிகள் சிலர்..." என்ற தலைப்பில் சத்குரு வடித்த கவிதை உங்களுக்காக...

போலிகள் சிலர் மத்தியில்
பல மாபெரும் முனிவர்கள்

லௌகீகத்தின் அபத்தமான தர்க்கத்தைத்
தொடர்ந்து முறியடித்தபடி இருக்கிறார்கள்.

ஞானிகளும் முனிவர்களும்
படுமோசமாக புறக்கணிக்கப்படுகிறார்கள்.

யோகிகளும் அதிசய மனிதர்களும்
அவமானத்தையும் உயிர்போகும் அபாயத்தையும் சந்திப்பார்கள்.

பொருளாதார சக்திகள் மேலோங்கும்
மனித மனமும் பண்டமாற்றுக்
கடைவீதியாக மாறும்.

உயிரின் மெல்லிய நறுமணம்
போலியான பொருளாதாரத்திலும் ஊழலிலும்
தொலைந்து போகக்கூடும்.

மனிதகுலம் காத்திருப்பதற்கான நேரமன்று
இது விழித்தெழுந்து விழிப்புணர்வின்
மென்மையான சக்தியை மேலெழுப்புவதற்கான நேரமிது.

பொருட்கள் சேகரிக்கும் பித்துணர்வை விடுத்து
விழிப்புணர்வாக வாழ்வதன் நிறைவை உணரும் நேரமிது.

மலிந்த சாராயத்தின் போதையிலிருந்து
கட்டுக்கடங்கா தெய்வீகத்தின் விசாலத்திற்குச் செல்லும் நேரமிது.

ஒருசிலரின் போலித்தனத்திலிருந்து
எல்லையில்லாததன் வெடித்துப்போகும் தன்மைக்குப்
பெயரும் நேரமிது.

அன்பும் அருளும்

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1