ஈஷாவிற்கு வசந்தகாலம்
ஐரோப்பாவில் இருந்து நமக்கு தன் அனுபவங்களை எழுதியிருக்கும் சத்குரு, கனியாகிக் கொண்டிருக்கும் தன் கனவுகளைப் பற்றியும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பதிந்திருக்கிறார். படித்து மகிழுங்கள்!
 
 
 
 

ஒரு அற்புதமான பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி இந்த வாரம் முடிவடைந்ததை அடுத்து, என் அமெரிக்க பயணங்களிலேயே மிக நீண்ட 8 வார பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பத் தயாராக இருக்கிறேன். இது மிகவும் பயனுள்ள பயணமாக இருந்தது. கடந்த சில வாரங்களில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம், அத்துடன் அதீத தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் பல முக்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

இவற்றில் மிக முக்கியமானவை, வரும் வாரங்களில் நாம் இணையதளம் வழியாக வழங்கும் “இன்னர் என்ஜினியரிங் ஆன்லைன்” வகுப்புகள். இவை ஒரு பெரிய அளவிலான துவக்கத்திற்காக தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்காக விசேஷமாக தொகுக்கப்பட்ட முதல் புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட உள்ளது. இது தவிர அமெரிக்காவின் டென்னிஸியில் இருக்கும் நமது iii-ல் (ஈஷா இன்ஸ்டிடியூட் ஆப் இன்னர் சயின்சஸ்) முதல் இன்னர் இன்ஜினியரிங் ரெட்ரீட் வகுப்பு நடைபெற இருக்கிறது. இவை நடந்தவற்றுள் சில. இன்னும் பல விஷயங்கள் நடைபெறுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டென்னிஸி மாகாணம் ஒரு சுற்றுலாத்தலமாக, பெரிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் நமது iii காண வேண்டிய ஒரு இடமாக வலியுறுத்தப்பட உள்ளது. இது மட்டுமல்லாது சற்றே ஓய்வான சூழ்நிலையில் மீதி காலத்தை அமைதியாக கழிக்க விரும்புவோருக்கும் டென்னிஸி மிக விருப்பமான இடமாக மாறி வருகிறது. அங்கு நாம் துவங்கியிருக்கும் ஆதியோகி ஆலய கட்டுமானப் பணிகள் 2014 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிறைவடைய உள்ளது.
அங்கு ஈஷா ரெஜுவினேஷன் மையம் (புத்துணர்வு மையம்) துவங்கவும் எண்ணம் இருக்கிறது. நூறு சதவிகிதம் இயற்கை பொருட்களைக் கொண்டு நாம் உருவாக்கிய நோமாஸ் கொசு விரட்டி மருந்து, எம்ஐடியின் (மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) தொழில் சார்ந்த ஆதரவை பெற்றுள்ளது. இதைத் தவிர இன்னும் பல்வேறு வழிகளில் கடந்த 8 வாரங்கள் மிக ஆக்கப்பூர்வமாக அமைந்தன.

அட்லாண்டா விமான நிலையத்திற்கு வந்த பின்னர்தான், லண்டன் விமானம் 7 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறதென தெரிந்தது. இந்த நேரத்தை அமெரிக்க மையத்தில் இருந்தவர்களுடன் செலவழித்திருக்கலாம், ஆனால் இப்போது அட்லாண்டா ஏர்போர்ட்டில், காலை 3.30 மணிக்கு விமானம் கிளம்பும் வரை...

மிகவும் பிரகாசமான, தெளிவான வானிலையுடன் லண்டன் என்னை வரவேற்கிறது. கோல்ஃப் விளையாட அருமையான வானிலை. 8 மைல் அளவிற்கு விரிந்து, கவர்ந்திழுக்கும் பச்சை வண்ணப் புல்வெளி நிறைந்த வெண்ட்வொர்த் கோல்ப் கோர்ஸில் விளையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி. சில தனிப்பட்ட சந்திப்புகள், பேச்சுகள் தவிர அங்கு நடைபெற்ற சத்சங்கத்திற்கு 600 பேர் வந்திருந்தனர்.

என்னைப் பார்க்கும் விதத்திலும், என்னை அணுகும் முறையிலும் இவர்களுக்கும் அமெரிக்காவில் இருந்தவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம். இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வரவிருக்கும் மாதங்களில் இன்னர் இன்ஜினியரிங் ஆன்லைன் வகுப்புகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் பெரிய அளவில் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப்பில் பல சந்திப்புகள் அடுத்தடுத்து இடைவெளி இல்லாது நிகழவிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே நான் திட்டமிட்டிருந்த பல முயற்சிகள் இப்பொழுது வடிவம் பெற்று, வரும் நாட்களில் முழுமையாய் மலரத் தயாராக இருக்கிறது; ஈஷாவிற்கு இது வசந்த காலம் போல் தெரிகிறது!

இப்போது மீண்டும் லண்டனுக்கு செல்கிறேன்; அதற்கு அடுத்த நாள் பெங்களூரு. அங்கு 2 நாள் இருந்துவிட்டு, 9 வாரங்களும், பல நகரங்களும், நிகழ்வுகளையும் தாண்டி நமது கோவை ஈஷா மையத்திற்கு வருகிறேன். நான், விமானங்கள் இன்றி பறக்க விரும்புகிறேன், இல்லை.. இல்லை.. விமானநிலையங்கள் இல்லாமல் பறக்க விரும்புகிறேன். பின் லேடனுக்கு பிறகு, விமான நிலைய அனுபவங்கள் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. நம் ஊரின் பருவமழை அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஒரு சில வரிகள் இங்கே...

கோடை மழை

கருமேகம்
வீங்கிப் போன முகத்துடன்
அழுவதற்கு தயாராய் இருக்கிறது...
அது அழுதுதான் ஆக வேண்டும் -
கண்ணீர்விட்டு தன் மூட்டையை கரைத்து, இலகுவாக

பூலோக உயிர் எல்லாம் கொண்டாட்டத்தில்
பாடி ஆடி மகிழ்கிறது...
இருக்காதா என்ன?
ஒவ்வொரு துளியும்
புத்துயிர் ஊட்டும் அமுதமாயிற்றே..!

Love & Grace

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் க்கு முன்னர்

Thanks for sharing wonderfull experience sadguru ji..