இங்கு - ஆம்! இங்கு
இந்தவார ஸ்பாட்டில், சொர்க்கத்திற்கான வாக்குறுதிகளும், வாழ்க்கைக்குப் பிறகு வரக்கூடிய வரங்களையும் எண்ணி இங்கு வாழ்வதையும் இப்போது வாழ்வதையும் மனிதர்கள் தவறவிடும் அவலத்தை கவிதையாய் வடித்துள்ளார் சத்குரு.
இங்கு - ஆம்! இங்கு
உடலின் திரவங்களிலிருந்து பிறந்து
மண்ணோடு முடியும் முடிவு உறுதியாயிருக்க
சொர்க்கத்தை சேரும் வாக்குறுதிகள்
முடிவுள்ள மாந்தரை மரணமில்லா அச்சுறுத்தலாக்கியுள்ளது.
நித்தியத்திற்கு உயிர்வாழும் கட்டுக்கதை புனைந்தவர்கள்,
இங்கு, இப்போது இருக்கும்
குறுகிய வாழ்வை மதியாதவராய் இருப்பர்.
இங்கு வாழ்வது, 'இதற்குப்பிறகு' இருப்பதன்
வாக்குறுதிகளால் சிதைகிறது. நீங்கள்
தெரிந்துகொள்ளச் சொல்கிறேன், இங்கு வாழாதவர்கள்
வேறெங்கும் வாழமாட்டார்கள்.
இங்கும் இங்கும் மட்டுமே
'இதற்குப்பிறகு' மறைந்திருக்கிறது.
Subscribe