புத்தரின் அருளும் மதிமயக்கும் நிலவும்

சில நாட்களுக்கு முன் புத்த-பௌர்ணமி அன்று ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்சஸில் சத்குருவுடன் நடந்த சத்சங்கத்தில் சத்குரு “புத்தம் சரணம் கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த ஆடியோ இந்த ஸ்பாட் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. ‘நிலவு’ எனும் அவரது புதிய கவிதையில், இப்பூமியில், அதிலும் குறிப்பாக பெண்களின் மீது துணைக்கோளாகிய நிலவின் தாக்கத்தை மேற்கோடிடும் அதேநேரம் அது நம் வாழ்விற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
 
 
 
 

 

நிலா

வானில் நீ இடம் மாறிக் கொண்டிருக்க
இப்பூமியில் நிகழும் மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை
சீறியெழும் கடலலைகள் ஒருபுறம் என்றால்
மாதவிடாய் காணும் மனிதர்களோ
மாறும் மனநிலையாலும், ஏற்படும் உணர்ச்சிப்பெருக்காலும்
திணறுவது மறுபுறம்.
இத்தவிப்பு எதற்காகவோ..?
அன்று மறைந்திருக்கும் உன் உருவைக் காண்பதற்கோ
அல்லது
உன் முழுமையை உணர்ந்திடவேண்டும் என்ற பரிதவிப்போ?
போலியான ஒருநாள் மறைவிற்குப்பின்
மதிமயக்கும் நிலவின் சுழற்சி மீண்டும் துவங்குகிறது -
பூமியில் நம் பிறப்பு நிகழ்ந்திட!

 

 

புத்த பௌர்ணமி 2018ல் நடந்த நிகழ்வில், "புத்தம் சரணம் கச்சாமி" மந்திரத்தை சத்குரு உச்சரித்த ஆடியோ இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் இம்மந்திரம் பற்றிப் பேசும்போது, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 3 அம்சங்களான, "புத்தா - ஞானி; தம்மா - அவர் வழங்கிய பாதை/செயல்முறை; மற்றும் சங்கா - உண்மைத் தேடுதலில் இருப்பவர்கள் அனைவரும்;" ஆகிய மூன்றுமே மிக முக்கியமானது என்று சத்குரு விளக்கினார். மேலும், "உண்மைத் தேடுதலில் இருப்பவர்களுடன் இருக்கும்போது, நீங்களும் அப்பாதையில் செல்பவராக ஆவீர்கள்" என்றும் சொல்கிறார்.

மந்திரத்தின் வரிகள்:

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1