ப-ர-த

கடந்த 4 வாரங்களில் தன் அன்பு மகளுடன் செலவழித்த நேரம் எத்தனை இனிமையாய் மாறியது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, தான் சிறு வயதில் கண்ட பரதநாட்டியம், தன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் இந்த நடனமுறையின் இயல்பைப் பற்றியும் இலயித்து போகிறார். படித்து மகிழுங்கள்!
 
 
 
 

கடந்த 4 வாரங்களில் தன் அன்பு மகளுடன் செலவழித்த நேரம் எத்தனை இனிமையாய் மாறியது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, தான் சிறு வயதில் கண்ட பரதநாட்டியம், தன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் இந்த நடனமுறையின் இயல்பைப் பற்றியும் இலயித்து போகிறார். படித்து மகிழுங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் 5 நாடுகளுக்குப் பயணமாகி, வெவ்வேறு நேர மண்டலங்களையும் பல்வேறு செயல்களையும் கடந்துள்ளேன். சற்றே களைப்படைந்தாலும், நான் இதனை மிகுதியாக ரசித்தேன். கிழக்கு கடற்கரையோரம் நான் செலவழித்த நான்கு நாட்கள் ஆக்கவளம் மிக்கதாய் அமைந்திருந்தது. குறிப்பாக வாஷிங்டனில் இருந்த நாட்களைக் குறித்துச் சொல்ல வேண்டும், தலைநகரத்திற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. சமூக அளவிலும் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் திட்டமிட்டதே இல்லை, அவை முற்றிலும் தேவைப்பட்டாலே ஒழிய. நான் மேற்கொண்ட பயணங்களில் லண்டன் பயணம் சற்றே களைப்பை தணிப்பதாய் இருந்தது. அங்கு வேலையும் சற்றே இலகுவாய் அமைந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராதேயுடன் தொடர்ச்சியாக மூன்று மாலைப் பொழுதுகளில் அவளுடைய நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததைச் சொல்ல வேண்டும். நான்காவது அரங்கேற்றம் ஒரு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி துவங்கும் முன் நடந்தது.

இம்முறை என்னுடைய அமெரிக்க, இங்கிலாந்து பயணம், தனிப்பட்ட முறையில் ஒர் அற்புதம் என்றே நான் சொல்வேன். பல வருடங்களுக்கு பிறகு ராதேயுடன் தொடர்ந்து 4 வாரங்கள் செலவிட்டுள்ளேன். ராதேயின் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே பதில் சொல்லும் தகப்பனாய், அவளுடன் இருக்க இயலாத தகப்பனாகவே இது நாள் வரை இருந்துள்ளேன், அது வியக்கத்தக்க பலன்களைக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தன்னை அற்புதமான இளம் பெண்ணாகவும் துடிப்பான நடனக் கலைஞராகவும் வடிவம் பெறச் செய்துள்ளாள்.

என் வாழ்வில், பரதநாட்டியக் கலை அவ்வப்போது தரிசனம் தந்துச் சென்றுள்ளது. எனக்கு 18 வயதாக இருந்தபோது, என் அத்தை என்னை கட்டாயப்படுத்தி ஒரு தெலுங்கு படத்திற்கு அழைத்துச் சென்றார். அதில் முக்கிய வேடமேற்ற பெண் நடிகை ஒரு பரதநாட்டியக் கலைஞர். அந்த நடனத்தில் இருந்த சூட்சுமங்கள், நெளிவு சுழிவுகள் என்னை வசீகரித்தன. அதனால் இந்தக் கலை வடிவத்தை கற்பது என நான் முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக, எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு தகுந்த ஆசிரியரும் கிடைக்கவில்லை நானும் என் மலையேற்றம், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், ஹாங் கிளைடிங் மற்றும் பல சாகசங்களிலிருந்து விடுபடவும் இல்லை. பார்வையாளர்களை என் 'தக்க-தை' யிலிருந்து காப்பாற்றி விட்டேன். பின்பொரு சமயம் விஜியும் இதற்கு முயற்சி செய்து தோல்வியுற்றாள்.

இந்த அற்புதமான கலை வடிவத்தை ராதே தேர்ந்தெடுத்து, அதனை நாட்டத்துடன் தன் முழு நேரத் தொழிலாக கொண்டிருப்பது என் நெஞ்சத்தைத் தொடுகிறது. நடனத்தின் நுட்பத்தாலும் தனக்கே உரிய சிங்காரத்தாலும் அவளால் பங்கேற்பாளர்களை வசீகரிக்க முடிகிறது.

ப-ர-தா, இதில் ப - உணர்வு சார்ந்த அறிவு. அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் அறிவாக இல்லாமல், அனைத்தையும் தழுவிக் கொள்ளும் அறிவு இது. கிழகத்திய கலாச்சாரத்தில், உணர்வு சார்ந்த அறிவையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர். காரணம் இந்த அறிவிற்கு அனைத்தையும் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்ற குணம் இருக்கிறது. இது வாழ்வு சார்ந்ததாகவும், மற்றவரை விட சிறப்பாய் இருப்பதை சாராததாகவும் உள்ளது. வெற்றியை நோக்கி மனிதன் போராடுவதைவிட, மனித வாழ்விற்கு என்ன சாத்தியம் உள்ளதோ அதன் வெளிப்பாடாய் அமைகிறது.

ர - ராகத்தை குறிக்கிறது, வாழ்வுடன் ஒத்திசைவில் இருப்பதைச் சொல்கிறது. இது (நம்மைக் குறித்து சொல்கிறார்) நம் வேலையல்ல, ஆனால் படைப்பின் மூலம் எதுவோ அல்லது தெய்வீகம் என்று எதை அழைக்கிறோமோ, அது செய்து வைத்துள்ள திட்டம். அறிதலின் உச்சத்துடன் நாம் ஒத்திசைவில் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

த - தாளத்தை குறிக்கிறது. நம்மை தனி மனிதராய் இயங்கச் செய்யும் அதே நேரம், நாம் அனைவரும் இதோ ஆடுகிறோமே ஒரு தாளத்திற்கு, அந்த ஒரு தாளத்தை அறிவது. நம் உயிர் வாழ்தலின் பிரபஞ்சத்து நிலையை உணர்வது இது. அதனை உணரும் அதே வேளையில் தனிப்பட்ட முறையில் நம் உயிர் துடிப்பிற்கும் வழிவகுப்பது பற்றியது இது.

இந்த நாட்டிய வடிவம் மட்டுமல்ல, இந்தக் கலாச்சாரமே இப்பெயரை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த தேசமே பாரத வர்ஷம் என்று அழைக்கப்பட்டது. பாரத வர்ஷம் என்றால் தாரை தாரையாக பொழியும் பாவம், ராகம், தாளம் என்று பொருள்.

இந்தியாவில் இரண்டே நாட்கள் தங்கிவிட்டு, தற்சமயம் சதியும் குழப்பமும் நிறைந்த பூமியில் இருக்கிறேன். இதோ இந்த ஸ்பாட்டை எழுதும் படலத்தில், என் காலைச் சிற்றுண்டி ஆறியே போய்விட்டது. என் பால்ய வயதிலிருந்தே சுடச்சுட உணவு உண்டு பழகியவனுக்கு இன்று ஆறிப்போன என் காலை உணவு ஏமாற்றத்தையே அளிக்கிறது.

அன்பும் அருளும்

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

AUM NAMASHIVAAYA.....!

6 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

அது எங்கே... மத்திய கிழக்கு பூமியா..?