20 ஜுன் 2016 அன்று ஐ நா சபையில், அதன் 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளைப் பற்றி சத்குரு அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சத்தை இந்த வார ஸ்பாட்டில் கொடுத்துள்ளோம். மேக்ஸ்வெல் கென்னடி அவர்களுடன் நடந்த பேட்டியின் போது இந்த நீண்ட கால இலக்குகளை இறுதியாக அடைவதற்கு யோகா எப்படியொரு முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்பதனை பற்றி சத்குரு அவர்கள் விளக்குகிறார்.

நாம் "நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்" என்று குறிப்பிடும் பொழுது, மனித நல்வாழ்விற்காக வறுமை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சுற்றுச்சூழல் போன்ற 17 வெவ்வேறு விதமான பிரச்சினைகளை கையாள்வதைப் பற்றி பேசுகிறோம். இந்த மாதிரி முயற்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. தனி ஒருவரைப் பற்றிய நோக்கம் இல்லாமல், நாம் இந்த உலகினை மாற்றி அமைக்க முயல்கின்றோம். இந்த உலகம் என்பது ஒரு வார்த்தை தான். ஆனால் அது நீங்களும் நானும் மட்டும் தான். நாம் கிரகிக்கும் விதத்தில், அனுபவிக்கும் விதத்தில், சிந்திக்கும் விதத்தில், உணரும் விதத்தில், செயல்படும் விதத்தில் நம்மிடையே மாற்றம் கொண்ட வர முடியவில்லை எனில், உலகினை எவ்வாறு மாற்ற முடியும்? நாம் இதற்காக பணம் சம்பாதிக்க முடியும், திட்டங்கள் தீட்ட முடியும், ஆனால் அவை அனைத்தும் மேலும் கீழும் போய்க்கொண்டு இருக்கும். பெரிய அளவில் தனி மனிதர்களிடம் மாற்றம் கொண்டு வரும் பொழுது மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும். இதனால் தான் யோகா முக்கியத்துவம் பெறுகின்றது. இன்று ஐக்கிய நாடுகள் சபை இந்த உலக யோகா தினத்தினை எடுத்துள்ளது. இது ஒரு மிக முக்கியமான படி.

Question: யோகா என்றால் உண்மையில் என்ன, அது எப்படி இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உதவ முடியும் என்பதை நீங்கள் விளக்க முடியுமா?

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

மனித நல்வாழ்விற்காக அனைத்துவிதமான விஷயங்களையும் செய்து வருகின்றோம். நீண்ட காலமாக இதற்காக மேல்நோக்கிப் பார்த்து வந்தோம், இது மனித சமூகத்தை சாதி மதம் மற்றும் பல பெயரால் பிளவுபடவே செய்துள்ளது. கடந்த 50 வருடமாக, ரொம்ப தீவிரமாக வெளிநோக்கி தேடி, இந்த கிரகத்தினை மொத்தமாக இல்லாமல் செய்து வருகின்றோம். நாம் பேசுகின்ற எல்லாவிதமான சுற்றுசூழல் சீர்கேடும், மனித நன்மைக்காக நடைபெறுகின்றவை தாம். இந்த கடந்த 100 வருடங்களில், கண்டிப்பாக மிகவும் வசதியாக, சொகுசாய் வாழ்கின்ற தலைமுறை நம்முடையது தான். ஆனால், மனிதர்கள் சந்தோஷமாகவோ அமைதியாகவோ இல்லை, எதனால் என்றால் நாம் அவர்களின் உள்தன்மை பற்றி கவனம் செலுத்தவில்லை.

மனித நல்வாழ்வினை அறிவியல் பூர்வமாக அணுகும்பொழுது அதனை யோகா என்கிறோம். யோகா என்பதன் அர்த்தம் "ஐக்கியம் அடைதல்". அது அறிவியல் பூர்வமாக உங்களது தனித்துவத்தின் எல்லைகளை துடைத்தழிப்பது. இதன் அர்த்தம் என்னவென்றால், தற்பொழுது நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்கும் பொழுது, இது நான், அது நீங்கள் - இது மிக தெளிவாக உள்ளது. ஆனால் நாம் ஒரே காற்றினை சுவாசிக்கின்றோம், நாம் இதே பூமியின் தயாரிப்பு தான். "நான்" என்று எதனை குறிப்பிடுகிறோமோ அது இந்த கிரகத்திலிருந்து வந்த ஒரு குமிழி மட்டும் தான். மேலும், இந்த குமிழி ஒரு நாள் வெடித்துவிடும். ஆனால் இந்த மிக குறுகிய காலத்தில், நாம் ஒன்றுகூட முடியாத அளவிற்கு நம்மை பிரித்து வைத்துள்ளோம். யோகா என்பது இந்த தனித்துவ எல்லையை அறிவு பூர்வமாகவோ, நம்பிக்கையின் அடிப்படையிலோ, கொள்கையின் அடிப்படையிலோ இல்லாமல் வாழ்வின் அனுபவ பூர்வமாக துடைத்தழிப்பது. மக்கள் எப்பொழுது "நான்" என்பதை அவர்களது ஸ்தூல/உடல் எல்லையை தாண்டி உணர்கிறார்களோ அப்பொழுது இந்த உலகிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை அடைவது மிகவும் சாத்தியமான ஒன்று. இப்பொழுது, நாம் ஒரு வழியில் தள்ள முயலுகின்றோம், ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அவர்களுடையது என்று கூட பார்க்காததால் அதன் எதிர் திசையில் தள்ளுகின்றார்கள்.

Love & Grace

குறிப்பு:
ஐ.நா சபையில் சத்குருவின் முழுமையான உரையை வீடியோவில் காணுங்கள்