யோக மரபில், பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி வரையான பூமியின் அக்ஷரேகைகள் விரியும் அந்தப் பகுதியை புனிதமானதாக நாம் கருதுகிறோம். தென் துருவத்தில் நிலம் அதிகம் இல்லாததால் வடதுருவத்தின் மேல் நமக்கு அதிகப்படியான கவனம் ஏற்படுகிறது. இதில் 11 டிகிரி மிக முக்கியமானது. அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லச் செல்ல அது தணிந்துவிடுகிறது. ஏன் அப்படி? இந்த பூமி அப்பிரதக்ஷணமாக சுழல்வதுதான் இதற்கு காரணம்.

சுழன்றுகொண்டே இருக்கிற ஒவ்வொரு பொருளும் மைய விலக்கு விசை (Centrifugal force) எனக்கூடிய ஒரு வித விசை சக்தியை உற்பத்தி செய்கிறது. இது பல வழிகளில் செயல்படுகிறது. நம்மில் பல பேருக்கு பரிச்சயமான ஒரு விஷயம் - விலக்கு விசை பம்புகள் (Centrifugal pumps), இவை கோவையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலும், ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலும் கூட "கோவையில் செய்யப்பட்டது" என்ற வாக்கியம் கொண்ட பம்புகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழன்று மைய விலக்கு விசையை உருவாக்கி, இந்த பம்புகள் வேலை செய்கின்றன. உருவாக்கப்படும் விசைசக்தியின் மூலம் கிணற்றிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. மின்சாரம் உற்பத்தி செய்யும் சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) என்னும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே போல, நம் பூமியும் சுழன்றுகொண்டே இருப்பதால் ஒரு மைய விலக்கு விசையை உருவாக்குகிறது. இந்த விசைசக்தி 11 டிகிரியில் உச்சமாக இருந்து 33 டிகிரி வரை நல்ல நிலையில் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த மைய விலக்கு விசையின் முக்கியத்துவம் என்ன? பூமியிலுள்ள அனைத்துமே அதைவிட்டு வெளியே செல்லத் துடிக்கின்றது. நீங்கள் இப்புவியில் நின்றாலும் சரி, உட்கார்ந்தாலும் சரி இந்த விலக்கு விசை உங்கள் மேல் ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக பூஜ்யம் முதல் 33 டிகிரி வரை உங்கள் உடலமைப்பு மேல் செங்குத்தான நிலையில் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக 11 டிகிரியில் 100 சதவிகிதம் செங்குத்தாக செயல்படுகிறது. அதாவது உங்கள் கால்களை பிடித்து உங்களை நாம் சுழற்றினால் உங்கள் தலையில் ஒரு பாய்ச்சலை நீங்கள் உணரலாம். ஏனெனில், இந்த மைய விலக்கு விசை உங்கள் உடலிலுள்ள இரத்தத்தையும், ஏன் உங்கள் சக்தியையும் கூட மேல் நோக்கி எடுத்துச் செல்கிறது. பூஜ்யம் முதல் 33 வரையிலான அக்ஷரேகையில் இதை நீங்கள் உணரலாம், குறிப்பாக 11 டிகிரியில் இது உச்சகட்டத்தில் உள்ளது.

தம்முடைய சக்திகளை உச்ச கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஏங்கும் ஒருவருக்கு இது ஒரு வரப்பிரசாதம். கோவை ஈஷா யோகா மையம் சரியாக 11 டிகிரியில் அமைந்துள்ளது. இதை நாங்கள் திட்டமிட்டு அமைக்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற விஷயங்களை கவனித்துக் கொள்ள நான் ஒரு கூட்டாளி வைத்திருக்கிறேன். அவன் என்னை என்றைக்குமே கைவிட்டதில்லை. உங்களை விட மிகப் பெரிய சாத்தியத்திற்கு உங்களை அர்ப்பணிப்பதில் உள்ள உன்னதம் இதுதான். நீங்கள் உங்கள் அறிவுத்திறனை மட்டும் வைத்து செயல்பட்டால் விலை, ரோடு வசதி, இடம், மற்றும் இதர அம்சங்களைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களைவிட உயர்ந்த விவேகம் உள்ளவரிடம் நீங்கள் சரணடைந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியதை மட்டும் செய்தால்போதும், அது மிகக் கச்சிதமாக அமைந்துவிடும்.

கோவை ஈஷா யோகா மையம் சரியாக 11 டிகிரியில் இருப்பதை நேற்றுதான் உணர்ந்தேன். பிறகு டென்னிஸியில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இடத்தைப் பார்த்தேன். அதுவும் 33 டிகிரி! இதை நான் நிகழ்த்தவில்லை. இப்படி கணக்கீடுகள் செய்து இடத்தை தேர்வு செய்து நாங்கள் அமைக்கவில்லை. அது அப்படி அமைந்துவிட்டது. தம்மைவிட உயர்ந்த சக்திக்கு தம்மை அர்பணிக்கிறவர்களுக்கு இப்படித்தான் வாழ்க்கை செயல்புரிகிறது. உங்கள் அறிவுக்கூர்மையை மட்டுமே வைத்து செயல்படுபவர்களுக்கு சில அற்ப விஷயங்கள் மட்டுமே நடைபெறும். ஏனென்றால், நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், இந்த பிரபஞ்சத்தின் இயல்பிற்கு முன் தூசியாகிவிடுவீர்கள்.

எனவே 11 டிகிரி அக்ஷரேகையில், பூமி சுழல்கிறபோது நீங்கள் மிகச் சரியாக செங்குத்தாக இருக்கிறீர்கள். இந்த இடத்தில் பூமியின் மைய விலக்கு விசையால், உங்கள் சக்தி நேராக தலைக்கு செலுத்தப்படுகிறது. உங்கள் தலையை நேராக வைத்து இந்த இடத்தில் உட்கார்ந்தால்போதும், உங்கள் சக்திகள் இயல்பாகவே தலைக்கு எழும்பிவிடும். 11 டிகிரி கோட்டில் பூமியில் பலப்பல இடங்கள் உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் சக்திகளை ஒருமுகப்படுத்துகிற நோக்கத்தோடு அமைப்புகள் உருவாகவில்லை. இந்த 11 டிகிரி அக்ஷரேகையில் எத்தனை தெய்வீக ஸ்தலங்கள் இருக்கின்றன என்று அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.

11 டிகிரியில் நாமும், 33 டிகிரியில் டென்னிஸி யோக மையமும்...

Love & Grace