ஞானமடைதல் என்றால் என்ன..?

விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே "ஞானமடைதல்" என்கிறோம்.

சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர் என்பது பொருள். தாயின் கருவறையில் இருந்து முதல் முறை பிறந்தது உங்கள் கவனம் இல்லாமல் நிகழ்ந்தது. உங்களுக்காக இயற்கை அதை நிகழச் செய்தது. நீங்கள் பிறக்கும்போது ஒருவிதமான பேரானந்தமும் கள்ளங்கபடமில்லாத தன்மையும் உங்களுடன் இணைந்தே பிறந்தது. ஒரு குழந்தை தன்னளவில் களங்கம் ஏதுமின்றி எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறது. ஆனால் விழிப்புணர்வுடன் இது நிகழாததால், யார் நினைத்தாலும் ஷண நேரத்தில் குழந்தையின் ஆனந்தத்தை சிதைத்து விட முடிகிறது. உங்களில் சிலருக்கு 12 அல்லது 13 வயதில் உங்கள் ஆனந்தம் பறிக்கப்பட்டிருக்கும், ஆனால் பலருக்கும் 5 அல்லது 6 வயதிலேயே ஆனந்தம் பறிபோயிருக்கும். அவர்களின் ஆனந்தநிலை சிதைக்கப்படுவதால், இன்று 5 அல்லது 6 வயது குழந்தைகள் கூட படபடப்பாக இருக்கிறார்கள். சுற்றி இருக்கும் மக்கள் குழந்தைகளின் மீது கொண்டுள்ள ஆளுமையை பொறுத்தே, தங்கள் ஆனந்தத்தை குழந்தைகளால் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

முழுப் பதிவையும் ஈஷா ப்ளாகில் வாசிக்கவும்