சுனாமி பேரழிவு மீட்பு பணி

2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலை பேரழிவின்போது, ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வத் தொண்டர்கள் குழு உடனடியாக பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டது!

2004ல் தெற்கு ஆசியாவை பெரிதும் பாதித்த சுனாமியில் தமிழக கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுனாமி மீட்புக் குழுக்களில் முதற்குழுவாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விரைந்துவந்த ஈஷா அறக்கட்டளையின் குழு, விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.