ஈஷா ருசி

உணவுவகைகளின் ருசியும், சமைக்கும் விதமும், சமைப்பவரின் கைமணமும் மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர், ஏன் வீட்டூக்கு வீடு கூட மாறுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவ்விதத்தில் பிற மாநிலத்தின் உணவு வகைகளில் இரண்டு இங்கே உங்களுக்காக.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுரைக்காய் முட்டியா (குஜராத்தி)

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1
கடலை மாவு - 1 டம்ளர்
கோதுமை மாவு - 1 குழிக்கரண்டி
அஸ்கா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டம்ளர்
கொத்துமல்லி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோடா உப்பு - லு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை எள் - 50 கிராம்
எண்ணெய் - லு கப்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும். சுரைக்காய் கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்து மல்லி, சோடா உப்பு, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும். உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும். வெந்தவுடன், அதன் மேல் எண்ணெய், கடுகு வெள்ளை எள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். புதினா, மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.

கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி

சுரைக்காய் முட்டியா, Surakai mutiya

தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் - 1 பூ
பட்டாணி - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
கடுகு - தேவையான அளவு

பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
தனியா (மல்லி) - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
வர மிளகாய் - தேவையான அளவு
பட்டை - 25 கிராம்
இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு

(இதையெல்லாம் பொன்நிறமாக வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.)

செய்முறை :
காலிபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிதம் செய்து சிறிதாக வெட்டப்ப்பட்ட காலிபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாண¤ போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி. சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.