மாணவர்கள் படைக்கும் பசுமை பாரதம்!

சேலத்தில் நடந்து முடிந்த பசுமைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, ஈஷாவில் ஏற்றப்பட்ட 1008 விளக்குகள் - இவற்றைத் தாங்கி வருகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
 

சேலத்தில் நடந்து முடிந்த பசுமைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, ஈஷாவில் ஏற்றப்பட்ட 1008 விளக்குகள் - இவற்றைத் தாங்கி வருகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...

டிசம்பர் 5, 2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் சேலம் மாவட்ட கல்வித்துறையும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமும் இணைந்து சேலத்தில் பசுமைப் பள்ளி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு “பசுமை பாரதம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், கவிதைப்போட்டியும் நடத்தியது. இதில் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கான சுற்றுச்சூழல் ஒருங்கினைப்பாளர் திரு.சிவக்குமார், தலைமை தாங்கி விழாவைத் துவக்கி வைத்தார். சேலம் பசுமைப் பள்ளி இயக்கத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வரும் 2015, ஜனவரி 5ம் தேதி சேலத்தில் நடைபெறும் "ஒரே நாளில் 9 லட்சம் மரக்கன்றுகள்" நடும் நிறைவு விழாவில் மேதகு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களால் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். சேலம் பசுமைப்பள்ளி இயக்கத்தில் சுமார் 450 பள்ளிகள் பங்கேற்று ஒவ்வொரு பள்ளியிலும் 2000 மரக்கன்றுகள் வீதம், 9 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறுவதற்கான ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஷாவில் கார்த்திகை தீபம்

தீபத் திருநாளான டிசம்பர் 5ம் தேதியன்று, ஈஷா யோகா மையத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது. தியானலிங்கம், லிங்கபைரவியில் 1008 விளக்குகளையும், பிற இடங்களும் பிரகாசிக்கும் வண்ணம் எண்ணற்ற விளக்குகளையும் ஏற்றி தீபத் திருநாளைக் கொண்டாடினர் ஈஷா ஆசிரமவாசிகள்.

காஞ்சிபுரத்தில் தேவி பூஜை

காஞ்சிபுரத்தில் தேவி பூஜை, Kanchipurathil devi poojai

காஞ்சிபுரத்தில் தேவி பூஜை, Kanchipurathil devi poojai

நேற்று பௌர்ணமியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் லிங்கபைரவி பூஜை நடத்தப்பட்டது. 70 தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றிணைந்து, 108 விளக்குகள் ஏற்றி தேவியை வழிபட்டனர். அதன் படத் தொகுப்பு இங்கே...

ஹதயோகா நிறைவு நாள்

இந்த வருட குருபௌர்ணமியன்று சத்குரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட 6 மாத "பாரம்பரிய ஹதயோகா" நிகழ்ச்சி, நேற்று (டிசம்பர் 6) நிறைவு பெற்றது. இதில் கலந்துகொண்ட 76 பங்கேற்பாளர்கள் இனி வரும் நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஹதயோகா வகுப்புகளை மக்களுக்கு வழங்குவார்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1