சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் "அலை" இசைத் தொகுப்பிலிருந்து, வாரம் ஒரு பாடலை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகிறோம். சென்ற வாரம் வழங்கப்பட்ட "ஒரு அந்நியர் வந்தார்" பாடலைத் தொடர்ந்து இந்த வாரம் சூப்பர் ஹிட்டான "கனலே...! கனலே...!"


தமிழ்நாட்டுப் பாரம்பரிய நாட்டுபுற இசை பாணியில் புனையப்பட்ட ‘கனலே கனலே’...

அள்ளலும் துள்ளலுமாய் ஆடி வரும் இந்த இசை, இதயத்தை மென்மையாக வருடி இரத்த நாளங்களை புத்துணர்வு கொள்ளச் செய்து, மண்ணில் பாதங்களை நிற்கவிடாமல் தாளங்களுடன் சேர்ந்து நம்மை குதிக்க வைக்கிறது.

மஹாசிவராத்திரி அன்று அரங்கேறிய இந்த பாடல் லட்சோப லட்சம் மக்களை துள்ளி குதிக்க வைத்தது.

சத்குருவின் அருகாமையை உணர்ந்த பலருக்கும், அது வார்த்தையால் விவரிக்க முடியாத அனுபவம்!

உள்நிலையில் பெரும் அக்னி பிழம்பாய், தன்னை விழுங்கிடும் அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருந்தாலும் அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் மௌனத்தில் இருந்திருக்கின்றனர்.

"இதோ அந்த நெருப்பு!" என்று

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“கனலே கனலே“ என்ற அழகிய வார்த்தைகளால் குருவை வர்ணிக்கிறார் பாடலாசிரியர்.

ஆட்டத்திற்கு நடுவில் நம்மை சிந்திக்கவும் வைத்து, அதே சமயத்தில் உண்மையைச் சந்திக்கவும் வைத்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கலைமாமணி திரு. மரபின் மைந்தன் முத்தையா.

ஒரு சீடன் தன் குருவை ஆழமாக உணர்ந்து நன்றியின் வெளிப்பாடாய் உதிர்த்த இந்த வார்த்தைகளுடன் சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?

அதிரும் இசை ஆட வைக்கிறதென்றால் உதிரும் வார்த்தைகள் ஆனந்தத்தில் கண்ணீரை வரவழைக்கிறது.

வாழ்க்கை என்கிற இந்த முடிவிலா நெடுந்தூரப் பயணத்தில் கரை சேர்த்திட ஒருவர் வந்தார் என்றால் துள்ளி குதித்திட வேண்டியது தானே!


இதோ துள்ளலான பாடல் வரிகள் உங்களுக்காக...

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போல நீ நுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்

கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே

எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லா திசையிலும் நடந்தேன் நடந்தேன்
எத்தனை தவங்கள் எப்படி செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேன் அடைந்தேன் (கள்ளங்கள்)

மூச்சினில் கலந்தது உந்தன் கருணை
பேச்சினில் வருவது உந்தன் கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதை தருவதும் உந்தன் மகிமை (கள்ளங்கள்)

ஆசையின் முடிவில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணம் பயணம்
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனது எத்தனை தூரம் தூரம் (கள்ளங்கள்)

பாதையின் முடிவில் உனது முகம்
பார்த்ததும் தெளிந்தது எனது மனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததும் தொலைந்தது வினையின் கணம் (கள்ளங்கள்)

 



Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/