கொல்லைப்புற இரகசியம் தொடர்

உமையாள் பாட்டியின் வீட்டில் கிரிக்கெட் பார்த்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்பது சின்ன வயதிலிருந்தே எனக்கொரு நம்பிக்கையாக இருப்பதால், தீபாவளிக்காக வீட்டில் சுட்ட முறுக்கு, அதிரசம், குலோப் ஜாமூன் சகிதமாக பாட்டியின் வீட்டிற்கு புறப்பட்டேன்.

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால்ல கலந்து இரவுல படுக்கும்போது சாப்பிடுவது, மன அழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், நல்ல தூக்கத்தையும் தரும்.

ஜாதிக்காய், Jathikai Uses in Tamil

“என்னப்பா… பாகிஸ்தான் கிட்ட இந்தியா T20 போட்டியில முதல்முறையா தோத்ததால சோகமா இருப்பேன்னு நினைச்சா, நீ தீபாவளி குஷியில பலகாரம் சகிதமா வந்திருக்க?!” பாட்டி வாடிக்கையாக தனது பகடியை என்னிடம் ஆரம்பித்தாள். இருந்தாலும், உமையாள் பாட்டி கிரிக்கெட், அரசியல், சினிமா, ஆன்மீகம் என அனைத்திலும் அப்டேட்டாக இருப்பது என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

“விளையாட்டுன்னா வெற்றியும் தோல்வியும் சகஜம்தானே பாட்டி… அதுக்கு எதுக்கு நாம வருத்தப்படணும்?! சரி சரி… உங்க வீட்டுல செஞ்ச தீபாவளி பலகாரம் கொஞ்சம் கொடுங்க, நான் டேஸ்ட் பண்ணி பார்க்கிறேன்!” பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்பட்ட பலகாரத்தை ருசி பார்க்க ஆவலானேன்

ஜாதிக்காய், Jathikai Uses in Tamil

“இந்தாப்பா… இதை சாப்பிட்டு பாரு!” பார்த்தாலே சுவைகூட்டும் ஒரு ருசியான அல்வா போலத் தெரிய, நானும் அந்த கிண்ணத்தை வாங்கி சாப்பிட்டேன். அது நிச்சயம் அல்வா கிடையாது, ஆனால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அது ஜாதிக்காய் லேகியம் என்பதை அறிந்தபோது, பாட்டியிடம் ஜாதிக்காய் பற்றி கேட்டறிந்தேன்.

ஜாதிக்காய் பயன்கள் (Jathikai Uses in Tamil)

ஜாதிக்காய், Jathikai Uses in Tamil

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்ல ஜாதிக்காய் அதிகமா கிடைக்கும். ஜாதிக்காயோட கனி, ஊறுகாயா பயன்படும்; அதற்குள் இருக்கிற விதைதான் ஜாதிக்காய்.

நரம்பு வன்மைக்கு ஜாதிக்காய்:

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால்ல கலந்து இரவுல படுக்கும்போது சாப்பிடுவது, மன அழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், நல்ல தூக்கத்தையும் தரும். 

விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜாதிக்காய்:

குழந்தையின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த மருந்து. 

அஜீரணம் நீங்க ஜாதிக்காய்:

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்து பொடி செஞ்சு, உணவுக்கு முன்ன 3 சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தா, வயித்துல ஏற்படும் வாயுத்தொல்லை, அஜீரணம் நீங்கும்.

வயிற்றுப் போக்கு நீங்க ஜாதிக்காய்:

கிருமிகள் மூலமா வரும் அத்தனை வயிற்றுப் போக்குக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தா இருக்கும்.

பல் வலிக்கு ஜாதிக்காய்:

பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும்.

தாகம் தணிக்கும் ஜாதிக்காய் ஊறல் நீர்:

வாந்தி வயிற்றுப் போக்கால ஏற்படுற தண்ணீர் தாகத்தை தணிக்கிறதுக்கு ஜாதிக்காய் ஊறல் நீர் பலனளிக்கும்.

ஜாதிக்காய், Jathikai Uses in Tamil

 

உமையாள் பாட்டி ஜாதிக்காயின் நன்மைகளைப் பற்றி கூறி முடித்தபோது இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது எனக்கு உற்சாகம் தரும் தீபாவளி பரிசாக அமைந்தது!