புட்டு... புட்டு !
வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களையே சாப்பிட்டு, பலருக்கும் புதிதாக எந்த ஸ்நாக்சும் பிடிபடி மாட்டேன் என்கிறது. இங்கே உங்களுக்காக புதிய ஸ்நாக் வகைகளை வழங்குகிறோம். முயற்சித்துப் பாருங்கள்...
ஈஷா ருசி
வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களையே சாப்பிட்டு, பலருக்கும் புதிதாக எந்த ஸ்நாக்சும் பிடிபடி மாட்டேன் என்கிறது. இங்கே உங்களுக்காக புதிய ஸ்நாக் வகைகளை வழங்குகிறோம். முயற்சித்துப் பாருங்கள்...
பட்டர் ஃப்ரூட் சப்ஜி
Subscribe
தேவையான பொருட்கள்
பட்டர் ப்ரூட் - 1
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
லெமன் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளரி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பட்டர் ப்ரூட், உப்பு, மிளகுத்தூள், வெள்ளரி சாறு, லெமன் சாறு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து, விரும்பினால் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும். இது சப்பாத்தி, ப்ரெட், பூரிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
சோயா அவல் புட்டு
தேவையான பொருட்கள்
மெல்லிய சோயா சீவல் - ½ கப்
லேஸ் அவல் - ½ கப்
துருவிய வெல்லம் - 1½ கப்
துருவிய தேங்காய் - ½ கப்
வேக வைத்த துவரம் பருப்பு - ½ கப்
உப்பு சுவைக்கேற்ப
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
உடைத்த முந்திரிப் பருப்பு - 10
நெய் (அ) நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
½ டீஸ்பூன் நெய் விட்டு சோயாவை நன்கு வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். பின்னர் அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். இரண்டு பொடி வகைகளையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, ½ கப் இளம் சூடான தண்ணீரில் உப்பைக் கலந்து மாவில் தெளித்து பொலபொலவென இருக்கும்படி கிளறி வைக்கவும்.
பதமாக (குழையாமல்) துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரைத்து அதனைப் பாகாக்கி, அதில் கிளறி வைத்துள்ள மாவு, துவரம் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். இறுதியில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, நெய் சேர்த்து உதிரியாக கிளறி இறக்கவும். இந்த புட்டு மிகுந்த சத்துடையது.