வார்த்தைகளால் விவரிக்க முடியாத, புலன்களுக்கு புலப்படாத ஒரு சக்தி நம் உயிரைத் தொட்டு மீண்டும் மீண்டும் நம்மை அவ்விடம் நோக்கி ஈர்க்கும் அற்புத அனுபவத்தை ஈஷா யோகா மையத்தில் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.

இங்கு வருபவர்கள் சக்தி வட்டத்தின் மையமாக இருக்கும் தியானலிங்கத்தின் அதிர்வுகள் தம்மை தியானத்தில் ஆழ்த்துவதையும், சக்திரூபமாக இருக்கும் லிங்கபைரவியின் தாய்மை ஒருவரை வெடித்திடும் ஆனந்த நிலைக்குக் கொண்டு செல்வதையும் உணராமல் தப்பிக்க இயலாது. இந்த கோவில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட விதம் அத்தகையது.

நம் இந்தியக் கலாச்சாரத்தில் கோவில்களில் உள்ள விக்கிரகங்களுக்கு சக்தியூட்டப்படும் நிகழ்வை பிரதிஷ்டை என்கிறோம்.

பிரதிஷ்டை எனப்படுவது பலவித விஞ்ஞான முறைகளில் செய்யப்படுகிறது. ஈஷாவில் செய்யப்படும் பிரதிஷ்டை யோகியின் உயிர்சக்தியை கொண்டு செய்யப்படுகிறது. இதனால்தான் இங்கு சக்திநிலை மிகத் தீவிரமாக இருக்கிறது.

சத்குருவின் இருப்பில் பல லட்சக்கணக்கானோர் இந்தத் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

உயிரை ஊடுவிச் செல்லும் தீக்கனல் போன்ற இந்த மனிதரின் தீவிரம் பிரதிஷ்டையில் இருந்த தியான அன்பர்களை வெடித்திட செய்திருக்கிறது.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த சூழ்நிலையில் இருப்பதே பலர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த அனுபவம் தியானலிங்க பிரதிஷ்டையிலும் லிங்கபைரவி பிரதிஷ்டையிலும் நிகழ்ந்திருக்கிறது.

வரும் டிசம்பர் 21, 22 தேதிகளில் மூன்று ரசலிங்கங்களைக் கொண்ட சூர்யகுண்டம் எனப்படும் ஆண்களுக்கான தீர்த்தகுண்டம் சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இது ஈஷா யோகா மைய வளாகத்தில் நடைபெறப் போகும் கடைசி பிரதிஷ்டை என்பதும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாருங்கள்! தன் உயிரையே அடுத்த தலைமுறைக்கு பதித்து வைக்கும் இந்த அற்புத நிகழ்வில் இந்த மகா ஞானியுடன் இருக்க ஒரே ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

21 டிசம்பர் 2012, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல்
22 டிசம்பர் 2012, சனிக்கிழமை இரவு 11 மணி வரை

இடம்: ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோவை

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்

14 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியும். ஈஷா யோகா வகுப்பு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முன்பதிவிற்கு...

மேற்கு மண்டலம்

கோவை, ஈரோடு, சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்
கோவை 94434 94434; சேலம் 83000 45000; ஈரோடு 83000 15000;

இமெயில் - tatabad@ishafoundation.org

கிழக்கு மண்டலம்

திருச்சி, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்
83000 21000;

இமெயில் - zao.east.accounts@ishafoundation.org

தெற்கு மண்டலம்

நாகர்கோவில், மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்
83000 58000; 83000 59000;

இமெயில் - iyp.south@gmail.com

வடக்கு மண்டலம்

சென்னை, வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்
83000 11000; 044 24333185;

இமெயில் - zao.north@ishafoundation.org